டீ மாஸ்டர், புரோட்டா மாஸ்டர்களுக்கு போட்டியாக வரும் ரோபோ மாஸ்டர்

ரோபோ ஏற்கனவே முட்டை ஆம்லெட் சமைக்க பயிற்சி பெற்றிருந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரோபோவில் பல்வேறு அளவு உப்புத்தன்மையை அடையாளம் காணக்கூடிய சென்சார் ஒன்றைச் சேர்த்துள்ளனர்.
டீ மாஸ்டர், புரோட்டா மாஸ்டர்களுக்கு போட்டியாக வரும் ரோபோ மாஸ்டர்
டீ மாஸ்டர், புரோட்டா மாஸ்டர்களுக்கு போட்டியாக வரும் ரோபோ மாஸ்டர் Pexels
Published on

திரைப்படங்களில் வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்களை பார்த்திருப்போம். இன்றும் இந்த ரோபோட்டிக்ஸ் பல்வேறு துறைகளில் பெரும் முதலீட்டுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிற்சில இடங்கள், மிகச்சில துறைகளில் அமலுக்கு வந்திருந்தாலும் எதிர்காலத்தில் பெரும் பணிகளை ரோபோக்கள் மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இயந்திரங்கள் விரைவாக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றன. மற்றும் முன்பை விட வேகமான விகிதத்தில் மனிதர்கள் செய்யும் வேலைகளை செய்கின்றன. அந்த வகையில் மனிதர்களுக்கு மாற்றீடாக ரோபோக்கள் மாறி வருகின்றன.

இந்த திசையில் புதிய வளர்ச்சி உணவைச் சுவைக்கக் கூடிய ஒரு ரோபோ. அது உணவை ருசிப்பது மட்டுமல்ல, அது உணவைத் தயாரிக்கவும் செய்யும்! மேலும் ஒரு மனிதன் உணவை உண்ணும் போது மெல்லும் பல்வேறு நிலைகளில் உணவின் சுவையை அடையாளம் காணும் திறனை ரோபோவும் உணர்கிறது.

ரோபோ சமையல்காரரை, ரஷ்ய கணிதவியலாளரும் கணினி விஞ்ஞானியுமான மார்க் ஓலினிக் உருவாக்கியுள்ளார். கேம்ப்ரைடு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரோபோவுக்கு உணவு சமைக்கும் போது அதை சுவைக்க பயிற்சி அளித்துள்ளனர்.

இந்த ரோபோ ஏற்கனவே முட்டை ஆம்லெட் சமைக்க பயிற்சி பெற்றிருந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரோபோவில் பல்வேறு அளவு உப்புத்தன்மையை அடையாளம் காணக்கூடிய சென்சார் ஒன்றைச் சேர்த்துள்ளனர்.

ரோபோ பின்னர் மெல்லும் செயல்முறையின் மூன்று வெவ்வேறு நிலைகளில் துருவப்பட்ட முட்டை துகள்களின் ஒன்பது வெவ்வேறு மாறுபாடுகளை சுவைத்தது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஃபிரான்டியர்ஸ் இன் ரோபோடிக்ஸ் & ஏஐ இதழில் இது குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

"ஒரு ரோபோ அமைப்பில் மெல்லும் மற்றும் சுவைக்கும் மிகவும் யதார்த்தமான செயல்முறையை நாங்கள் பிரதிபலிக்க விரும்பினோம். இது ஒரு சுவையான இறுதி தயாரிப்புக்கு வழிவகுக்கும்" என்று டாக்டர் ஆர்சன் அப்துல்லாலி கூறினார். மேலும், பரிசோதனையில், ரோபோ மென்று சாப்பிடும் உணவில் உள்ள வித்தியாசத்தை 'பார்க்க' முடிந்தது என்றார்.

டீ மாஸ்டர், புரோட்டா மாஸ்டர்களுக்கு போட்டியாக வரும் ரோபோ மாஸ்டர்
“இனி மனிதர்களே தேவையில்லை, வருகிறது ரோபோ டாக்சி” - எலன் மஸ்க் அறிவிப்பு

சமையலுக்கே ரோபோ வந்து பிறகு அதை சுவையையும் உணர்ந்து விட்டால் பிறகு என்ன? உங்களுக்குத் தேவையான உணவு வகைகளை அது சைனீஷ் வகையோ, மெக்சிகன் வகையோ இல்லை செட்டிநாட்டு வகையோ அனைத்தையும் ரோபோக்களே தயாரிக்கும். ஆனால் அத நடைமுறைக்கு வர கொஞ்சம் காலம் எடுக்கும். அது வரை பொறுத்திருங்கள். அதன் பின்னர் யூடியூபர்களின் சமையல் வீடியோக்களை பார்த்து சமைக்கும் அவலம் உங்களுக்கு இருக்காது.

இனி டீ மாஸ்டர், புரோட்டா மாஸ்டர் போல ரோபோ மாஸ்டர்கள் வரப் போகிறார்கள்.

டீ மாஸ்டர், புரோட்டா மாஸ்டர்களுக்கு போட்டியாக வரும் ரோபோ மாஸ்டர்
உங்கள் தினசரி உணவு பழக்கம் சரியானது தானா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com