காதல், காமம், கொஞ்சம் உளவியல் : எது சிறந்த செக்ஸ்? - 10

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தை இயற்கைதான் உருவாக்கியது. அதாவது புணர்ச்சியில் ஆணும் பெண்ணும் செய்கிற செயல் என்னவோ ஒன்றுதான். ஆனால், அதை அவர்கள் செய்யும் விதம்தான் வித்தியாசப்படுகிறது.
Sex

Sex

Twitter

ஆணும் பெண்ணும் இருவருமே மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் கிடைக்கக் கூடிய இன்பமும் சுகமும் சமமானது. அவர்களது உடலமைப்பிலும் பாலுறுப்புகளில் வித்தியாசம் இருப்பதால் முதலில் பெண்களுக்குச் சுகமோ இன்பமோ கிடைக்கும்படி இயற்கை அமைத்திருக்கிறது.

பிறப்புறுப்பில் ஒருவித திரவம் சுரப்பதாலும் இப்படிப் பெண்ணுக்கு முதலில் இன்பம் கிடைக்கலாம். ஆனால், புணர்ச்சி பரவசம் என்கிற போது, உச்சகட்ட இன்பம் என்கிற போது ஆணுக்கும் பெண்ணுக்கும் உறவு முடிகிற சமயத்தில்தான் கிடைக்கும்.

Foreplay

Foreplay

Twitter

ஃபோர்ப்ளே எனும் தூண்டுதல் விளையாட்டில் ஈடுபட வேண்டும்

ஒரு ஆண் எப்போதும் பெண்ணை உறவுக்குத் தயார்ப்படுத்துவது முக்கியம். ஃபோர்ப்ளே எனும் தூண்டுதல் விளையாட்டில் ஈடுபட வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் உறவின் உச்சத்தில் புணர்ச்சிப் பரவசத்தை இருவருமே அனுபவிக்க இயலும். எப்போதுமே பெண்ணுக்கு முதலில் இன்பம் கிடைக்கச் செய்த பிறகுதான் ஆண் அடுத்தக் கட்டமாகத் தனக்கான இன்பத்தை அடையும்படியான உடலுறவை மேற்கொள்வதே, சிறந்த செக்ஸ் எனக் காமச்சூத்திரம் சொல்கிறது.

ஆனால், இதற்கெல்லாம் மாறாக ஆண் முதலில் உச்சக்கட்டத்தை எட்டுவது, பெண்ணைத் திருப்திப்படுத்தாமல் குறுகிய நேரத்திலே உடலுறவை முடித்துக்கொள்வது. எந்தவித முன் விளையாட்டுகளும் இல்லாத மெஷின் போலச் செய்யும் செக்ஸ்… இதெல்லாம் சரியான செக்ஸ் அல்ல என்றும் காமச்சூத்திரம் குறிப்பிடுகிறது. ஏனெனில் பெண்ணுக்கு பதிலாக முதலில் ஆணுக்கு உச்சக்கட்ட இன்பம் கிடைத்துவிட்டால் அதன் பிறகு ஆணால் தொடர்ந்து உடலுறவில் இயங்க முடியாது. ஆனால், இந்நிலை பெண்ணுக்கு இல்லை.

இதனுடன் காமச்சூத்திரத்தில் பல்வேறு வகைகளும் ரகங்களும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாமே எல்லாருக்கும் பொருந்துமா எனக் கேட்டால்… பொருந்தாது என்பதே பதில். கணக்கில் அடங்காத எத்தனையோ வகைகள் இருந்தாலும் அவரவருக்குப் பொருந்துவதை மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. நிறைய செக்ஸ் தொடர்பான காட்சிகள், பொசிஷன்கள் என வீடியோவாகவும் தகவல்களாகவும் நெட்டில் கொட்டிக்கிடக்கின்றன. இதெல்லாம் எல்லாருக்கும் சாத்தியமா? சாத்தியம் இல்லை. இவற்றைப் பார்த்து முயற்சி செய்து இடுப்பு, முதுகு வலி என மருத்துவரிடம் செல்லும் ஆணும் உண்டு; பெண்ணும் உண்டு.

Sex

மில்க்கிவே - பால்வெளியில் பளிச்சிடும் ஒரு பயங்கரமான பொருள் கண்டுபிடிப்பு

new sex positions

new sex positions

Twitter

இணையத்தில் காணும் பொசிஷன்களை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள்

இன்டர்நெட்டில் இருந்தவற்றைத் தான் முயற்சி செய்து, அது ஏதோ தொடர் வலியைக் கொடுத்து எமர்ஜென்ஸியாக மருத்துவமனைக்கு வருவதாக மகப்பேறு சார்ந்த மருத்துவரும் செக்ஸ் நிபுணரும் சொல்கின்றனர். இத்திரைப்படங்களைப் பார்த்து நம்மால் இப்படிச் செய்ய முடியலையே என்ற ஏக்கம் சந்தேகம் சிலருக்கு மன உளைச்சலைத் தரும். எல்லோரும் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. இது இயல்பு. அதுபோலத்தான் நெட்டில் கொட்டிகிடக்கும் பொசிஷன்களும்…

பொதுவாக ஒரு ஆணுக்கு முதல் முறையில் காம உறவில் ஈடுபடுகையில் வேகம் அதிகமாக இருக்கும். அதனால், சீக்கிரம் விந்து வெளியேறும். ஆனால், பெண்ணுக்கு இது தலைகீழ். பெண்ணுக்கு முதல் முறையில், காம உறவில் ஈடுபடுகையில் வேகமும் ஆர்வமும் குறைவு. புணர்ச்சி பரவசம் அடைவது தாமதமாகவே நடக்கும்.

