Vaisagh : Rant முதல் துணிவு வரை - இந்த 2கே கிட்ஸ் 'மனதின் குரல்' யார்?

2017ம் ஆண்டு வைசாக் அவருடைய நண்பர்களோட பண்ணின கான்சர்ட்ஸ் ஹிட் ஆக தொடங்குது. ரசிகர்கள் சொல்லிகிற அளவு மக்கள போய் சேரும் போது கொரோனாவும் லாக் டவுனும் அவர மொத்தமா 2 வருஷம் முடக்கிப் போட்டது.
Visagh : Rant முதல் துணிவு வரை - இந்த 2கே கிட்ஸ் 'மனதின் குரல்' யார்?
Visagh : Rant முதல் துணிவு வரை - இந்த 2கே கிட்ஸ் 'மனதின் குரல்' யார்?Twitter
Published on

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல...

இந்த பாடல் தனுஷின் மயக்கம் என்ன படத்தில் இடம் பெற்றது. இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமான பாடல்கள் சினிமா முழுவதும் திணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் சோகத்துக்கும் குரல் வடிவம் கொடுத்த இந்த பாடல் கொண்டாடப்பட்டது.

ஓட ஓட பாடலை இந்த கால இளைஞர்களுக்காக 2கே கிட்களுக்காக கொடுப்பதற்காக பிறந்து வந்தவர் தான் வைசாக், அவரது பாடல் ரான்ட் - Rant.

Rant பாடலில் பிரபலமாகி இப்போது தல அஜித்தின் துணிவு படத்திற்கு பாடல் வரிகள் எழுதுமளவு வளர்ந்திருக்கும் வைசாக் குறித்து தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

ஈரோடு டு சென்னை

வைசாக் ஈரோடு மாவட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான். சிறு வயதிலிருந்தே இவருக்கு பாடல்கள் தான் உயிர். குழந்தைத் தனமாக 10ம் வகுப்பிலேயே சொந்த பாடல்கள் பாட ஆரம்பித்துவிட்டார். நண்பர்களுக்கு அவருடன் கழிக்கும் எல்லா மாலையும் 'வைப் டைம்' தான். பள்ளி விழாக்களிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார்.

இசை மீதான ஆசையே "கடலுக்குள்ள மீனா வாழ ஆசை" என்ற சமீபத்திய பாடல்வரை அவரை அழைத்து வந்திருக்கிறது. முதலில் ஈரோட்டிலிருந்து சென்னை அழைத்து வந்தது.

கல்லூரியும் காதலும்

கல்லூரிக்காக சென்னை வந்த வைசாக் காதலிலும் விழுந்திருக்கிறார். அவரது முதல் பாடலுக்கு வரிகள் எழுத அவரது காதலியும் உதவியிருக்கிறார். ஆனால் அந்த காதல் கல்லூரி தாண்டி நிலைக்கவில்லை. இசை மீதிருந்த அதீத காதல் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் காதல் பிரிந்தது. ஒரு வேளை வைசாகின் பாடல்களில் இருக்கும் சோகத்தின் பிறப்பிடமாக அந்த காதல் இருந்திருக்கலாம்.

ஒருத்தர் புலம்பல கேக்றது கடுப்பான விஷயம் தான். ஆனா என் ரன்ட கொஞ்சம் கேளுன்னு அதையே ரசிக்க வச்ச வைசாக், இந்த மாதிரி சோகங்களையும் கண்ணீரையும் எவ்வளவு ரசிச்சிருக்கணும்!

வைசாக் அவருடைய கல்லூரி படிப்பை முடிக்காமலே இசைத்துறைக்கு வந்துவிட்டார்.

ஹிப் ஹாப் தமிழாவும் வைசாக்கும்

தமிழ் இண்டிபெண்டன்ட் மியூசிக் அப்டின்னு ஒரு சமூகம் இருப்பது பலருக்கும் தெரிய வந்தது கோயம்புத்தூர்காரரன ஆதியுடைய வளர்சிக்கு பிறகு தான்.

கல்லூரிகள், கான்செர்ட்ஸ்ல பாடும் போதே அவருக்கு ரசிகரா இருந்திருக்கார் வைசாக். "வாடி புள்ள வாடி" பாடல் ஆதிக்கு ஹிட் ஆனது ஒட்டு மொத்த இண்டிபென்டன்ட் கலைஞர்களுக்குமே ஊக்கமா இருந்தது. அதுல அதிகமாவே இன்ஸ்பையர் ஆன வைசாக் இண்டிபென்டன்ட் துறையில காலடி எடுத்து வைக்கிறார்.

சமீபமா ஹிப் ஹாப் ஆதி கூடவே சின்ன பையன் பாடலும் வெளியிட்டார்.

