மனிதன் புரூட்டேரியனா ? எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம் ?

சில பண்டையக் காலத் தத்துவ முறையில், மனிதன் ஒரு பழம் திண்ணி - புரூட்டேரியன் என்கின்றனர்
Fruits

Fruits

Twitter

இயற்கை பழங்களைக் கொடுத்தது. மனிதன் சமையலைக் கண்டுபிடித்தான். சமைத்த உணவுகளைவிட இயற்கை உணவுகளே சத்தானவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும், சில பண்டையக் காலத் தத்துவ முறையில், மனிதன் ஒரு பழம் திண்ணி - புரூட்டேரியன் என்கின்றனர். மனித உடலுக்குத் தேவையான அனைத்தும் பழங்களில் உள்ளன. சமைத்த உணவு எதற்கு? என்கிறது இயற்கைத் தத்துவம். சமைப்பதாலும் பக்குவம் செய்வதாலும் பாதிச் சத்துக்கள் நீங்கிவிடும் எனச் சொல்லப்படுகிறது.

பழங்களாக ஸ்நாக்ஸ் போல இல்லாமல், ஒரு வேளை அல்லது இருவேளை உணவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும் என்கிறது இயற்கை மருத்துவம். கால் கிலோ முதல் அரைக் கிலோ வரை பசிக்கு ஏற்றது போலக் கூட்டி குறைத்துக் கொள்ளலாம். ஜூஸாகவும் குடிக்கலாம். ஆனால், சர்க்கரை இல்லாமல். புளிப்புப் பழச்சாறில் தேன் சேர்க்கலாம்.

பப்பாளிப்பழம்

பப்பாளிப்பழம்

Facebook

பழங்கள் பலவிதம்!

பப்பாளிப்பழம்

விஞ்ஞானப் பூர்வமாக மிகச் சக்தி நிறைந்த பழம் என்று பப்பாளியை “விஞ்ஞானச் சத்துணவு வாரியம்” கூறியுள்ளது. குறிப்பாக, மாலைக்கண் நோய் நீங்க பப்பாளி பெரும் அளவு பயன்படுகிறது. சிறுநீர்க் குழாய்ப் பாதிப்பை நீக்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். தோல் வறட்சி நீங்கும். பார்வை கோளாறுகள் சரியாகும்.

தக்காளிப்பழம்

தக்காளிப்பழம்

Twitter

தக்காளிப்பழம்

விட்டமின் சி, பயோட்டின் - விட்டமின் எச் நிறைந்தது. பல் ஆட்டம், பல் ஈறுகள் வீங்குதல், பல்லில் ரத்தம் வருதல் ஆகியவை நீங்கும். எலும்புருக்கி நோயை தடுக்கும் ஆற்றல் உடையது. உணவாக, 3-4 தக்காளியை சாப்பிடலாம். சாலட் செய்தும் சாப்பிடலாம். தக்காளி ஜூஸூம் நல்லது.

எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழம்

Facebook

எலுமிச்சம் பழம்

எலுமிச்சையில் உள்ள ‘லெமன் பெக்‌ஷன்’ ரத்தம் உறையாத குறை உள்ளவர்களின் நோய் நீங்க பயன்படும். உஷ்ணம் குறையும். பித்த நோயாளிகள் சாப்பிடுவது நல்லது. கல்லீரல், மண்ணீரல் வீக்கம் சரியாகும். காலையின் தினமும் தேன் கலந்த எலுமிச்சை சாற்றைக் காலை உணவோடு சாப்பிடுவது நல்லது.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

Facebook

கொய்யாப்பழம்

சர்க்கரை நோயாளி, ஆஸ்துமா, தலைவலி, அல்சர், தோல் நோய், சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம். பசி மந்தம் சரியாகும். மலம் இளக்கும் தன்மை கொண்டது. விட்டமின் சி, ஏ அதிகம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

Twitter

வாழைப்பழம்

இதில் மாவுச்சத்து அதிகம். பேயன் பழம், அம்மை நோய் வந்தவர்கள் சாப்பிடலாம். இதய நோய்க்கு மலச்சிக்கலுக்கு மலைப்பழம். உடல் அழகுக்கு ரஸ்தாளி.

Fruits

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உணர்வுகளை தூண்டும் காம விளையாட்டுகள் - 17

Grapes

Grapes

Twitter

திராட்சைப்பழம்

திராட்சை சாப்பிடுகையில் தோல், கொட்டை துப்பிவிட்டு சாறும் சதையும் மட்டும் சாப்பிடுவது நல்லது. ஒரு வேளை உணவாக, கால் கிலோ விட அதிகமாக இப்பழத்தை சாப்பிடலாம். உடலில் உள்ள கழிவான நீர், சளி, கபம், வாயு, உப்புக்கள், திட்டுகள் கழிவுகளாக வெளியேறும். ஆஸ்துமா நோயாளிகளும் சாப்பிடலாம். கருத்தரிக்கப் போதுமான ஆற்றல் கிடைக்கும். ரத்த அழுத்தம் சரியாகும். ரத்தசோகை தீரும். நரம்புத்தளர்ச்சிக்குச் சிறந்தது. குடல் புண்களை ஆற்றும். காமாலை நோய் உள்ளவர்கள் ஜூஸாக குடிக்க நல்லது. மலட்டுத்தன்மை நீங்கும். புற்று செல்களை அழிக்கும்.

