"சந்தோஷமா இல்லையா? 10 நாள் லீவ் எடுத்துக்கோ" - கவனம் பெரும் சூப்பர் மார்கெட் முதலாளி!
"சந்தோஷமா இல்லையா? 10 நாள் லீவ் எடுத்துக்கோ" - கவனம் பெரும் சூப்பர் மார்கெட் முதலாளி!vikatan

"சந்தோஷமா இல்லையா? 10 நாள் லீவ் எடுத்துக்கோ" - கவனம் பெரும் சூப்பர் மார்கெட் முதலாளி!

"எல்லா ஊழியர்களும் மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கும் சூழ்நிலை வரும். அப்படி வரும்போது விடுமுறை எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் ஒவ்வொரு ஊழியருக்கும் தேவை." என சூப்பர் மார்கெட் வார விழாவில் அவர் பேசியுள்ளார்.

சீனாவை சேர்ந்த சில்லறை வியாபாரி ஒருவர் ஊழியர்களுக்கு "Unhappy Leaves" என்ற என் மகிழ்ச்சியின்மைக்காக விடுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

யு டாங்லாய் என்ற நபர் பாங் டாங் லாய் என்ற சூப்பர் மார்கெட்டை நடத்தி வருகிறார். இவரிடம் வேலை செய்யும் ஊழியர்கள் வேலை அழுத்தம் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக ஆண்டுதோறும் சீனாவில் கடைபிடிக்கப்படும் சூப்பர் மார்கெட் வாரத்தில் இதனை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் பணியாளர்களுக்கு 10 நாட்கள் அதிகமாக விடுமுறை அளிக்கப்படும்.

"எல்லா ஊழியர்களும் மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கும் சூழ்நிலை வரும். அப்படி வரும்போது விடுமுறை எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் ஒவ்வொரு ஊழியருக்கும் தேவை." என சூப்பர் மார்கெட் வார விழாவில் அவர் பேசியுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஊழியர்களே எடுத்துக்கொள்ளலாம் என்றும் நிர்வாகம் மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இவரது இந்த சிந்தனை சீனா முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இவர் ஒரு நல்ல முதலாளி என்றும் இந்த நடைமுறை நாடுமுழுவதும் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

2021ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, சீனாவில் 65 விழுக்காட்டுக்கும் மேல் ஊழியர்கள் பணியிடத்தில் பதட்டமாகவும் மகிழ்ச்சி இல்லாமலும் சோர்வாகவும் இருக்கின்றனர்.

இதற்கு குறைந்த ஊதியம், சிக்கலான தனிப்பட்ட உறவுகள் மற்றும் கூடுதல் நேரம் பணியாற்றும் கலாச்சாரம் ஆகியவையே காரணம்.

சூப்பர் மார்கெட் முதலாளியான யு, தொடர்ந்து ஊழியர்களை அதிகநேரம் வேலைவாங்கும் முதலாளிகளின் கலாச்சாரத்தை விமர்சித்து வருகிறார். மேலும் முதலாளிகளுக்கு முன்னோடியாக அவரிடம் பணியாற்றுபவர்களை ஒரு நாளுக்கு 7 மணி நேரம் மட்டுமே வேலை வாங்குகிறார். வார இறுதி நாட்களில் விடுமுறை தவிர்த்து ஆண்டுக்கு 40 நாட்கள் விடுமுறையும் அளிக்கிறார்.

நிறுவனம் பெரியதாக வளருவதை விட ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பது அவசியம் என்கிறார். ஊதியமும் சீனாவின் சராசரி நிறுவனங்களை விட அதிகமாக வழங்குகிறார்.

"சந்தோஷமா இல்லையா? 10 நாள் லீவ் எடுத்துக்கோ" - கவனம் பெரும் சூப்பர் மார்கெட் முதலாளி!
sick லீவ் கேட்டு கொடுக்காத மேனேஜர் : வேலையை resign செய்த ஊழியர் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com