தமிழ் சினிமாவின் இக்காலத்தைய பாடகர்களில் மிகவும் முக்கியமான மற்றும் ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமானவர் பிரதீப் குமார். அவரது குரல் வழி வரும் ராகங்கள் கொள்ளைக் கொண்ட மனங்கள் கோடி எனலாம். ஆசை ஒரு புல் வெளியினால் இசையுலகால் தேடப்பட தொடங்கிய பிரதீப் கபாலி, 96, மேயாதமான் படங்களுக்கு பிறகு நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கினார்.
கபாலி, "வானம் பார்த்தேன்" பாடல் கேட்கும் போது கண்கள் குளமாவது நிச்சயம். 96 படத்தில் கரைவந்த பிறகே பாடலை கேட்கும் போது நாமே ராமாக ஆழ்கடலுக்கும் பாலைவனத்துக்கும் அழைத்துச் சென்றது பிரதீப் குமாரின் குரல். பாடல்கள் பாடுவது மட்டுமின்றி இசையமைப்பிலும் தனித்து நிற்கிறார் பிரதீப். வாழ், குதிரை வால் படங்களின் பின்னணி இசையே அதற்கு சாட்சி.
நிச்சயம் ஒரு நாளில் உலகப் புகழ்பெறப் போகும் ப்ரதீப் குமாரின் சில தனித்துவமான பாடல்கள் இங்கு தொகுக்கப்படுகிறது.
வழி பார்த்திருந்தேன் அட்டகத்தி படத்தின் க்ளைமாக்ஸ். இது ப்ரதீப் குமாரே அவரது மனைவியை மனதி வைத்து எழுதிய பாடல் என்பது பலரும் அறியாத உண்மை.
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி... பாரதியாரின் வரிகளை பாடல்களாக்கும் முயற்ச்சியில் உருவான இந்த பாடல் அதிக ரசிகர்களை சென்றடையாவிட்டாலும் பிரதீபின் சிறந்த பாடல்கள் வரிசையில் இடம் பெறக் கூறியது என்பது மறுப்பதற்கில்லை.
உன் கண்ணே ஆயிரம் கதை பேசுதே... மொழி படத்துக்காக உருவாக்கப்பட்டது. பல மேடைகளில் லைவாக பாடப்பட்ட இப்பாடல், கடந்த வருடம் அவரது யூடியூப் பக்கத்தில் வெளியானது. பிரதீபின் பிரத்யேக ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் நிச்சயம் இந்த பாடல் இருக்கும்.
எனக்குள் ஒருவன் படத்தில் இடம் பெற்ற பூ அவிழும் பொழுதில் பாடல் One of the Underrated of Pradeep Kumar என்றே சொல்லலாம்.
பிரதீப் குமாரின் மிக ஃப்ரெஷ்ஷான பாடல் வரையாத ஓவியம். கூர்மன் எனும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல் செவிகளின் வழியாக இரத்தத்துக்கு புத்துணர்ச்சியை பாச்சும் என்றால் மிகையாகாது.
குதிரை வால் படத்துக்காக பிரதீப் பாடிய பறந்து போகின்றேன் பாடல் கண்களை மட்டும் மூடிக்கொண்டால் நம்மை வேற்றொரு உலகத்துக்கு கடத்திவிடும் என்பதை ஐயமில்லாமல் கூறலாம்.
பல தசாப்தங்களுக்கு முன்பு வெளியான பாடலைக் கூட அவரது மேஜிக்கில் இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் விதமாக கொடுக்கக்கூடியவர் பிரதீப் என்பதற்கு இந்த காணொளி சான்று. பாடலை நீங்களே கேட்டு அனுபவித்துக் கொள்ளுங்கள்.
"உடலுக்குள் உயிர் எங்குள்ளதென்பது... அதிசயம்" என்பது வைரமுத்துவின் வரி. மனதுக்குள் புகுந்து அந்த உயிரை துணுக்காக தூக்கி வருடி கொடுத்து அதன் காயங்களுக்கு மருந்திடும் பிரதீப் குமார் ஓர் அதிசயம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp