காதல், காமம், கொஞ்சம் உளவியல் : இன்பங்களில் பல வகை! - 6

ஆணுக்கும் பெண்ணுக்கும் எழும் காம இச்சை இயற்கையானது, இயல்பானது. இது தீர்த்துக் கொள்ளவேண்டியவைத்தான்.
Sex

Sex

Twitter

இந்த வேட்கை இருவரையும் பாடாய்படுத்தும். இச்சையைத் தணித்துக்கொள்ள வேண்டும் என்பதே இருவருக்குமே சரியான விஷயம். அடக்கி வைத்தல் கூடாது. உறவில் ஈடுபட்டால், இதனால் இருவருக்குமே இன்பம் கிடைக்கும். இந்த இன்பம் இரண்டு விதமாக வெளிப்படும். ஒன்று, உறவில் ஈடுபட வேண்டும் என ஏற்படும் இச்சையால் கிடைக்குகின்ற இன்பம். இரண்டாவது வகை, உறவின் போது விந்து வெளிப்படுவதற்குச் சற்றுமுன்னதாகக் கிடைக்கின்ற உணர்வு, அதுவே பரவச உணர்வு.

Three types of Men

Three types of Men

Facebook

ஆண்களில் மூன்று வகை

பொதுவாக, எல்லோருக்கும் ஒரே மாதிரியான காம இச்சை இருக்காது. வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொருவருக்கும் ஏற்படும் காம இச்சையின் அளவும் உறவில் ஈடுபடும் வேகமும் ஒரே மாதிரி இருக்காது. சில வகைகளால் இதைப் பிரிக்க முடியும்.

முதல் வகை ஆண்கள், உறவில் ஈடுபடும் இச்சை குறைவாகவே இருக்கும். தாம்பத்ய வாழ்வில் பெரிதாக ஈடுபடமாட்டார்கள். கடமைக்கே என்று இயங்குவார்கள்.

இரண்டாவது வகை, முதல் வகைக்கு மாறாக இருப்பார்கள். இச்சை ஓரளவுக்கு இருக்கும். பெண்களுக்கு ஈடுகொடுக்கும் வீரியமும் இருக்கும். ஆனால், உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் வகையாக இருப்பர்.

மூன்றாவது வகை, உறவில் ஈடுபடும் இச்சை அதிகமாக இருக்கும். முழு வேகத்தோடு இயங்குவார்கள். பெண்களுக்கு ஈடுகொடுக்கும் வீரியமும் சிறந்த முறையில் இருப்பதால், இவர்கள் உச்சபட்ச இன்பத்தை அளிக்கும் வீரியமுள்ளவராக இருப்பார்கள்.

இந்த வகைகளை மனதில் வைத்துக்கொண்டு தான் எந்த வகையில் இருக்கிறோம் எனப் பரிசோதித்துப் பார்க்கலாம். இவையெல்லாம் குறைகள் அல்ல… தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்கிறது நூல்.

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

Kamasutra

Kamasutra

Twitter

காமச்சூத்திரம்

ஆண்களில் விரைவாக விந்தை வெளியேற்றுபவர், ஓரளவுக்கு நேரம் எடுத்துக்கொள்பவர், நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு தாமதமாக விந்தை வெளியேற்றுபவர் என மூன்று வகைகள் உண்டு. இப்படித்தான் அந்தக் காலத்தில் பிரித்துப் புரிந்துகொண்டுள்ளனர்.

இதேபோலப் பெண்களிலும் உறவில் ஈடுபடும் இச்சை மற்றும் பரவசத்தைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கிறது காமச்சூத்திரம். பெண்களில், சீக்கிரமே உச்சகட்ட இன்பம் அடைபவள், கொஞ்ச நேரம் கழித்து உச்சக்கட்டத்தை எட்டுபவள், இன்பத்தின் உச்சத்தை அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்பவள் என மூன்று வகைகள் உள்ளன. இந்த வகைகளில் யாரெல்லாம் பொருந்துகிறார்கள் எனத் தன்னைத் தானே பெண்களும் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

ஆனால் செக்ஸ் அறிவியலோ, விதம்விதமாக செக்ஸ் உறவை பிரித்துப் பார்ப்பது கஷ்டம் என்கிறது. ஒரு ஆணையும் பெண்ணையும் உட்காரவைத்து விசாரித்தால்கூட இப்படி அவர்களை வகைப்பிரிப்பது கடினம். இப்போதைய சமூகத்தில் இதையெல்லாம் பற்றிப் பேசுவதேகூட சர்ச்சைகளாக ஏற்படுத்தும். கூச்சமும் தடையாக இருக்கும். இதெல்லாம் பற்றிப் பேசுவதா… ‘ச்சீசீ’ என ஒதுங்கிவிடுபவர்களும் உண்டு. ஆனால், அந்தக் காலத்திலே இதுபோன்ற பல நூல்களில் வகைகளைப் பிரித்துப் பட்டியலிட்டுள்ளனர். இதில் இருந்தே புரிந்துக்கொள்ளலாம். காதலும் காமமும் உறவுமுறைக்கு எவ்வளவு முக்கியம் என்று…

வெறுமனே ‘செக்ஸ் வைத்துக்கொண்டோம்’ என்ற ஒற்றை வார்த்தை போதாது. இருவரும் எந்தளவுக்கு இணைந்து இருந்தோம் என்பதில் உறவுமுறையின் ஆழமும் பலப்படும்.

Problems in Sex

Problems in Sex

Facebook

https://www.youtube.com/watch?v=EisNT6MlE5Mபெண்களுக்கும் இப்படி ஒரு பிரச்சனை உள்ளது

ஆனால் சில விஷயங்கள் ஆண்களுக்கான பிரச்சனைகளாக அந்தக் காலத்திலே சொல்லப்படுகிறது. செக்ஸ் பிரச்சனைகளுக்கான சிகிச்சையில் ஒருவருக்கு விந்து ஆரம்பகட்டத்திலே வெளியேறும் பிரச்சனை ஒரு வகை. இதேபோல ரொம்பவும் தாமதமாக விந்து வெளியே வருவதும் ஒரு பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இதெல்லாம் ஆண்களுக்கான பிரச்சனைகள் என்கின்றனர்.

இதுபோலவே பெண்களுக்குச் சீக்கிரம் இன்பம் கிடைப்பது நிகழ்கிறது என இன்றுவரை மேற்கெத்திய செக்ஸ் அறிவியல் நூல்களில் இதைப்பற்றிச் சொல்லவே இல்லை. பேசவும் இல்லை. புரிதல்களும் இல்லை.

பெண்களுக்கும் இப்படி ஒரு பிரச்சனை உள்ளது எனச் சொல்வது காமச்சூத்திரம்தான். பெண்கள் விஷயத்தில் முன்னோர்களுக்குப் பலவிதமான கருத்துகள் இருந்தன. உறவின் உச்சத்தில் எழும் இன்பத்தை ஆண் மட்டும் அனுபவிக்கிறாரா அல்லது பெண்களுக்கும் அது கிடைக்கிறதா என விவாதங்கள் இருந்தன. இவை பேசப்பட்டிருக்கின்றன. ஆராயவும்பட்டிருக்கின்றன.

Women has also have problem in sex

Women has also have problem in sex

Twitter

ஆண்களைப்போலப் பெண்களும் காம உறவில் அதே அளவு இன்பம் அடைவதில்லை. ஏனெனில் ஆண்கள் விந்தணுவை வெளியிடுகிறார்கள். பெண்களுக்கு இது கிடையாது. ஆண்கள் மாதிரி உணர்வுகள் எழுவதில்லை; இன்பமும் அடைவதில்லை என்றால் ஏன் ஒரு பெண் காம உறவுக்கு ஆசைப்படுகிறாள்? ஏன் பெண்களுக்கு உடலுறவு தேவைப்படுகிறது? ஏன் பெண்களும் உறவுகொள்ளட் தன் உடல் தூண்டப்படுகிறது? போன்ற கேள்விகள் அந்தக் காலத்திலே இருந்தன. இன்றும் இருக்கத்தான் செய்கிறது.

பெண்களது உறுப்பில் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு சூட்சும வஸ்து உருவாகிறது. இந்த வஸ்துவின் சக்தியைப் பொறுத்து, பெண்ணுறுப்பில் ஒருவித அரிப்பு ஏற்படுகிறது. அந்த அரிப்பைத் தணித்துக்கொள்ளவே ஆணோடு பெண் காம உறவில் ஈடுபடுகிறாள் என்று சொல்லப்படுகிறது. அரிப்பு என்பது நோயா? தேவையா? அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

முந்தைய பகுதியைப் படிக்க

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : அளவு, ஆழம் பற்றி நவீன அறிவியல் சொல்வது என்ன? - 5

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com