2017ம் ஆண்டு வைசாக் அவருடைய நண்பர்களோட பண்ணின கான்சர்ட்ஸ் ஹிட் ஆக தொடங்குது. ரசிகர்கள் சொல்லிகிற அளவு மக்கள போய் சேரும் போது கொரோனாவும் லாக்டவுனும் அவர மொத்தமா 2 வருஷம் முடக்கிப் போட்டது.

கேபர் வாசுகி, சியோனர், ஆஃப்ரோ

'எல்லா கெட்டதுலையும் ஒரு நல்லது இருக்கும்'

இப்படி பெரியவங்க சொல்ற மாதிரி ஒரு விஷயம் நடந்தது. லாக்டவுனில் வைசாக் மாதிரியே முடங்கி கிடந்தா எல்லா மனசுக்கும் இண்டிபெண்டன்ட் பாடல்கள் அரவணைப்பை கொடுத்தது.

அதுவரை யாருன்னே தெரியாத கேபர் வாசுகி, சியோனர் பத்தி எல்லாம் மக்கள் இன்டர்நெட்ல பேச ஆரம்பிக்கிறாங்க. அப்படியே 2020 முடியும் போது அசல் கோளார், ஆஃப்ரோ, தென்மான்னு நிறைய கலைஞர்கள் மேல வெளிச்சம் விழுந்தது இந்த வெளிச்சம் வைசாக்குக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்க... இந்த முறை அவரது பாய்ச்சல் அதிகமானது.

Visagh Songs

ஒரு நாள் நல்ல கிரியேடிவான நிலைல பாட்டுக்கு வரி கேக்க நண்பர் விக்னேஷ் ஶ்ரீகாந்த்துக்கு போன் செய்திருக்கிறார் வைசாக். அப்போ எதிர்மறையா கெட்ட மூட்ல இருந்த விக்னேஷ் இப்போ பாட்டு எழுத முடியாது, "மனநிலை மல்லாக்க கிடக்குது" அப்டின்னு மெசேஜ் பண்ணியிருக்கார். இந்த வரிய புடிச்சு உருவாக்கப்பட்டது தான் நாம கொண்டாடித் தீர்த்த நம் சோகத்துக்கு தோள் கொடுத்த ரன்ட் பாடல். வைசாகின் ஒவ்வொரு பாடல் உருவாக்கத்துக்கு பின்னாலும் இப்படி ஒரு கதை இருக்கிறது.

அதுக்கு முன்னாடியே பலருக்கும் தெரியவந்த பாடல் மைராண்டி. அந்த பாடல் தான் காக்கா காதையாக வெளிவந்தது.

"செக்கும் இல்லாத லைஃபு ஏது
பொலம்பாத மாமா நீ சில்லா வுடு" என்ற இரண்டு வரிகள் சோகத்தை தள்ளிவைக்க போதுமானது.


"பேக்கா நா அலஞ்சிருக்கேன்
அர வேக்காடா தான் இருந்திருக்கேன்" எனும் போது கடந்த காலம் எப்படியிருந்தால் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இது தான் வைசாக் செய்யும் மேஜிக்.

இதைத் தொடர்ந்து வெளியான எதுவும் கிடைக்கலன்னா பாடலும் தற்போது ஹிட்டாகி வருகிறது.

"கணக்கு போட்டு வாழ
ஒரு கால்குலேட்டர் தேடுறேன்" என்ற வரிகளை சாதாரணமாக 2கே கிட்களின் உளறல் என எடுத்துக்கொள்ள முடியாது தானே.

வைசாக் இளைஞர்களின் வாழ்க்கை பிரச்னை மட்டும் இல்லாமல் சில காதல் பிரச்னைகளையும் பேசியிருக்கிறார். அப்படி ஒரு பாடல் தான் நீ மட்டும் தான்!

"நீ மட்டும் தான் நிறைஞ்சிருக்க கண்ணுகுள்ளார

திசை மறந்த கிளி பொல ஆனே உன்னால" என இந்த பாடலின் வரிகளும் மனதைத் துளைக்கும்.

கதைகள் கேக்க ஆசையா, வீசும் காத்து, ராங்வே என வைசாகின் இன்னும் பல பாடல்களை நாம் கேட்கவிருக்கிறோம். இப்போது துணிவு படத்திலும் இவர் பாடல்கள் எழுதியிருப்பது ரசிகர்களுக்கு போனஸாக இருக்கிறது. சோகம் கடந்து சந்தோஷம், கொண்டாட்டம் என பலவித எமோஷன்களை இனி வைசாகிடம் இருந்து எதிர்பார்ப்போம்.

Visagh : Rant முதல் துணிவு வரை - இந்த 2கே கிட்ஸ் 'மனதின் குரல்' யார்?
HBD பிரதீப் குமார்: தேம்பும் மனங்களை தேற்றும் குரல்; இந்த பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com