ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகள் இல்லை. அவசியமான ஒன்றில் ஃப்ரிட்ஜின் பெயரும் வந்து நிற்கிறது. உணவை வீணாக்க கூடாது எனச் சேமித்து வைக்க ஃப்ரிட்ஜ் கண்டுபிடிக்கப்பட்டதா? உடல்நலம் கெட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்க வேண்டும் எனக் கண்டுபிடித்தனரா? எதற்கு ஃப்ரிட்ஜ்? எப்படிப் பயன்படுத்துவது நல்லதா, பாதுகாப்பானதா?
பொதுவாக வீடுகளில் ஒரு வாரத்துக்குத் தேவையான இட்லி, தோசை மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறார்கள். தினமும் காலையோ இரவோ இட்லி தோசைதான். பாவம்… நாக்கும் கெடுகிறது உடலும் கெட்டு நாசமாகிறது. குழந்தைக்குக் கூட இட்லி கொடுக்கலாம் எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். புதிய மாவில் இட்லி செய்து கொடுப்பதுநல்லது. ஆனால், ஒரு வாரமாக ஃப்ரிட்ஜில் உள்ள மாவை எடுத்து, இட்லி,தோசை செய்வது பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
ஊறவைப்பதில் 8 மணி நேரம். பிறகு அரைத்து புளிக்க வைப்பதில் 6-8 மணி நேரம். இப்போதே இது பழைய மாவாகிவிட்டது. இது இட்லி, தோசை செய்வது ஓரளவுக்கு ஓகே… சாப்பிட்டுக் கொள்ளலாம் ஒருமுறை மட்டுமே… ஆனால், இந்த மாவை ஃப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள். தினம் தினம் நேரம் ஏறிக்கொண்டே போகும். மாவும் புளிக்கும். இதில் இட்லி தோசை செய்வது புதிய உணவல்ல. கெட்டுப்போன பழைய சூடான உணவு…
ஒரு நாளைக் கடந்த பின் அந்த மாவு சுவை இல்லாமல் விழுக் விழுக்கென்று இருக்கும். நாட்பட்ட உணவு எதுவுமே உயிர்தன்மையுடன் இருப்பது கிடையாது. இந்த மாவிலும் உயிர்தன்மை இல்லை. ஈஸ்ட் மட்டுமே உள்ளது. புளித்துக்கொண்டே போகும். வயிற்றிலும் புளிக்கும். புற மாற்றம் இல்லை, ஆனால் உள் மாற்றம்… குளிர்வு பெட்டியில் வைக்கப்படுகின்ற மாவு, கீரை, காய்கறி அனைத்திலும் புற மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதாவது கண்களுக்குத் தெரிகின்ற மாற்றங்கள் பெரிதாக இல்லை.
ஆனால், தட்ப வெப்ப மாற்றங்கள் அதன் ஜீவ சக்தி அழிக்கப்படுகிறது. உணவுக்குச் சுவையற்ற தன்மையைத் தரும். உடலில் வாயு, நீர், திட கழிவை ஏற்படுத்தும்.
ஃப்ரிட்ஜில் வைத்த சோறு, குழம்பு வைத்து பிறகு மீண்டும் சாப்பிடுவது மோசமானது. இதை விட மோசமானது இதனை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது. இப்படிச் செய்தால் உணவில் 1% கூடச் சத்து இருக்காது.
வெறும் சக்கையாக உள்ளே செல்லும். தெருக்கு தெரு ஆயிரம் கடைகள், தெருவில் தினமும் வீட்டு வாசலிலே காய்கறி வியாபாரம் செய்கிறார்கள். அப்படி இருக்க அதிகமாக வாங்கி ஃப்ரிட்ஜில் சேமிப்பதை நிறுத்தலாம். தினமும் ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம்.
காய்கறி, பழங்கள், கீரைகள் ஆகியவை நாள்தோறும் புதிதாக இருப்பது உடலுக்கு நல்லது. முடியாத சமயத்தில் 2 நாட்கள் வரை வைக்கலாம். அதற்கு மேல் வைக்க கூடாது. அதில் சத்து இருக்கவே இருக்காது.