ஆனால், அந்த ஆண் இரண்டாவது முறையாகக் காம உறவில் ஈடுபடுகையில், வேகம் குறைவு. ஆனால் பெண்ணுக்கு ஆர்வமும் அதிகம்; வேகமும் அதிகம். புணர்ச்சி பரவசம் சீக்கிரமாகவே கிடைக்கலாம். இச்சை தணியும் வரை ஆணுக்கும் பெண்ணுக்கும் புணர்ச்சி பரவசத்தின் அமைப்பு இவ்வாறே இருக்கிறது. பெண்ணுக்கு முன் ஆண் புணர்ச்சி பரவசம் அடைந்துவிட்டால் பெண்ணுக்கு முழுமையான இன்பமும் பரவசமும் கிடைக்காமல் போகும்.

இது அடிக்கடி தொடர்ந்தால், இருவருக்கும் சலிப்பும் சண்டைகளும் வரும். அவரவரின் உடலின் தேவை, நிறைவேறாமல் போவது. ஒருவித மன சலிப்பு வரலாம். இதைப் பல பெண்கள் வெளியே சொல்வதும் கிடையாது. சில ஆண்கள் வெளியில் தன் நண்பர்களுடன் இதைப் பற்றிப் பகிர்ந்துகொள்வதுண்டு. ஆனால், பல ஆண்களும் பெண்களைப் போல வெளியில் சொல்லாமலேகூட இருப்பார்கள். இருவருக்கும் கஷ்டம்தான். இருவருக்கும் மனம் தொடர்பான எரிச்சல் உணர்வோ கோபமோ சலிப்போ அதிகரித்துக்கொண்டே போகலாம். இருவருக்கும் உறவில் இடைவெளி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

premature ejaculation

premature ejaculation

Twitter

விந்து விரைவில் வெளியேறாமல் இருக்க மனரீதியான கட்டுப்பாடு வேண்டும்

பொதுவாக, ஆண்கள் காட்சிகளால், திரைப்படங்களால்கூட சலனப்படுவது உண்டு. ஆனால், பெண்கள் இவற்றைப் பார்த்து சலனப்படுவதில்லை. பெண்கள் உணர்வு ரீதியாகத் தூண்டப்படும்போது மட்டுமே உணர்ச்சிவசப்படும் நிலைக்குச் செல்வார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் ஆண்கள் அவசரம் காட்டினால், பெண்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. அந்தப் பெண் ஈடுகொடுக்கவில்லை என்ற எண்ணம் வளரும். ஏதோ ஜடம் போலத் தோன்றும். விரைவில் இருவருக்குமே சலிப்பு வந்துவிடும். ‘2 நிமிட டார்ச்சர்’ என்றே அவர்கள் செக்ஸை நினைக்கின்ற சூழல் வந்துவிடும். இது முழுக்க முழுக்க மனவேதனையே கொடுக்கத் தொடங்கும்.

ஒரு ஆண் தன் மனைவிக்கு முன்னரே உச்சக்கட்டத்தை விரைவில் அடைந்து விடாமல் தடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித் தடுத்துக்கொண்டால் விந்து சீக்கிரம் வெளிப்படுவதைத் தாமதிக்கலாம். இதை ஒவ்வொரு ஆணும் மன ரீதியான எண்ணத்தாலும் தன்னுடைய அனுபவத்தாலும் விந்து வெளிப்படுவதைத் தாமதிக்கக் கற்றுக்கொள்ளலாம். மனதை மீறி எண்ணத்தை மீறி உடல் தன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் விரைவில் விந்து வெளியேறும் ஆணுக்குச் சிகிச்சை அவசியம். மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெறலாம்.

strawberry

strawberry

Twitter

உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்

இதனுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடலும் நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உணவுகளே பல நேரங்களில் மருந்தாகப் பயன்படுகிறது. அவை பசித்துப் புசிப்பதில் மட்டுமே சாத்தியம். காதல் பெருக்க உணவுகள் என்று ஒரு பிரியாணியைச் சாப்பிட்டுவிட்டு கால்கிலோவோ அரைகிலோவோ பழங்களைச் சாப்பிட கூடாது. வயிறு முட்ட உணவுடன் நிகழ்த்தப்படும் செக்ஸின் நிலை எப்படி உடல்நலத்தைக் கெடுக்கும் என்பதை முன்பே பார்த்தோம். உணவு உண்ட பின், செரித்த 2-3 மணி நேரத்துக்குப் பிறகே செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவை பழங்களாக மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்தது. ஓரிரு மணி நேரத்தில் செரிமானமாகிவிடும். உங்களது காதலை பெருக்கவும் பழங்கள் உதவுகிறது.

அவ்வகையில் பழங்கள் சில… காதல் பெருக்கும் கனிகளாக இருக்கின்றன. காதல் பெருக்கும் கனியாக ‘மாதுளை’யை சொல்கிறது சீன மருத்துவம். மேலும், கருப்பு காய்ந்த திராட்சை, ஸ்டாபெர்ரி, சிவப்புக் கொய்யா போன்றவை காதலுக்கான உணவுகளாம். உடல் நோய்களோடு மனநோய்களையும் போக்கும். காதல் பெருக வழி செய்யும் கனிகள் இவை. மேலும் சில உணவுகளை அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

முந்தைய பகுதியைப் படிக்க

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : யாருக்கு இன்பம் அதிகம் ? - 9

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com