காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

குடும்ப உறவுகளில் 70% மேல் வரும் பிரச்சனைகளுக்கு ‘செக்ஸ்’ மிக முக்கியக் காரணியாகத் தொடர்ந்து வருகிறது. குடும்ப கோர்ட்டுகளும் இதையே சொல்கின்றன. செக்ஸூக்கு எது முக்கியம்? நேரமா? காதலா? ஆரோக்கியமா? காமம்மா? சூழ்நிலையா? அறிவா? அனுபவமா? இப்படியான கேள்விகளுக்குப் பதில்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்!

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்!

Pixabay

செக்ஸ் என்றதும் முகம் சுளிப்பதும் கம்மிய குரலில் பேசுவதும் கண்களில் உற்சாகம் பிறப்பதும் இயல்பு. இதெல்லாம் ஒவ்வொருவரின் தேவையைப் பொறுத்து அவரவரின் ரியாக்‌ஷனும் வெளிப்படும். காமத்தை மறைத்து பொத்தி வைக்கலாமா? அப்படி அடக்கி வைத்தால் என்ன ஆகும்? செக்ஸ் பற்றி அறிந்துகொள்ளப் பல புத்தகங்களை நாம் மார்க்கெட்டில் பார்க்க முடியும். செய்திகளை நெட்டில் படிக்க முடியும். எதற்காக இவ்வளவு புத்தகங்கள்? தகவல்கள்? இதனால்தான் பல பாலியல் பிரச்சனைகள் சமூகத்தில் வருகின்றன என்கிறது ஒரு கூட்டம். உண்மை எது? இந்தத் தவறான நம்பிக்கைகளுக்கு வெளியில் ரொம்பத் தூரத்தில் உள்ளது. இல்லற வாழ்க்கைக்கு நிலையான அறிவும் புத்தியும் வேண்டும் என்பதை உணர்த்தவே இத்தனை புத்தகங்களும் விழிப்புணர்வுகளும். செக்ஸ் பற்றி அறிந்து கொள்வதாலோ செக்ஸ் பற்றிய பல சந்தேகங்களுக்கு விடை காண்பதாலோ குற்றம் ஒன்றும் கிடையாது. செக்ஸ் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கணும்? எப்படி அமைந்தால் சமூகத்தோடு முரண்பாடு இல்லாமல் சந்தோஷமாக வாழ முடியும் என்று கற்றுத் தருவதே இத்தொடரின் நோக்கம்.

செக்ஸும், குடும்ப உறவு சிக்கல்களும்

செக்ஸும், குடும்ப உறவு சிக்கல்களும்

Pixabay

செக்ஸும், குடும்ப உறவு சிக்கல்களும்

குடும்ப உறவுகளில் 70% மேல் வரும் பிரச்சனைகளுக்கு ‘செக்ஸ்’ மிக முக்கியக் காரணியாகத் தொடர்ந்து வருகிறது. குடும்ப கோர்ட்டுகளும் இதையே சொல்கின்றன. செக்ஸூக்கு எது முக்கியம்? நேரமா? காதலா? ஆரோக்கியமா? காமம்மா? இடமா? சூழ்நிலையா? அறிவா? ஆற்றலா? அனுபவமா? இப்படியான கேள்விகளுக்குப் பதில்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பொதுவாக செக்ஸ் என்றதும் முதலில் நினைவுக்கு வரும் புத்தகம், ‘காமசூத்திரம்தான்’. மேற்கத்திய நாட்டினருக்கே செக்ஸ் என்றால் என்ன? என்று கற்பித்தத்தும் இந்நூல்தான். 1950-ம் ஆண்டில் செக்ஸ் அறிஞர்களும் செக்ஸ் பற்றிய மருத்துவ ரீதியான பட்டப்படிப்பு படித்த மேதைகளும் சேர்ந்து இணைந்து செய்த ஆய்வு முடிவுகள் வெளியே வரும் வரை மேற்கத்திய நாட்டினருக்கு செக்ஸில் ‘Foreplay’ எனப்படுகிற தூண்டுதல் கலையான முன்விளையாட்டுகளைப் பற்றி எதுவும் தெரியாது. தூண்டுதல் விளையாட்டைக் கற்றுக்கொடுத்தது ‘காமசூத்திரம்’ மட்டும்தான்.

ஆணும் பெண்ணும் காதலில் இருப்பது, கண்களால் ரசிப்பது, கட்டிப்பிடித்து உணர்வுகளைத் தூண்டுவது, விதம் விதமாக வெவ்வேறு இடங்களில் முத்தமிடுவது, பரவச நிலையில் ஆணும் பெண்ணும் இருப்பது, தாம்பத்திய உறவின் உச்சகட்ட இன்பத்தை அனுபவிக்கத் தயாராகுவது போன்றவற்றையெல்லாம் மேற்கத்திய உலகம் அறியவில்லை என்பதே உண்மை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் சேடிஸம்தான். அடுத்தவரை சிரமப்படுத்திக் கொடுமைப்படுத்தி அனுபவிக்கிற செக்ஸ் உறவு மட்டுமே. உலகம் முழுவதும் செக்ஸ் உறவின் ஒரு முக்கியமான அங்கமான, மிகவும் அவசியமான முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துப் புரிய வைத்த முதல் நூல், முக்கிய நூல் காமசூத்திரம் மட்டுமே.

