கொலஸ்ட்ரால் : கெட்ட கொழுப்பை இயற்கையாக குறைக்க 10 உணவுகள் | Nalam 360

இந்த கொழுப்பு பிரச்னையைத் தீர்க்காவிடில், மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமன், கொழுப்பு கல்லீரல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இதிலிருந்து எளிதாக தப்பிக்க இந்த உணவுகள் உதவும்.
Food
FoodTwitter
Published on

நம் உடலுக்கு, கொழுப்பு தேவையான அதே நேரத்தில் சரியான அளவுடன் இருக்க வேண்டிய பொருள். செல் சவ்வுகள், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் வேலையை கொழுப்பு செய்கிறது. இந்த கொழுப்பை உற்பத்தி செய்யும் வேலையை கல்லீரல் செய்கிறது. லிப்போ புரோட்டீன்கள் (lipoprotein) என்பவை, கொழுப்பும் புரதமும் சேர்ந்த மாலிக்யூல்கள் (molecule). இவைதான் கொலஸ்ட்ராலை உடல் முழுவதும் கடத்துகின்றன. கொழுப்பு உற்பத்தி செய்யப்பட வேண்டும் அதே நேரத்தில் கரைக்கப்படவும் வேண்டுமா? ஏன் என்கிறீர்களா? கொழுப்பில் இரண்டுவகை உண்டு; ஒன்று நல்ல கொழுப்பு மற்றொன்று கெட்ட கொழுப்பு.

உடல் பருமன்
உடல் பருமன்Canva

கெட்ட கொழுப்பு

இது எல்.டி.எல் கொலஸ்ட்ரால் எனப்படுகிறது. இது அடர்த்தி குறைவானது. இரத்த தமனிகளில் ஒட்டிக்கொள்ளும் தன்மைகொண்டது. இது அதிகரிக்கும் போது இரத்த ஓட்டத்தில் தடுப்பு ஏற்பட்டு மாரடைப்பு கூட ஏற்படுகிறது.

நல்ல கொழுப்பு

எச்டிஎல் கொலஸ்ட்ரால் எனப்படுகிறது. இது அதிக அடர்த்தி கொண்டது, உடலுக்கு அவசியம் தேவையானது. இந்த நல்ல கொழுப்புகளின் அளவு குறையும் போது பிரச்னைகள் ஏற்படும்.

கெட்ட கொழுப்பின் அதிகரிப்பு தான் நாம் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்னையாக இருக்கும். இன்றைய நவீன வாழ்க்கை முறை கெட்ட கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது. நாம் உண்ணும் பெரும்பாலான நொறுக்குத் தீனிகள் கெட்ட கொழுப்பை அதிகரிப்பவையாக இருப்பது தான். பானிபூரி, பேல்பூரி, பாவ்பாஜி, சிக்கன் பக்கோடா என நீளும் அந்தப் பட்டியலில் பீட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளும் அடக்கம்.

இந்த கொழுப்பு பிரச்னையைத் தீர்க்காவிடில், மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமன், கொழுப்பு கல்லீரல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

சரி கொழுப்பு பிரச்னையை தீர்க்க என்ன வழி என்று பார்க்கலாம்.

Fish
FishTwitter

மீன்

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம். மீன்களை அதிகமாகச் சாப்பிட்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதைத் தவிர்க்கலாம். வஞ்சிரம், மத்தி உள்ளிட்ட மீன் வகைகளைச் சாப்பிடலாம்.

ஆப்பிள்
ஆப்பிள்Twitter

ஆப்பிள்

ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

Nuts
NutsTwitter

நட்ஸ்

நட்ஸில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். பாதாம், வால்நட் போன்றவற்றை ஸ்நாக்ஸாக சாப்பிட்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

வெங்காயம்
வெங்காயம் Twitter

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள குவர்சிட்டின் (Quercetin) என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், ரத்தக் குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மை கொண்டது. வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

தானியங்கள்
தானியங்கள்Canva

தானியங்கள்

முழு தானியங்கள் இதயத்துக்கு மிகவும் நல்லவை. இவற்றில், கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

Food
தண்ணீரை எப்படி உடலுக்கு மருந்தாக்குவது? வெறும் தண்ணீர் குடிக்க நோய் தீருமா ?
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள்Twitter

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் (pectin) உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பைக் கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பசலைக் கீரை
பசலைக் கீரை Canva

பசலைக் கீரை

பசலைக் கீரையில் லுடீன் (Lutein) மற்றும் நார்ச்சத்து அதிகம். இந்தச் சத்துக்கள் இதய ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை கொண்டவை. பசலைக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வெண்டைக்காய், கத்தரிக்காய்
வெண்டைக்காய், கத்தரிக்காய் Canva

வெண்டைக்காய், கத்தரிக்காய்

கத்திரிக்காயும் வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும். வெண்டைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். தொடர்ந்து சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் அளவும் கட்டுக்குள் இருக்கும்.

தேன்
தேன்Canva

தேன்

தேனில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் ரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை இதயக் குழாய்களில் ஒட்டவிடாமல், ரத்தத்திலேயே தங்க வைக்கும். தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அவகேடோ
அவகேடோCanva

அவகாடோ

அவகாடோவில் வைட்டமின் இ, ஒற்றை நிறைவுறாக் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது.

Food
மனிதன் புரூட்டேரியனா ? எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com