AR Rahman: ”AI வந்தாலும் வேலை போகாது” ரஹ்மான் காணொளியை பகிர்ந்த எழுத்தாளர் விநாயக முருகன்

ஐந்து வருடங்களுக்கு மேலேயும் நீங்க ஒரேபோல் செக்குமாடு போல அதே வேலையை செய்து அதே சம்பளத்தை வாங்கிகொண்டு இருந்தால் உங்களிடம்தான் ஏதோ கோளாறு என்று அர்த்தம் - விநாயக முருகன்
AR Rahman: ”AI வந்தாலும் வேலை போகாது” ரஹ்மான் காணொளியை பகிர்ந்த எழுத்தாளர் விநாயக முருகன்
AR Rahman: ”AI வந்தாலும் வேலை போகாது” ரஹ்மான் காணொளியை பகிர்ந்த எழுத்தாளர் விநாயக முருகன்Twitter
Published on

செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று பயப்படவேண்டாம் என தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இவரது காணொளியை எழுத்தாளர் விநாயக முருகன் பகிர்ந்திருக்கிறார்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். எம் எஸ் விஸ்வநாதன், சங்கர் கணேஷ், இளையராஜா போன்றவர்கள் கொடிகட்டி பறந்த காலத்தில், தனித்துவமாக, தொழில்நுட்ப உதவியுடன் திரை இசையை வழங்கியவர்.

இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம், ரோஜா. இந்த படத்திற்காக இவர் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, மற்றும் ஃபிலிம்ஃபேர் விருது, மற்றும் சிறந்த இசை அமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றை வென்றார்.

AR Rahman
AR RahmanTwitter

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடு, இசையில் என்ன புதுமை செய்யலாம் என்று பல எக்ஸ்பரிமெண்ட்களை செய்து வருபவர் ஏ ஆர் ரஹ்மான்.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஏ ஐ பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

“1984-ல் முதன்முதலில் நான் கம்ப்யூட்டர் கொண்டுவந்தப்ப எல்லாரும் இசையமைப்பாளர்களுக்கு வேலைபோயிடுமுன்னு சொன்னாங்க. ஆனா அப்படி நடக்கலை. AI வேலையை குறைக்கும். ஆனா வேலை எல்லாம் போகாது" என்றார்.

செயற்கை நுண்ணறிவு நம்மை இன்னும் முன்னோக்கி, மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. இயந்திரத்தால் இதை செய்ய முடிகிறது என்றால், இதை விட பெட்டராக நாம் என்ன செய்யலாம் என்பதை தான் ஏ ஐ கற்றுத்தருகிறது என்றார் ரஹ்மான்.

AR Rahman: ”AI வந்தாலும் வேலை போகாது” ரஹ்மான் காணொளியை பகிர்ந்த எழுத்தாளர் விநாயக முருகன்
பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை : அவர் பேசிய உரையின் சுருக்கம்

”தவிர ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நீங்க Career-ல அடுத்த கட்டத்த நோக்கி போகணும்” என்றும் கூறினார்.

“நாம ஒரு இடத்துல comfortable ஆகிட்டா, அங்க இருந்து மேல போக முடியாது. அடுத்த கட்டத்தை நோக்கி காலெடுத்து வைக்க எப்போதும் தயாரா இருக்கணும்” என்றார் ரஹ்மான்.

ஒரு மாற்றம் நம்மை முன்னேற செய்யும் என்றால், அதனை சரியாக கணித்து, வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

பொருளாதார ரீதியாக, மன ரீதியாக, உடல் அற்றும் உளவியல் ரீதியாக வளர்ச்சி இருத்தல் அவசியமாகிறது.

இந்த காணொளி குறித்து எழுத்தாளர் விநாயக முருகன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

“ஐந்து வருடங்களுக்கு மேலேயும் நீங்க ஒரேபோல் செக்குமாடு போல அதே வேலையை செய்து அதே சம்பளத்தை வாங்கிகொண்டு இருந்தால் உங்களிடம்தான் ஏதோ கோளாறு என்று அர்த்தம்” என்று குறிப்பிட்டிருந்தார் எழுத்தாளர்.

விநாயக முருகன் நீர், வளம், சென்னைக்கு மிக அருகில் போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார்

AR Rahman: ”AI வந்தாலும் வேலை போகாது” ரஹ்மான் காணொளியை பகிர்ந்த எழுத்தாளர் விநாயக முருகன்
AR Rahman: ”இந்தி வேண்டாம் தமிழில் பேசுங்க” மேடையில் மனைவியை செல்லமாக அதட்டிய இசைப்புயல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com