காதலும், காமமும்

காதலும், காமமும்

Pixabay

மன உளைச்சலை தரும் காமம்

செக்ஸ் உறவின் தொடக்கம் எப்படி இருக்க வேண்டும்? முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும் நூல், காமசூத்திரமே. இதை அறிவியல் ரீதியாக விளக்கியதும் இந்நூல்தான்.

பொதுவாக ஒரு பெண் செக்ஸ் உறவுக்குத் தயாராக இல்லை என்ற நிலையில் கட்டாயத்தில் தன் இணையுடன் இணைந்தால் என்ன ஆகும்? வெறுப்பு மட்டுமே வரும். அதீத வெறுப்பும் எரிச்சலும் மட்டுமே மிஞ்சும். எல்லாவற்றுக்கும் தயாராகுவதுபோல செக்ஸூக்கு தயாராகுவது மிகவும் முக்கியம் பாஸ்…

பெண்ணோ ஆணோ செக்ஸ் உறவுக்கு முறையாகத் தயாராகாமல் இருந்து, ஏதோ ஒரு கட்டாயத்தில் செக்ஸில் ஈடுபட்டால்…? அது சுகம் அளிக்காது. மன உளைச்சலேயே தரும். இந்த விஷயம் தொடர்ந்து நடந்தால் முதலில் வருவது சலிப்புதான். இருவரில் ஒருவருக்கு வேண்டுமெனில் இன்பம் கிடைக்கலாம். அதாவது யாருக்கு விருப்பமோ யார் தொடங்கினரோ அவருக்கு வேண்டுமெனில் இன்பம் இருக்கலாம். ஆனால், விருப்பமில்லாமல் இணைந்தவருக்கு முழுக்க முழுக்கத் தன் துணையின் மீது வெறுப்பையே தரும்.

உடலுறவுக்குத் தயாராகாத நிலை, இதுமாதிரியான சூழலில் கொண்டுவந்து சேர்க்கும்.

நாளடைவில் இருவருக்குமே வெறுப்பு உணர்வு எழலாம். சுகம் இல்லாமல் சுமையாகத் தெரியலாம். காதல் இல்லாமல் கோபம் உண்டாகலாம். மன அமைதி கெடலாம். தன் துணையைப் பார்த்தால் எரிச்சல் மட்டுமே நிலைக்கலாம். உறவுக்கான முழுமையான கிளர்ச்சியை ஏற்படுத்தாமல் தன் துணையை அழைத்து செக்ஸில் ஈடுபட்டால், ‘ரெண்டு நிமிட வேலைக்கு ஏன் இவ்வளவு தொந்தரவு கொடுக்கிறீங்க’, என்ற அதீத எரிச்சலின் வெளிபாடே பதிலாக வந்து அமையும். ஏதோ ஒரு மெஷின் மாதிரியான வாழ்க்கைக்கு இருவரும் தள்ளப்படுவீங்க… பிடிக்காத வேலையைச் செய்வது போல… பிடிக்காத புத்தகத்தைப் படிப்பது போல…பிடிக்காதவரிடம் கட்டாயத்துக்காக பேசுவது போல… பிடிக்காமல் இருவரும் சேரும் மெஷின் வாழ்க்கைக்கு விளைவாக ‘மூட் அவுட்’ மட்டுமே நிலையானதாக மாறிடும். ஒருவரின் முகத்தைப் பார்த்தாலே பிடிக்காமல் போய்விடும்.

தெரியாமல் செய்கிறோமா தெரிந்து செய்கிறோமா என்ற குழப்பத்திலே இருவரும் இருக்க, வருத்தமே மிஞ்சும். முறையாகக் கற்றுக்கொள்ளாமல் எந்தக் கலையும் சரியாகப் பழக முடியாது. கற்று கொண்டு செய்ய வேண்டிய கலைகளில் ஒன்று, மன்மதக்கலையும்கூட… கற்றுக்கொள்வதில் தவறில்லை; வெட்கப்படத் தேவையுமில்லை. கட்டாய செக்ஸ், சுகம் அளிக்காது என்பதே ஆழமான உண்மை. ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உண்மை இதுதான். விருப்பமில்லாத செக்ஸ், சித்திரவதையாகும். இது கணவன் மனைவி உறவாக இருந்தாலும் அதேகதிதான்.

