Water fasting : தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுமா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

ஒரு ஆய்வில், ஹைபோகலோரிக் டயட் பின்பற்றும்போது குடிநீர் வயதானவர்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமனைக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுமா?
தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுமா? Twitter

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று பலரும் சந்திக்கும் பிரச்னையாக உள்ளது.

இன்றைய தலைமுறையினர் உடல் எடையை குறைக்க ஜிம், டயட் போன்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.

இது தவிர சிலர் உடல் எடையை குறைக்க மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களை அணுகுகின்றனர். குடிநீர் உடல் எடையை குறைக்க உதவும் என்று பரவலாக சில கருத்துகள் உள்ளன.

Water
WaterTwitter

வாட்டர் ஃபாஸ்டிங்

தண்ணீர் மட்டும் குடித்து உணவுகளை தவிர்த்து உடல் எடையை குறைக்க முயற்சி செய்வது தான் வாட்டர் ஃபாஸ்டிங்

பல ஆராய்ச்சிகள் குடிநீருக்கு பல நன்மைகள் இருப்பதாகவும், அவற்றில் எடை இழப்பு முக்கியமானது என்றும் குறிப்பிடுகின்றன.

ஒபிசிட்டி இதழில் 2011ல் வெளியான ஒரு ஆய்வில், ஒரு ஹைபோகலோரிக் டயட் பின்பற்றும்போது குடிநீர் வயதானவர்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமனைக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவாக உடல் எடையைக் குறைப்பது கடினம் என்றாலும் இந்த முறை பாசிட்டிவான ரிசல்ட்டுகளை தருவதாக கூறுகின்றனர். உடல் எடையை குறைக்க குடிநீர் நிச்சயம் உதவும் என்றும் கூறப்படுகிறது.

தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுமா?
அடிக்கடி தலைவலியால் அவதிபடுகிறீர்களா? இந்த 5 உணவை சாப்பிடுங்கள்!

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி,

இந்த வகை உண்ணாவிரதம் பொதுவாக 24-72 மணி நேரம் வரை நீடிக்கும். மருத்துவ மேற்பார்வையின்றி தண்ணீர் உண்ணாவிரதத்தை ஒருவர் பின்பற்றக்கூடாது

கடந்த ஆண்டு அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 நடுத்தர வயதுடைய ஆண்கள் 8 நாட்கள் வாட்டர் ஃபாஸ்டிங் இருந்தனர்.

8 நாட்களின் முடிவில், பங்கேற்பாளர்களுக்கு மன அழுத்தம், எடை இழப்பு, உடல் அமைப்பில் மாற்றங்கள், நீரிழப்பு ஆகியவை ஏற்பட்டத்தாகவும்,

அதிகரித்த கீட்டோஜெனீசிஸ், ஹைப்பர்யூரிசிமியா, குளுக்கோஸ் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க குறைவு தோன்றியதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

கர்ப்பிணிகள், குழந்தைகள் தவிர்க்க வேண்டும்

ஆய்வின் அனுமானம் என்னவென்றால், உடலில் சில நேர்மறையான தாக்கங்கள் இருந்தாலும்,

தண்ணீர் உண்ணாவிரதம் பல அபாயங்களைக் கொண்டுள்ளது மற்றும் அதிக நேரம் கடைப்பிடித்தால் ஆபத்தானது என்று கூறுகின்றனர்.

இது தசை இழப்பு, இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்கள் மற்றும் பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், கீல்வாதம் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் இதைச் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் விரதம் உடல் எடையை குறைக்க உதவுமா?

உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் தண்ணீரை மட்டும் பருகி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் 1 கிலோ வரை குறைப்பது எளிது" என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், இது தசை இழப்பை ஏற்படுத்தும் என்பதால், தேவையில்லாமல் இதைச் செய்யக்கூடாது என்று அவர்கள் எச்சரித்தனர்.

தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுமா?
கர்ப்பிணிகளே உஷார்.! இந்த உணவுகளை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு உடல் பருமன் ஏற்படும்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com