குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும் 5 உணவுகள் - என்னென்ன?

குளிர்காலத்தில் கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் சாப்பிடுவதன் மூலம் உடலை கதகதப்பாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
Egg and Nuts
Egg and Nuts Twitter
Published on

மழைகாலம் முடிந்து குளிர்காலம் தொடங்கிவிட்டது. பெரும்பாலனோருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் நலக் குறைவுகள் ஏற்படக் கூடும்.

​​குளிர்ந்த காலநிலையிலிருந்து உடலைப் பாதுகாக்க சில உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

குளிர்காலத்தில் கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் சாப்பிடுவதன் மூலம் உடலை கதகதப்பாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய ஆரோக்கிய உணவுகள்

  • முட்டை

  • வேர்க்கடலை

  • காய்கறிகள்

  • கம்பு

  • நட்ஸ்

முட்டை

முட்டை உடல் திசுக்களை சரிசெய்ய உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது.

பெரியவர்கள் வழக்கமாக ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் வரை உண்ணலாம். முட்டையில் புரதச்சத்து உள்ளது. மீன், முட்டை ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் சோர்வை குறைத்து ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது

peanut butter
peanut butterCanva

வேர்க்கடலை

ஆரோக்கியமான கொழுப்புகள் வேர்க்கடலையில் நிறைந்திருப்பதால் உடனடி ஆற்றலை உடலுக்கு தரவல்லது.

வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சத்தானவை என்றாலும் குறைவாக உட்கொள்ள வேண்டும்.

காய்கறிகள்

பொதுவாகவே காய்கறி வகையில் பல்வேறு சத்துகள் உள்ளன. செரிமானம் சீராக இருப்பதற்கு வேர் காய்கறிகள் சாப்பிட நிபுணர்கள் வலியுறுத்துகின்றன.

உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகள் உடலை கதகதப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

Egg and Nuts
ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக் கூடாத உணவுகள் எவை?

கம்பு

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க கம்பு சிறந்த உணவு. இதில் உள்ள கொழுப்பு, புரத சத்துக்கள் இரத்த சோகைப் பிரச்னைக்குத் தீர்வளிக்கிறது. இதை கஞ்சி அல்லது ரொட்டியாக செய்து சாப்பிடலாம்.

நட்ஸ்

குளிர்காலத்தில் பாதாம் போன்ற நட்ஸ்களை எடுத்துக் கொள்ளலாம். நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவும்.

மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற பேரீச்சம்பழத்தில் வைட்டமின்கள், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனை காலை மற்றும் மாலை சேர்த்துக்கொள்வதன் மூலம் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும்.

Egg and Nuts
குளிர் காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Glutathione- உணவுகள் மூலம் பெறுவது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com