தனிமையில் இருந்தால் இந்த நோய் எல்லாம் வருமா? ஆய்வுகள் சொல்வதென்ன?

தற்போது இருக்கும் சூழல் என்வென்றால் பல இளைஞர்கள் தங்களை பல்வேறு காரணங்களால் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இப்படி தனிமையின் காரணமாக உருவாக்கக்கூடிய 5 உடல்நலப் பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
5 serious health issues that can be triggered by loneliness
5 serious health issues that can be triggered by lonelinessTwitter
Published on

மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று வல்லுநர்கள் கூறுவதால், சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்படுவது அல்லது தனிமையாக உணரப்படுவது பலவிதமான நோய்களைத் தூண்டும்.

ஆய்வுகளின்படி, தனிமை பல நோய்கள் உண்டாக காரணமாக இருக்கிறது. தனிமை இதய நோய், மனச்சோர்வு, பதட்டம், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடும்.

தற்போது இருக்கும் சூழல் என்வென்றால் பல இளைஞர்கள் தங்களை பல்வேறு காரணங்களால் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இப்படி தனிமையின் காரணமாக உருவாக்கக்கூடிய 5 உடல்நலப் பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்ச்சியான மனச்சோர்வு

தனிமையால் ஏற்படக்கூடிய பெரிய கோளாறுகளில் இதுவும் ஒன்று. டிஸ்டிமியா எனப்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பெரும்பாலும் தனியாக இருக்க விரும்புகிறார். ஒருவருக்கு தொடர்ச்சியாக மனச்சோர்வு இருக்கும் பட்சத்தில் படிப்படியாக தங்களின் தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பை இழக்கின்றனர்.

பழகுவதில் சிக்கல்

பகுத்தறிவற்ற கவலை, பயம் ஒருவரிடம் இருக்குமேயானால், அவர்கள் பிறரிடம் பழகுவதிலேயே சிக்கல் ஏற்படுகிறது. அந்த தேவையற்ற உரையாடலை, சந்திப்பை தவிர்த்து தங்களைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றே தேர்வு செய்கிறார்கள்.

5 serious health issues that can be triggered by loneliness
தனிமையில் இனிமை காண்பவரா நீங்கள்? தனிமை விரும்பிகளின் 7 குணங்கள் இது தான்!

நாள்பட்ட நோய்கள்

உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் பொதுவாக சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. ஒரு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே சொல்லலாம்.

புற்றுநோய்

தனிமையின் உணர்வுகள், மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களைத் தூண்டி, புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை நோய்

மன அழுத்தம் மற்றும் தனிமை நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள்

5 serious health issues that can be triggered by loneliness
தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா? எப்படி தவிர்க்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com