அலியா பட் வளைகாப்பில் வீகன் மெனு : கர்ப்ப காலத்தில் வீகன் உணவுகள் ஆரோக்கியமானதா?

அலியா-ரன்பீரின் திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவுகளில் வீகன் பர்கர்கள் இடம்பெற்றன. இந்நிலையில் வளைகாப்பு விழாவில் வீகன் உணவுக்கான மெனுவை வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Alia Bhatt
Alia BhattTwitter
Published on

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் டேட் செய்த பிறகு, ஏப்ரல் 14, 2022 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

ஆலியா பட், தனது சமீபத்திய படம் "பிரம்மாஸ்திரா" வெற்றியைத் தொடர்ந்து, விரைவில் தனது வளைகாப்பு விழாவைக் கொண்டாடவுள்ளார்.

ரன்பீர் கபூருடன் தனது முதல் குழந்தையை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கும் ஆலியா, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

Ranbir Kapoor - Alia Bhatt
Ranbir Kapoor - Alia Bhatt twitter

அலியாவிற்கு விரைவில் வளைகாப்பு நிகழ்ச்சியை அவரது குடும்பத்தினர் நடத்தவுள்ளனர். 2020 ஆம் ஆண்டு சைவ உணவு உண்பவராக மாறிய ரன்பீர், வளைகாப்பு விழாவில் சைவ உணவு மெனுவை தேர்வு செய்துள்ளனர்.

அலியா-ரன்பீரின் திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவுகளில் வீகன் பர்கர்கள் இடம்பெற்றன. இந்நிலையில் வளைகாப்பு விழாவில் வீகன் உணவுக்கான மெனுவை வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Pregnant Woman
Pregnant Woman Pexels

கர்ப்பமாக இருக்கும்போது வீகன் உணவு உண்பவராக இருக்க முடியுமா?

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது குழந்தையின் உடல் நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கர்ப்ப காலத்தில் ஒரு சீரான உணவை சாப்பிடுவது முக்கியம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்ற சில கர்ப்ப சிக்கல்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கிறது.

தாவர அடிப்படையிலான உணவுகள், குழந்தைக்கு ஆஸ்துமா, தோலழற்சி மற்றும் புற்றுநோய்கள் போன்ற நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.

வீகன் உணவு உண்பவர்களுக்குப் பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், ரொட்டி, தானியங்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியவற்றில் இரும்புச்சத்துகள் கிடைக்கும்.

Alia Bhatt
ஒவ்வொரு இஞ்ச் தொப்பையும் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் - தொப்பையைக் குறைப்பது எப்படி?
Healthy food
Healthy foodCanva

வைட்டமின் டி குறைவாக உள்ளது?

வீகன் உணவுகளில் வைட்டமின் டி குறைந்த எண்ணிக்கையிலான உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது.

அனைத்துப் பெண்களும், குறிப்பாக கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது தாய்ப்பால் கொடுப்பவர்கள், குளிர்காலத்தில் 10 மைக்ரோகிராம் வைட்டமின் டி கொண்ட சப்ளிமெண்ட்ஸை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Alia Bhatt
கெட்ட கொழுப்பு அதிகரித்து விட்டதா? - கண்டுபிடிப்பது எப்படி?

உணவில் கால்சியம்

கர்ப்பிணிகளுக்கு கால்சியம் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இவை கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியவை, ஏனெனில் அசைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் பால் மூலங்களிலிருந்து பெறுகிறார்கள்.

வீகன் உணவு உண்பவர்களுக்கு கால்சியம், இலை காய்கறிகள், பருப்பு வகைகள், சோயா,ஓட்ஸ், எள் விதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியவற்றில் உள்ளது.

எனினும் தங்களின் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Alia Bhatt
உலகிலேயே ஆரோக்கியமான சாப்பாடு இது தான்! - அறிவியல் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com