பால் ஆகியவை மீண்டும் மீண்டும் வைத்துச் சூடுபடுத்திச் சாப்பிடுவது. மோசமான உடல்நல கோளாறுகளை உருவாக்கும். அத்தனையும் கழிவாகவே உடலில் சேரும். குப்பைத் தொட்டியில் போட வேண்டியதை வயிற்றுக்குள் போடுகிறோம்.
உலர் மாவுகள், உலர் பருப்புகள், உலர் நட்ஸ், உலர் பயறுகள், உலர் பொடிகள் ஆகியவை ஃப்ரிட்ஜில் வைக்க ஏற்றது. உண்மையில் உலர் மாவுகளைதான் ஃப்ரிட்ஜில் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், அதை நாம் வெளியில் வைக்கிறோம். காய்கறி, பழங்கள், மாவு, பாலை ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். மிகச் சரியாக, தவற்றைச் செய்து கொண்டிருக்கிறோம்.
புழு வந்துவிட்டால், வண்டு வந்துவிட்டால் அந்த உலர் மாவு, உலர் பொடி என எதுவாக இருந்தாலும் அதைச் சாப்பிட கூடாது. அது புழுக்கான உணவு. மனிதனுக்கான உணவல்ல.
உலர் மாவும் உலர் பொடிகளும் எனச் சொல்வது… உதாரணத்துக்கு மிளகாய் பொடி, தனியா பொடி, ராகி மாவு, கம்பு மாவு, அரிசி மாவு ஆகியவை உலர வைத்து மெஷினில் அரைத்து டப்பாக்களில் சேமிப்பதைவிட ஃப்ரிட்ஜில் சேமிப்பதுதான் சரி. எந்த மாவு, பொடி அரைக்கப்படுகிறதோ அந்த நிமிடத்தில் இருந்து கெட தொடங்குகிறது. அதனால் ஃப்ரிட்ஜில் வைப்பது அதன் கெடுதல் வேகத்தை நிறுத்திக் கொள்ளும். எனவே உலர் மாவும் பொடிகளையும் தான் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
அரைத்த ஈரமான இட்லி, தோசை மாவை அன்றே சமைத்து உண்ண வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்து சேமித்து, மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
புற தட்ப வெப்பத்திலிருந்து பழங்களை ப்ஃரிட்ஜில் வைப்பதால் அதில் குளிர்மை ஏறி பளீரென்று இருக்கலாம். ஆனால், குளிர்ச்சி ஏறியதும் அதன் ஜீவ சத்துக்கள் அழிந்து விடுகின்றன.
பால் கறந்து அதைப் பல பிராஸஸ் செயல்முறைகள் செய்து, கடைக்கு வந்து நம் வீட்டுக்கு வரவே 6-8 நாட்கள் ஆகும். அந்தப் பாலை மீண்டும் மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து, சூடு செய்து குடிப்பது பெரிய ஆபத்து. இந்தப் பாலை பூனைகள் கூடத் தற்போது குடிப்பது இல்லை. ஒருமுறை ஆவலுடன் வரும் முகர்ந்து பார்க்கும் பின் முகத்தைத் திருப்பிக்கொண்டு பூனை ஓடும். பிறகு மீண்டும் வரும். ஒருமுறை நாவால் தீண்டி பார்த்துவிட்டு மீண்டும் பூனை ஓடிவிடும்.
பின்னர் பசி தாங்காமல் தயக்கமாக விருப்பம் இன்றிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்காமல் நீண்ட நேரமாக முயன்று பால் குடிக்கிறது, பூனை. இப்படிப் பூனைவே வெறுத்துவிட்ட அந்தப் பாலைதான் கால்சியம் எனச் சொல்லி மீண்டும் மீண்டும் சூடு செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக்
குடிக்கிறோம். சிந்தியுங்கள்…!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust