பூனை வளர்ப்பவரா நீங்கள்? அது குறித்த இந்த 5 ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

உங்களுக்கு பூனைகளை பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். எதுவாக இருந்தாலும் பூனைகளைப் பற்றிப் பேசுவதற்கு முன் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பூனைகள் குறித்த இந்த 5 ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?
பூனைகள் குறித்த இந்த 5 ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?NewsSense
Published on

செல்லப்பிராணி என்றாலே நம் ஊரில் ஒன்று நாய் அல்லது பூனை தான். அதில் பூனைகள் யாருக்கும் கட்டுப்படாது, அவை மனிதர்களை மதிப்பதில்லை, சுயநலமானவை, திருட்டுத்தனமானவை என நீங்கள் கேட்கும் பல தகவல்கள் பொய் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு நாய் பிடிக்கலாம் அல்லது பூனை பிடிக்கலாம். எதுவாக இருந்தாலும் பூனைகளைப் பற்றிப் பேசுவதற்கு முன் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு பூனை மகிழ்ச்சியாக இருக்கும்போது சீறுகிறது

பூனைகள் சீறும் போதும், அணைக்கும் போதும் அது விளையாட அழைக்கிறது அல்லது பாசம் காட்டுகிறது என்று தான் நாம் நினைக்கிறோம். தொலைக்காட்சிகளிலும் அப்படித்தான் காட்டப்படுகிறது. ஆனால் அப்படியில்லை. அவை பயப்படும் போதும், பதட்டமாக, நோய்வாப்பட்டதாக, வலியிருந்தால் என பல நேரங்களில் இப்படி சீறும். மரணத்துக்கு அருகில் இருக்கும் நேரத்திலும் பூனைகள் இப்படிச் செய்யும் என்றும் கூறுகிறார்கள். பூனை சீறினாலோ அல்லது கட்டியணைத்தலோ அதன் உடல் மொழியை கவனிக்க வேண்டும்.

Cats
CatsCanva

பூனைக்கு தண்ணீர் பிடிக்காது

நாய்கள் தண்ணீரை வெறுப்பது போல, மனிதர்கள் வெறுப்பது போல, சில நேரங்களில் பூனைகள் தண்ணீரை வெறுகின்றன.

பூனைகள் குறித்த இந்த 5 ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?
சுனாமி, பூகம்பம் ஏற்படுவதை முன்பே கணிக்கும் விலங்குகள் - ஓர் ஆச்சர்ய தகவல்

பூனைகளை பழக்கப்படுத்த முடியாது

வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒன்று, அவற்றுக்கு உணவளித்து, விளையாடி அதனுடனே இருப்பவர்கள். மற்றொன்று அவற்றை பழக்கப்படுத்தி அவற்றுடன் விளையாடி மகிழ்பவர்கள். இரண்டாவது வகையினருக்கு பூனைகள் சரிபட்டு வராது நாய்கள் தான் சரி எனக் கூறுவர். ஆனால் அது தவறு.

பூனைகளையும் பழக்கப்படுத்த முடியும். ஆனால் சில ட்ரிக்குகளை உபயோகித்து அதைச் செய்து விட முடியாது. அதற்கு பொறுமை வேண்டும். பூனைகளால் சொல்வதை கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும். ஆனால் நீங்கள் ஒரு சர்க்கஸ் காட்டுபவர் போல நடந்துகொண்டால் முடியாது.

பயிற்சி கொடுக்கப்பட்ட பூனைகளை ஆன்லைனில் அதிகமாக பார்க்கமுடியும்.

Cat
CatCanva

பூனைகள் எப்போதும் சரியாக கால்களால் தரையிறங்கும்

இது உண்மையல்ல. பூனைகளுக்கு விழுந்து அடிபடவும் செய்யும். இதில் சுவரஸ்யமானது என்னவென்றால் பூனைகள் அதிக உயரத்தில் இருந்து விழுந்தால் அடிபடாமல் இருக்கும் என்பது தான்.

அதிக உயரத்தில் இருந்து குதிக்கும் போது காற்றிலேயே அவை தன்னிச்சையாக சுழன்றுவிடும். பின் காற்றை உள்வாங்கிக் கொண்டும் எளிதாக இறங்கிவிடுகிறது. ஆனால் உயரம் குறைவாக இருந்தால் இது நடக்காது பூனைக்கும் அடி சறுக்கும்!

தயவு செய்து இதனை வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்!

பூனைகள் குறித்த இந்த 5 ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?
அமெரிக்கா : ஒரு நாள் மேயராக பதவி வகித்த பூனை - எப்படி சாத்தியம் ?

பூனைகளுக்கு உடற்பயிற்சி அவசியம்

பூனை வளர்க்கும் பலர் இந்த கட்டுக்கதையை நம்புகின்றனர். இதனால் குண்டான சுறுசுறுப்பில்லாத பூனைகள் தான் அதிகமாகின்றன. நம்மைப் போலவே பூனைகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலத்திற்கு உடற்பயிற்சிகள் அவசியம்.

கர்ப்பமாக இருப்பவர்கள் பூனையை அருகில் வைத்திருக்கக் கூடாது, பூனைகள் பால் மட்டுமே குடிக்கும், பூனைகளுக்கு 9 உயிர் இருக்கும் என இது போன்ற கட்டுக்கதைகளுக்கு அளவே இல்லை!

பூனைகள் குறித்த இந்த 5 ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?
நாய் வளர்க்குறீங்களா? இந்த 10 விஷயத்தைக் கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com