ஆல்கஹால்: ஒரே ஒரு முறை பருகுவது கூட உங்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும்- எச்சரிக்கும் ஆய்வு

விழாக்களில், ஒரு முறை மட்டும், சுவை பார்ப்பதற்காக, நண்பர்கள் விருப்பத்துக்காக, ஆசைக்காக என எல்லா காரணங்களுக்கும் நோ சொல்கிறது இந்த ஆய்வு!
ஆல்கஹால்: ஒரே ஒரு முறை பருகுவது கூட உங்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும்- எச்சரிக்கும் ஆய்வு
ஆல்கஹால்: ஒரே ஒரு முறை பருகுவது கூட உங்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும்- எச்சரிக்கும் ஆய்வுTwitter
Published on

ஒரு மிடறுஆல்கஹால் கூட நரம்பு செல்களில் மாற்றத்தை ஏற்படுத்தி நிரந்தரமாக அடிமையாக்கக் கூடும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள் நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகுகளாகும். நம் உடல் வெளிப்புறத்திலிருந்தும் உட்புறத்திலிருந்தும் பெறும் உணர்வுகளை மூளைக்கு அனுப்புவது நரம்பு மண்டலத்தின் முக்கியப் பணியாகும்.

ஆல்கஹால், செல்களின் ஆற்றல் மையமான மைட்டோகாண்ட்ரியாவின் இயக்கத்தில் சினாப்சிஸின் வடிவமைப்பை பாதிக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சினாப்சிஸ் என்பது ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு தகவல் பரிமாற்றம் நடைபெறும் ஒரு புள்ளி ஆகும்.

விலங்குகளில் செய்யப்பட்ட இந்த ஆய்வு சிறிய அளவிலான ஆல்கஹால் கூட அடிமைப்படுவதற்கு அடித்தளமாக அமையும் என உணர்த்தியிருக்கிறது.

பெரும்பாலான ஆய்வுகள் தொடர்ந்து மது அருந்துவதால் மூளையின் கட்டுப்பாட்டு மையமான ஹிப்போகேம்பஸில் ஏற்படும் பாதிப்புகளையே மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கின்றன.

பழ ஈக்கள் மற்றும் எலி வகைகளைப் பயன்படுத்தி இரண்டு பகுதிகளில் எத்தனால் தூண்டப்படுவதனால் ஏற்படும் மாற்றங்களை அறிய முயற்சித்தனர்.

மைட்டோகாண்ட்ரியா இயக்கவியல் மற்றும் நியூரான் மற்றும் சினாப்சிஸ் இடையிலான சமநிலை.

ஆல்கஹால்: ஒரே ஒரு முறை பருகுவது கூட உங்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும்- எச்சரிக்கும் ஆய்வு
அரசு பேருந்தில் மது அருந்தும் பள்ளி மாணவிகள் - அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள்

எத்தனால் தூண்டப்பட்ட செல்களில் மைட்டோகாண்ட்ரியா இயக்கம் பாதிக்கப்படுகிறது. இதனால் மைட்டோகாண்ட்ரியா நியூரான்களுக்கு ஆற்றலை அனுப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. அத்துடன் சினாப்சிஸின் வேதியல் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.

இந்த மாற்றங்கள் நிரந்தரமானவை என ஆல்கஹால் உட்கொண்ட விலங்குகளின் நடத்தை மாற்றங்களை ஆய்வு செய்ததன் மூலம் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வானது, ப்ரொசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகடமி ஆஃப் சைன்ஸ் என்ற இதழில் வெளியாகியிருக்கிறது. விழாக்களில், ஒரு முறை மட்டும், சுவை பார்ப்பதற்காக, நண்பர்கள் விருப்பத்துக்காக, ஆசைக்காக என எல்லா காரணத்துக்கும் நோ சொல்கிறது இந்த ஆய்வு!

ஆல்கஹால்: ஒரே ஒரு முறை பருகுவது கூட உங்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும்- எச்சரிக்கும் ஆய்வு
இளைஞர்களை மது அருந்த ஊக்குவிக்கும் ஜப்பான் அரசு - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com