தர்பூசணி

தர்பூசணி

Twitter

தர்பூசணி

மதிய உணவாகச் சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுகள் எளிமையாக நீங்கும். ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, ரத்தக் குழாய் அடைப்பு இருப்பவர்கள் சாப்பிடுவது அவசியம்.

Mango

Mango

Facebook

மாம்பழம்

தோல் வறட்சி நீங்கும். எடை அதிகரிக்காத குழந்தைகளுக்குக் கொடுக்கவும். உணவுக்குழாய் புண், தொண்டை புண் சரியாகும். ஆறாத புண்கள் ஆறும். மலச்சிக்கல் நீங்கும்.

ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி

ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி

facebook

ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி

சளியைக் கரைத்து வெளியேற்றும். பசி, சீரணத்தை ஒழுங்குப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். புற்றுநோயை எதிர்க்கும். தொண்டை புற்றுநோய்க்கு சிறந்த மருந்து ஆரஞ்சு ஜூஸ். கர்ப்பிணி பெண்கள் 2டம்ளர் ஜூஸ் குடிப்பது நல்லது. கழிவு தேக்கம் வெளியேறும்.

Fruits

கனவுகள் மரணத்தை எப்படி அறிவிக்கும்? கனவு மூலம் புரிந்துகொள்ள வேண்டியவை

நாவற்பழம்

நாவற்பழம்

Twitter

நாவற்பழம்

இயற்கையின் ‘இன்சுலின்’ உள்ள பழம், சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது. உப்புச் சேர்க்காமல் சாப்பிடுவதே நல்லது. உணவாக, கால் கிலோ வரை சாப்பிடலாம். இன்சுலினை உண்டாக்கும். பசியைத் தாங்கும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். மயக்கம் வருவது தடுக்கப்படும்.தைராய்டு நோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டும்.

சப்போட்டாப்பழம்

சப்போட்டாப்பழம்

Twitter

சப்போட்டாப்பழம்

ரத்தசோகையைப் போக்கும். ரத்த புற்றுநோயாளிகளுக்கு நல்லது. அல்சர், கேன்சர் உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தும் உணவும் இதுதான். அகோரப்பசி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மென்மையான நார்ப்பொருள் இருப்பதால் மலக்குடல் சுத்தமாகும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

Twitter

அன்னாசிப்பழம்

தொப்பையைக் குறைக்கும். அதிகம் வேண்டாம், அளவாகச் சாப்பிட வேண்டும். தினம் 2 ஸ்லைஸ் உட்கொள்வது நல்லது 40 நாளைக்கு மட்டும். இது தொப்பை குறைய உதவும். பசி, செரிமானம் குறைந்தவர்கள் அளாவாகச் சாப்பிடுவது நல்லது. அல்சர், அமிலம், அதிகப் பசி இருப்பவர்கள் அவசியம் தவிர்க்கவும்.

மாதுளைப்பழம்

மாதுளைப்பழம்

Facebook

மாதுளைப்பழம்

மலக்குடல், குடல், செரிமான உறுப்புகள், சிறுநீரகத்துக்கு நன்மையைச் செய்யும். பேதிக்கு மருந்தாகும். மலச்சிக்கலும் சரியாகும். இதய நோய், கருப்பைக் கோளாறுகள், பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் சாப்பிட வேண்டும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். மலக்குடல் கழிவுகளை நீக்க உதவும்.

ஆப்பிள் பழம்

ஆப்பிள் பழம்

Facebook

ஆப்பிள் பழம்

5 மாத குழந்தைகளுக்கே ஆப்பிள் கொடுக்கலாம். தோல் சுருக்கத்தை நீக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். உடல் வலிமை பெறும். எந்த நோய்களும் வராமல் தடுக்கும். ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரே வேண்டாம் என்பார்கள்.

பலாப்பழம்

பலாப்பழம்

Twitter

பலாப்பழம்

நன்கு மென்று சாப்பிட வேண்டிய பழம் இது. கண் நோய்கள் வராமல் தடுக்கும். பலாவுடன் தேன் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இரண்டு இனிப்புகளைச் சேர்க்க கூடாது; இணைக்கக் கூடாது. புளிப்புடன் இனிப்பு சேர்ப்பதே சரி. எலுமிச்சை பழம் + தேன். இதுபோலத்தான் சாப்பிட வேண்டும். பலாவும் தேனும் கூடாது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com