காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செயற்கை இன்பமும் இயற்கை இன்பமும் 7

இப்படி வெறுமனே அரிப்பைத் தணித்துக்கொள்வதாக மட்டும் இருந்தால், ஏன் ஒரு ஆணோடு பெண் இணைய வேண்டும்?
Love, Lust

Love, Lust

Twitter

பெண்களது உறுப்பில் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு சூட்சும வஸ்து உருவாகிறது. இந்த வஸ்துவின் சக்தியைப் பொறுத்து, பெண்ணுறுப்பில் ஒருவித அரிப்பு ஏற்படுகிறது. அந்த அரிப்பைத் தணித்துக்கொள்ளவே ஆணோடு பெண் இணைய விரும்புகிறாள். காம உறவில் ஈடுபடுகிறாள் என்று சொல்லப்படுகிறது. இங்கு அரிப்பு என்பது நோயா? தேவையா? இது நோயல்ல… உடலின் தேவை.

இப்படி வெறுமனே அரிப்பைத் தணித்துக்கொள்வதாக மட்டும் இருந்தால், ஏன் ஒரு ஆணோடு பெண் இணைய வேண்டும்? ஆணுறுப்பைப் போல இருக்கும் ஏதாவது ஒரு கருவியை வைத்து அந்த அரிப்பைத் தணித்துக்கொள்ளலாமே? ஆனால், இப்படி ஒரு செயற்கை கருவி மூலம் கிடைப்பது உண்மையில் பலன் அளிக்குமா? முழுமையாகக் கிடையாது. இயற்கை இன்பத்துக்கும் செயற்கை இன்பத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

Natural Sex

Natural Sex

Facebook

இயற்கை சுகம் என்பது அலாதியானது

செயற்கை கருவியால், வருகின்ற சுகமும் இன்பமும் இயற்கையானது கிடையாது. அது செயற்கைத்தனமானவை. ஆனால், இயற்கை சுகம் என்பது அலாதியானது. ஆணோடு உறவில் இணையும்போது அன்பான அரவணைப்பும் முத்தங்களும் சீண்டல்களும் தழுவல்களும் கிடைப்பதால் பெண்களுக்கு இன்பமும் சுகமும் கிடைக்கின்றன. இதுதான் உடலின் தேவை எனப்படுவது.

இப்படிச் செயற்கை கருவிகள் பயன்படுத்தி, ஒரு பெண் தனது அரிப்பைத் தணித்துக்கொண்டால் ஆண் மூலமாகக் கிடைக்கும் ‘விசேஷ சுகம்’ அவளுக்குக் கிடைக்காது. உடலின் தேவை பூர்த்தியாகாது. விந்து வெளி வருகின்ற நேரத்தில் ஆண்களுக்கு உச்சக்கட்ட இன்பமும் திருப்தியும் கிடைக்கிறது. ஆனால், பெண்ணுக்கு இப்படி விந்து வெளியாகும் தன்மையெல்லாம் இல்லை. உடலுறவின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தொடர்ச்சியாகப் பெண்களுக்குப் பரவசம் கிடைக்கிறது. இதுவே அவர்களுக்கு இன்பமும் சுகமும் கிடைக்கச் செய்கிறது. காம உறவில் ஈடுபடும் நேரம் பொறுத்தோ உறுப்பு வகையைப் பொறுத்தோ இந்த உணர்வினை வகை பிரிக்க முடியாது. சுய இன்பத்துக்கும் நேரடியாக ஆணும் பெண்ணும் இணைந்து காம உறவில் இன்பம் அனுபவிப்பதற்கும் அந்தக் காலத்திலே தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டின் நோக்கமும் ஒன்றுதான் ஆனால் பலன்கள் வெவ்வேறு விதமாகவே கிடைக்கின்றன. செயற்கை இன்பத்தைவிட இயற்கை இன்பத்தைதான் மனமும் உடலும் எதிர்பார்க்கின்றன.

Love, Lust

குழந்தை உருவாக உதவும் எளிமையான 10 இயற்கை வழிகள்…

Natural Pleasure

Natural Pleasure

Facebook

பகிர்ந்துகொள்வதால் கிடைக்கும் இன்பம் தனிதான்

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், இரண்டிலும் நிகழ்வது உடல்ரீதியான மாற்றங்களும் செயல்பாடுகளும் ஒன்று போலவேதான் தெரியும். இதில், அப்போ வித்தியாசம் எங்கிருந்து தொடங்குகிறது என நீங்கள் கேட்கலாம்? ஒருவர் தனியாக, தனி அறையில் அனுபவிக்கும் விஷயம் ‘சுய இன்பம்’. ஆனால், காம உறவு என்பது பெண்ணும் ஆணும் இணைந்து, இருவரும் இன்பத்தை அனுபவித்துப் பகிர்ந்து கொள்கிற அனுபவம். எப்போதும் அனைத்து விஷயத்திலும் அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதால் கிடைக்கும் இன்பம் தனிதான்! அது விசேஷம்தான்!

இந்த இணைப்பின் பலன்களே அதிகம். இது விளையாட்டிலும் சரி செக்ஸிலும் சரி. பகிர்ந்துகொள்வதுதான் ஆரோக்கியமான நிலையை உருவாக்கும்.

