நாய்களுக்கு கருப்பு வெள்ளை தான் தெரியுமா? - நாய்கள் பற்றிய 7 Myths

நாய்களால் என்ன முடியும் என்ன முடியாது என்பதில் பலருக்கும் தெளிவான புரிதல் இல்லை. நாய் வளர்ப்பவர்களும் கூட நாய்களைப் பற்றி பல விஷயங்கள் தெரியாது.
Dog
DogTwitter
Published on

உலகிலேயே அதிகமாக வளர்க்கப்படும் செல்லபிராணி என்றால் அது நாய்கள் தான். நன்றி, காவல், கீழ்படிதல் என நாய்களின் பண்புகளை புகழ்ந்து கூறுவர் டாக் லவ்வர்ஸ். சில நேரங்களில் அது அதிகப்படியானதாக இருந்தாலும் உண்மையில் நாய்களுடன் இருக்கும் போது தான் அந்த உணர்வைப் புரிந்துகொள்ள முடியும்.

நாய்களால் என்ன முடியும் என்ன முடியாது என்பதில் பலருக்கும் தெளிவான புரிதல் இல்லை. நாய் வளர்ப்பவர்களும் கூட நாய்களைப் பற்றி பல விஷயங்கள் தெரியாது. அவ்வாறு நாய்கள் குறித்து சில விஷயங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

அப்படி நாய்கள் பற்றி பொதுவாக நம்பப்படும் 12 கட்டுக்கதைகளைப் பார்க்கலாம்.

நாய்கள் கருப்பு வெள்ளை நிறங்களை மட்டும் தான் பார்க்குமா?

இது பெரிய அளவில் நம்பப்படும் ஒரு கட்டுக்கதை. உண்மையில் சில நிறங்களை நாய்களால் பார்க்க முடியும். ஆனால் நம்மைப் போல பிரித்து அறிய முடியாது. குறைவான நிறங்களை மட்டுமே அறியும் நாய்கள் நிறக்குருடு உள்ள மனிதர்கள் போலவே பார்க்கும்.

அவற்றால் நீல நிறத்துக்கும் மஞ்சள் நிறத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்க முடியும். ஆனால் சிகப்பும் பச்சையும் அவற்றுக்கு சாம்பல் நிறம் போல தான் தெரியும்.

நாய்கள் குற்ற உணர்ச்சியை முகத்தை வைத்து கண்டுபிடித்து விட முடியுமா?

நாய்கள் எதாவது தவறாக செய்து விட்டால் முகத்தை குற்ற உணர்ச்சியுடன் அல்லது பாவமாக வைத்துக்கொள்வது போலத் தோன்றும் பல நாய் உரிமையாளர்கள் இப்படி நினைக்கின்றனர்.

உண்மையில் நாய்களுக்கு தாங்கள் செய்வது தவறு என்பதே தெரியாது.

ஆனால், உரிமையாளர்கள் அதற்காக திட்டினாலோ, மோசமான உணர்வை வெளிப்படுத்தினாலோ அவர்களை அமைதிப்படுத்துவற்காக முகத்தை அவ்வாறு வைத்துக்கொள்ளும்.

நாய்கள் நோயுற்றிருந்தால் புற்களை உண்ணுமா?

நாய்கள் அப்போது தான் சாப்பிட்டு விட்டு வந்திருந்தாலும், பல சமயங்களில் புற்களை மேய்வதுண்டு. நாய்கள் நோயுற்றிருந்தால் அல்லது தவறுதலாக எதையாவது சாப்பிட்டிருந்தால், ஊட்டச்சத்துக்கு குறைபாடு இருந்தால் இப்படி செய்யும் எனப் பலரும் நம்புகின்றனர்.

ஆனால் உண்மையில் அப்படி எந்த காரணமும் இல்லை. நாய்களுக்கு புற்களின் சுவை பிடிப்பது தான் அதற்கு காரணம். நாய்களுக்கு நுரையீரல் புழு பிரச்னை ஏற்படாது என்றால் இதில் எந்த பிரச்னையும் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் நாய்களுக்கு ஏழு வயது அதிகரிக்கிறதா?

நாய்களின் வயதைக் கணக்கிடுவது ஏழால் பெருக்கி கண்டுபிடிக்கும் படி எளிதானது அல்ல.

நாய்களில் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு சமயத்தில் பருவமடையும். மரபணு மற்றும் அளவு குறித்தும் வயது மாறுபடும்.

நாய்கள் குட்டியாக இருந்தால் அவற்றுக்கு மெதுவாகவே வயதாகும். எனவே அவை அதிக காலம் வாழக்கூடும்.

Dog
நாய் வளர்ப்பு : நாம் அறிய வேண்டிய சில விஷயங்கள்

வயதான நாய்களுக்கு எதையாவது கற்றுக்கொடுக்க முடியுமா?

வயதான நாய்களுக்கு புதிதாக எதையும் கற்றுக்கொடுக்க முடியாது என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. நாய்க்குட்டிகளுக்கு மிக எளிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொடுத்து விட முடியும் என்பதும் உண்மைதான்.

நாய்களுக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுக்க அதற்கு உத்வேகம் அளிக்கக் கூடியவற்றைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக அதிக சுவையான உணவுகளைக் கொடுக்கலாம்.

பயிற்சியை எளிதாகவும் சுவாரஸ்யமானதாகவும் ஆக்கினால் வயதான நாய்களுக்கும் கற்றுக்கொடுக்க முடியும்.

Dog
ஆயிரக்கணக்கான மனிதர்களை காத்த நாய் குட்டி - ஒரு சூப்பர் ஹீரோ கதை!

நாய்களுக்கு கொஞ்சம் சாக்லெட் கொடுக்கலாம்

பலரும் தாங்கள் சாக்லெட் சாப்பிடும் போது சிறிதளவு நாய்களுக்கும் கொடுக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால் இது மிகவும் தவறானது.

நாய்களுக்கு சாக்லேட் கொடுப்பது மிக ஆபத்தானது. சாக்லெட்டின் வகை மற்றும் அளவைப் பொருத்து ஆபத்தின் தீவிரம் அதிகரிக்கும்.

தியோப்ரோமின் என்ற வேதிப்பொருள் நாய்களிடம் நச்சுத் தன்மை கொண்டது. இது சாக்லேட்டில் அதிகம் இருக்கிறது.

பெரிய நாய்களுக்கு சிறிதளவு வெள்ளை சாக்லெட் கொடுக்கலாம். ஆனால் அதுவும் ரிஸ்க் தான்.

Dog
நாய் வளர்க்குறீங்களா? இந்த 10 விஷயத்தைக் கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க

நாய்க்கு தலைவலி இருந்தால் பாராசிட்டமல் அளிக்கலாமா?

மனிதர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் மனிதர்களுக்கு மட்டுமே. நாய்களுக்கு பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் மாத்திரைகள் தீங்கு விளைவிக்கும்.

உதாரணமாக பாராசிட்டமல் மாத்திரையை நாய்கள் சாப்பிட்டால் அவற்றுக்கு அல்சர், கிட்னி அல்லது நுரையீரல் பாதிப்புகள் ஏற்படலாம்.

நாய்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது கால்நடை மருத்துவரையே நாட வேண்டும்.

Dog
அரிய நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய் - காப்பாற்ற ஒரு ஊரே கூடிய நெகிழ்ச்சி சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com