எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறீர்களா? - உங்களுக்கு இந்த மனநல பிரச்னை இருக்கலாம்!

அதிகமாக சாப்பிடுவது என்பது வெறும் வார்த்தை அல்ல, Binge-eating disorder (BED) எனப்படும் புதிய மனநல கோளாறுகளுக்கான நோயறிகுறி என்கின்றனர்.
Binge-eating disorder ( Rep)
Binge-eating disorder ( Rep)Twitter
Published on

சிலர் இரவில் அனைவரும் தூங்கிய பின் கிச்சனுக்கு சென்று ஏதேனும் சாப்பிட இருக்கிறதா என தேடுவார்கள். இரவு உணவு உட்கொண்ட பின்பும் சிலருக்கு அதிகமாக பசிக்கும், அதிகமாக சாப்பிடுவது என்பது வெறும் வார்த்தை அல்ல, Binge-eating disorder (BED) எனப்படும் புதிய மனநல கோளாறுகளுக்கான நோயறிகுறி என்கின்றனர்.

BINGE-EATING Disorder (BED) என்றால் என்ன?

BED என்பது மக்கள் அதிக அளவு உணவை உண்பதும், உணவைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதும் ஆகும்.

இருப்பினும், இந்த கோளாறு உணவைப் பற்றியது அல்ல, ஏனெனில் இது உடல் மற்றும் உணர்ச்சி நோய்களுடன் தொடர்புடையது.

இது புலிமியா நெர்வோசா மற்றும் அனோரெக்ஸியா நெர்வோசா ஆகியவற்றுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க மனநல கோமொர்பிடிட்டியுடன் தொடர்புடையது.

அறிகுறிகள்

--> இயல்பை விட மிக வேகமாக சாப்பிடுவது.

--> அசௌகரியமாக வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவது.

--> பசி இல்லாத போது அதிக அளவு உணவு உண்பது.

--> அதிகமாகச் சாப்பிட்ட பிறகு மனச்சோர்வு அல்லது குற்ற உணர்ச்சியாக உணர்வது.

--> வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை இவ்வாறு இருந்தால் BED ஆரம்ப கட்டம் என கருதப்படுகிறது.

--> தீவிரமடைந்தால், வாரத்திற்கு 14 அல்லது அதற்கு மேற்பட்ட முறை ஏற்படலாம்.

Binge-eating disorder ( Rep)
அடிக்கடி தலைவலியால் அவதிபடுகிறீர்களா? இந்த 5 உணவை சாப்பிடுங்கள்!

சிகிச்சை

BED க்கான சில சிகிச்சைகள்

1.அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavioral Therapy)

2. இயங்கியல் நடத்தை சிகிச்சை ( Dialectical Behavioral Therapy )

இந்த ஆண்டு, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ பரிசோதனையில் BED சிகிச்சைக்கான புதிய வழியைக் கண்டறிந்தனர்.

ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சாதனம் மூளையின் ஒரு பகுதியில் பசி தொடர்பான செயல்பாட்டைக் கண்டறிந்து, அந்த பகுதியை மின்சாரம் மூலம் தூண்டுவதனால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Binge-eating disorder ( Rep)
Water fasting : தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுமா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com