ஆண்களுக்குக் காம உறவில் இன்பம் கிடைக்கின்ற அளவுக்குப் பெண்களுக்குக் கிடைப்பது இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இன்பத்தை அனுபவிப்பது என்பது மனதில் எழுகின்ற ஒருவித உணர்வு. ஆகவே, அந்த இன்பம் இதுதான்; இந்த அளவுதான்; அந்த அளவுத்தான் எனக் காண்பிக்க முடியாது. அதை, அனுபவிக்க மட்டுமே முடியும். அது ஐம்புலன்களுக்குப் புலப்படுவதில்லை. மனதில் இருக்கின்ற விஷயத்தை யார் கண்ணுக்கும் காண்பிக்க முடியாது. ஆகவே அதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.

Pregnant Woman

Pregnant Woman

Twitter

சில விஷயங்களை நேரடியாக அனுபவித்தால்தான் புரிந்துகொள்ள முடியும்

ஒரு ஆணோ பெண்ணோ காம உறவில் உங்களுக்கு எந்த அளவில் எப்படிப்பட்ட இன்பமும் சுகமும் கிடைத்தது என விவரிக்கச் சொன்னால்… அவர்களால் விளக்க முடியுமா? முடியாது… இதுமட்டுமல்ல… தன்னுடன் இணைந்த துணையிடம் அவர்களுக்குத் தன்னால் எவ்வளவு இன்பமும் சுகமும் கிடைத்தது எனக்கூட இணைந்த துணைக்குத் தெரியாது. ஒரு ஆணுக்கு எந்த மாதிரி இன்பம் கிடைத்தது என்று பெண்ணுக்கோ, பெண்ணுக்கு எந்த மாதிரி இன்பம் கிடைத்தது என ஆணுக்கோ தெரியாது. பெண்கள் அனுபவிக்கும் பரவச உணர்வை ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது. இதற்கு விளக்கங்களைச் சொல்லியும் விளக்க முடியாது. அப்படி விளக்கினாலும் புரியாது. இந்த நிலையில் ஆண் மாதிரி பெண் இன்பமும் சுகமும் அனுபவிப்பதில்லை என எப்படிச் சொல்ல முடியும்?

சில விஷயங்களை நேரடியாக அனுபவித்தால்தான் புரிந்துகொள்ள முடியும். ஒருவர் எவ்வளவு திறமையாக இருந்தாலும் அடுத்தவர்களின் அனுபவத்தை உணர்வை முழுமையாக அறிந்துகொள்ள முடிவதில்லை. உணரவும் முடிவதில்லை. உலகம் உருண்டை என்பது அறிவியல் பூர்வமாகச் சொல்லும் உண்மை. ஆனால், விண்வெளிக்குப் போனவர்களைத் தவிர வேறு யாரும் பூமியை உருண்டையாகப் பார்த்தது கிடையாது. இதை நாம் நம் வீட்டில் இருந்தபடியே உணரமுடியுமா? இல்லை. ஒருவரின் வலியை நம்மால் உணர முடியுமா? பெண்களின் பிரசவ வலி கொடுமையானதுதான். ஆனால், அதை ஆண்கள் உணர முடியுமா? அதுபோலச் சில விஷயங்களை அனுபவிக்க முடியும். ஆனால், அனுபவத்தின் கிடைத்த இன்பத்தை மற்றவருக்குச் சொல்லி புரிய வைக்க முடியாது. இப்படி உணர முடியாத விஷயங்கள் நிறைய…

Mental Health

Mental Health

Twitter

மனம், காம உறவில் மிக முக்கியம்

மனம் ஒரு விஷயத்தை நம்பும்போதுதான், அதில் நமக்கு நிறைவு கிடைக்கிறது. மனம், காம உறவில் மிக முக்கியம். காம உறவில் மட்டுமல்ல எல்லாத்துக்குமே ‘மனம்’ முக்கியம்தான். சில சமயங்களில் பார்த்தால், ஆணுக்கு முழுமையாக விந்து வெளியேறி இருக்கும். ஆனால், கொஞ்சம்கூட திருப்தி கிடைத்திருக்காது. திருப்தி அடைந்த உணர்வு இருந்திருக்காது. அதெபோல, சில பெண்களுக்கும் சில நாட்களில் எவ்வளவு நேரம் உறவில் இணைந்து இருந்திருந்தாலும்கூட திருப்தி ஏற்படாது. இதிலிருந்து என்ன தெரிகிறது?

பொதுவாகக் காம உறவில் கிடைக்கின்ற இன்பமும் சுகமும் திருப்தியும் ஆகிய எல்லாமே மனம் சார்ந்தது. மனதோடு தொடர்புடையது. நிறையப் பேர் தன் துணை தன்னுடன் இணைந்த பிறகு திருப்தி அடைந்திருப்பாரா எனப் பல கேள்விகளுடனும் எண்ணங்களோடும் இருப்பார்கள். ஆனால், இதை எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? அவர்களின் மனதைப் படிக்க முடிந்தால் சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியும். யார் ஒருவர் தன் துணையின் மனதை அறிந்து வைத்திருப்பாரோ, அவருக்கு இந்தக் கேள்விக்கான விடை தெரியும். இதுதான் சரியான புரிதலும்கூட. ஆனால், இதை நவீன செக்ஸ் அறிவியல் வேறு மாதிரி சொல்கிறது. சில அறிகுறிகளை வைத்து திருப்தியை கண்டுபிடிக்கலாம் என்கிறது.

முந்தைய பகுதியைப் படிக்க

Love, Lust

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : இன்பங்களில் பல வகை! - 6

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com