காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வலியில்லாத செக்ஸூக்கு என்ன வழி? - 21

அவளின் உடலில், உறுப்பில் திரவம் சுரந்திருக்காது என்பது பல ஆண்களுக்குத் தெரிவதில்லை. வலி வரும். எரிச்சல் வரும். ரணமாகும்… இது பெண்ணுறுப்பில் உண்டாகும்.
SEX
SEXTwitter

சென்ற பகுதியில், பெண்ணுறுப்பை நுழைக்க, ஒரு திரவம் சுரந்திருக்க வேண்டும் எனப் பார்த்தோம். இங்கே சிலருக்குக் கேள்வி எழலாம். உச்சக்கட்ட இன்பத்தைப் பேசிவிட்டு, ஆணுறுப்பை நுழைப்பது அதன் பிறகு எனக் குறிப்பிடப்படுகிறதே என… காம உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் மூலம் பெண்ணைக் கிட்டவிட்ட உச்சக்கட்ட இன்பத்தைத் தொடும் நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டு அதன் பிறகே ஆணுறுப்பைப் பெண் உறுப்பில் நுழைக்கச் சொல்வது என…

ஒரு ஆணின் சுகத்துக்கு அடையாளமாக, ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையும் பெண்ணின் சுகத்துக்கு அடையாளமாகப் பெண்ணுறுப்பில் திரவம் கசிவதும்தான். இப்படிதான் நவீன செக்ஸ் அறிவியல் கூறுகிறது. பல ஆராய்ச்சிகளைச் செய்து நவீன செக்ஸ் நிபுணர்களும் சொல்கின்றனர்.

Sex
SexTwitter

பெண் உறுப்பில் திரவம் கசிந்த பின்னரே ஆணுறுப்பை நுழைக்க வேண்டும் எனக் காமச்சூத்திரத்தில் சொல்லப்படுகிறது. அப்போதுதான் காம உறவின்போது இருவருக்குமே வலி இல்லாமல் இருக்கும். இதைப்பற்றிப் பல ஆண்கள் தெரியாமல், விறைப்புத்தன்மை வந்ததுமே நுழைக்க முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சி தவறானது. இதற்குள் பெண் தயாராகி இருக்க மாட்டாள் என்பதே உண்மை. அவளின் உடலில், உறுப்பில் திரவம் சுரந்திருக்காது என்பது பல ஆண்களுக்குத் தெரிவதில்லை. வலி வரும். எரிச்சல் வரும். ரணமாகும்… இது பெண்ணுறுப்பில் உண்டாகும்.

இதன் விளைவாக, திரவம் சுரக்காமல் உறவில் ஈடுபட்டால் பெண்ணுக்கும் வலியும் எரிச்சலும் ஏற்படும். சுகம் கிடைப்பதற்குப் பதிலாக வலி, எரிச்சல், அவஸ்தை அனுபவம் ஏற்பட்டு செக்ஸ் மீது வெறுப்பு வரச் செய்யும். பெண்ணுக்கு செக்ஸ் மீது ஆர்வம் குறைந்துவிடும். அதன்பிறகு கணவன் கட்டாயப்படுத்துவதால், மனைவி ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். இயல்பான ஒத்துழைப்பு பெண்ணிடமிருந்து கிடைக்காமல் போகலாம். அப்புறம் பல ஆண்கள், பெண்களை ஜடம் என்கிறார்கள். ஆனால், ஜடம் எனச் சொல்வதற்கு முன், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைக் கவனிக்கத் தவறுகிறார்கள்.

SEX
SEXTwitter

பெண்ணுறுப்பை ஆண் தனது கைவிரல்களால் உரசித் தூண்டிவிட வேண்டும். அப்போதுதான் உறுப்பில் திரவம் சுரக்கும் எனக் காமச்சூத்திரம் சொல்கிறது. இதையேதான் நவீன செக்ஸ் அறிஞர்களும் சொல்கிறார்கள். அதை நவீன செக்ஸ் நிபுணர்கள் நிரூபித்தும் இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் ‘கிளிடோரிஸ்’ என்கிற வாய்ப்பகுதிதான், பெண்ணின் மிக சென்சிடிவ்வான செக்ஸ் உறுப்பு. பெண் மீது ஆண் படுத்து உறவில் ஈடுபடும்போது, ஆணுறுப்பு கிளிடோரிஸில் மீது சரியாக உரசாது. எனவே பெண்ணுக்கு உறவில் ஆர்வம் வரவேண்டும் என்றால், ஆணுறுப்பை நுழைப்பதற்கு முன்பாக கிளிடோரிஸை விரல்களால் உரச வேண்டும். இதுபோல செய்திடச் சீக்கிரம் பெண்களுக்கு இன்பம் கிடைக்கும் என்று செக்ஸ் அறிவியல் நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். இதைக் காமச்சூத்திரம் முன்பே சொல்லியுள்ளது.

SEX
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான இன்பமான உறவுக்கு அடிப்படையை மூன்று கட்டளைகள் உள்ளன. இதை வழிமுறைகள் என்றுகூடச் சொல்லலாம்.

  1. பெண்ணை உறவில் நல்ல ஈடுபாட்டோடு இணையச் செய்ய வேண்டும். அதாவது பெண்ணுக்கும் காம உறவில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

  2. பெண்ணுறுப்பில் திரவம் சுரந்திட வேண்டும். பெண்ணுறுப்பில் திரவம் சுரந்தால்தான், உறவு எளிமையாக, வலி இல்லாமல் இருக்கும்.

  3. திரவம் சுரந்த பிறகே, ஆணுறுப்பைப் பெண்ணுறுப்பில் நுழைக்க வேண்டும்.


இந்த மூன்று வழிமுறைகளையும் பின்பற்றினால் மட்டுமே இருவருக்கும் இன்பம் கிடைக்கும். பெண்ணுக்கு வலி, எரிச்சல், ரணம் இல்லாமல் உறவு இருக்கும். பெண்ணுக்கோ ஆணுக்கோ சலிப்பு இல்லாமல் உறவு நீடிக்கும்.

வலி இல்லாத செக்ஸ் மட்டுமே இன்பம் தரக்கூடியது. வலி, எரிச்சல் உள்ள செக்ஸ் இன்பம் தரக்கூடியது அல்ல. பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வலி ஏற்படலாம். உரசலின் போது, ஆணுக்கும் வலி வரும். ஆகவே, மேற்சொன்ன மூன்று வழிகளையும் பின்பற்றினால்தான் வலியில்லாத செக்ஸை இருவரும் பெற முடியும்.

- தொடரும்

SEX
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: உச்சக்கட்டம் அடையவில்லை - கண்டுபிடிப்பது எப்படி? - 20

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com