தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா? எப்படி தவிர்க்கலாம்?

தனிமையில் இருப்பதற்கும், தனிமையாக உணர்பவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சிலர் தங்களைச் சுற்றி நிறைய பேர் இருந்தாலும் தனிமையாக இருப்பதாகவே உணர்வார்கள். அப்படி தனிமையாக உணர்பவர்கள் என்ன செய்யலாம், இதற்கு என்ன தான் தீர்வு?
தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா?  எப்படி தவிர்க்கலாம்?
தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா? எப்படி தவிர்க்கலாம்?Twitter
Published on

தனிமை என்பது எல்லோருக்கும் வாழ்க்கையில் எதாவது ஒரு காலகட்டத்தில் உணரும் விஷயம். எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாதது போன்ற உணர்வு சிலருக்கு இருக்கும். சிலர், அவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.

இவ்வாறு தனிமையில் இருப்பவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்றே யாருக்கும் தெரியாது, இவ்வளவு ஏன் அவர்களுக்கே தெரியாது. மணிக்கணக்கில் உட்கார்ந்து எதையாவது யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

தனிமையில் இருப்பதற்கும், தனிமையாக உணர்பவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சிலர் தங்களைச் சுற்றி நிறைய பேர் இருந்தாலும் தனிமையாக இருப்பதாகவே உணர்வார்கள்.

குடும்ப சூழல், காதல் தோல்வி, நண்பர்களின் துரோகம் என பல காரணங்களை தனிமையில் இருப்பவர்கள் அடுக்கிகொள்வார்கள். அப்படி தனிமையாக உணர்பவர்கள் என்ன செய்யலாம், இதற்கு என்ன தான் தீர்வு?

உங்களை எப்போதும் நீங்கள் பிஸியாக வைத்திருங்கள். அதுவே தேவையில்லாத பல மன அழுத்தங்களை குறைக்கும்.

சிலருக்கு தனிமை ‘மரபியல்’ காரணங்களால் ஏற்படலாம். காதல் தோல்வி, திருமணம் ஆகாதவர்கள், உறவுகளின் பிரிவு என வெளியில் சொல்ல முடியாத சோகத்தை வைத்திருப்பவர்கள் இதில் பாதிக்கப்படலாம்.

இது மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதை தடுக்கிறது.

இதில் இருந்து வெளியே வர நாம் பல்வேறு முயற்சிகளை செய்ய வேண்டும். பிரிந்து சென்றவர்களை, குடும்பத்தை காரணம் காட்டாமல் தங்களை தாங்களே மாற்றிகொள்ளுதல், உங்கள் குணாதிசியங்களை தாண்டி நடிக்க கூறவில்லை மாறாக சகஜமாக பழக முயற்சி செய்யலாம்.

சில சமயங்களில் உங்களுக்கு உங்கள் மீது சந்தேகங்கள் வரலாம். நாம் செய்வது சரிதானா இல்லை இந்த சூழலுக்கு இந்த முடிவு சரியானதா? என பல கேள்விகள் எழலாம்.

தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா?  எப்படி தவிர்க்கலாம்?
தனிமையில் இனிமை காண்பவரா நீங்கள்? தனிமை விரும்பிகளின் 7 குணங்கள் இது தான்!

இந்த சந்தேகங்களை பிறரிடம் கூறி அதற்கான தீர்வுகள் கேட்டு ஒரு முடிவு நீங்கள் எடுக்கலாம். தவறொன்றுமில்லை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

ஏனென்றால் உங்களுக்குள் எழும் கேள்விகளுக்கு உங்களுக்கு சில சமயங்களில் விடை தெரியாமல் இருக்கும், அந்த கேள்விகளை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு இருப்பதாலேயே பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகிறது.

பிறரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் மருத்துவரிடம் சென்று சரியான ஆலோசனையை பெற்று இதில் இருந்து மீளலாம்.

தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா?  எப்படி தவிர்க்கலாம்?
Introvert என்பவர் யார்? அவரது குணநலன்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com