காதல், காமம்

காதல், காமம்

Pixabay

குழந்தை பேறும், செக்ஸும்

இப்படித்தான் பலபேரும் குழந்தைபேறுக்கு வேண்டாவிருப்பாக, செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். குழந்தை வேண்டும் என்பதற்காக, சமூகத்தின் கேள்விக்கான பதிலுக்காக… மெஷின் போல வேலை செய்கின்றனர். பிள்ளைக்குட்டி பெறும் மெஷின்களாக… இது தவிர்க்கப்பட வேண்டும். புரிதலுக்கான புள்ளியில் அனைவரும் நகர வேண்டும். குழந்தைப்பேறுக்கு வெறும் செக்ஸ் மட்டும் போதுமா? காதல் தேவையில்லையா…? தேவையில்லை என்று மறைமுகமாகச் சொல்கிறது இன்றைய ஃபர்டிலிட்டி சென்டர்கள்.

குழந்தைப்பேறுக்கு எது அவசியம்? காதலா ஆரோக்கியமா?

ஒரு மட மாது ஒருவனும் ஆகி

ஒழுகிய விந்து சுரோணிதம் கலந்து - பட்டினத்தாரின் பாடல் வரிகள்

அழகியாக, இளமையாக, மகிழ்ச்சியாக, உற்சாகமான பெண்ணாக இருந்த கருமுட்டையைக் காண்பதற்காகவே அழகனாக, இளமையானவனாக, மகிழ்ச்சியானவாக, உற்சாகமானவனாக ஒரு நல்ல காதலனாகப் பல நாள் காத்திருந்தவனாக, தவித்திருப்பவனாக ஒருநாள் வாய்ப்பு கிடைத்ததும் திடீரென ஓடிவந்து காதல் செய்து முத்தமிட்டுக் கலவி செய்து ஒன்றாகச் சேரும் விந்து அணு… இதே குணங்களுடன் உள்ள பல விந்தணுக்களை முந்திக்கொண்டு ஒன்று மட்டும்… தரமானது மட்டும்! ஓயாத உழைப்பை செய்து வெற்றி கண்ட அந்த ஒன்று மட்டும்… தி கிரேட்… தி பெஸ்ட்… ஆனால், மாட்டிக்கொண்டான்..! யாரிடம்?

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்!

டாடா குழுமம் : இப்படியும் ஒரு முதலாளி - ஆச்சர்ய வரலாறு | பகுதி 2

காதலும் காமமும்

காதலும் காமமும்

Pixabay

யாரையையுமே கொஞ்சம்கூடக் கண்டுகொள்ளாத அந்தப் பெண்ணிடம்; பெண்ணின் கருமுட்டையிடம்… தான் மட்டும் தனியாகத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெண் கருமுட்டையைச் சூழ்ந்து காதல் செய்ய வந்த விந்தணுக்களின் கூட்டம்தான் அவை. வேகத்துடன் ஆர்பாட்டத்துடன் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு ஓடி வந்த விந்தணுக்கள் கூட்டமெல்லாம் சோர்ந்துபோய்விட்டன. சில விந்தணுக்கள் மயங்கியேவிட்டன. சில விந்தணுக்கள், கருமுட்டையின் மீது படர்ந்து போய், பரவலாகக் கிடந்து ஓய்வும் எடுக்கின்றன. சில விந்தணுக்கள் வீழ்ந்தும் சூழ்ந்தும் அப்பாவியாகக் கிடக்கின்றன. சில விந்தணுக்களோ “ ‘பாவம்!’ தான் எதற்காக வந்தோம்” என்ற வேலையையே மறந்துவிட்டன. சில விந்தணுக்களோ தூங்கிபோயின. இப்படித் தரமில்லாதவர்கள் எல்லாம் நீக்கப்படுவார்கள். இயற்கையின் வழியிலே…இயற்கையின் சாட்சியால், செயலால்… தரமான, தகுதியான, அந்த உழைக்கும் விந்தணு மட்டும் கருமுட்டைக்குள் நுழையும். அதற்கு மட்டுமே இயற்கை அனுமதி தந்துள்ளது.

ஒரு ஆணின் வேலை, அதாவது அந்த விந்தணுவின் வேலை அப்போதே தொடங்கிவிட்டது! இதைத்தான் பட்டினத்தாரின் வரிகளும் சொல்கிறது.

ஒரு நல்ல காதலான விந்தணுவும் அதேபோல் ஒரு நல்ல காதலியாகக் கருமுட்டையும் இருப்பது குழந்தைப்பேறுக்கு மிகவும் அவசியம். ஆக, காதலும் முக்கியம் ஆரோக்கியம் அதைவிட முக்கியம். இதற்கெல்லாம் அடித்தளம் காதல், காமம், இருவரின் விருப்பமும்கூட. விந்தணுவும் கருமுட்டையும் காதலிக்க வேண்டுமெனில் இணை சேரவேண்டுமெனில் ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் கூடும் கலவியைத் தொடரவேண்டும்.

(தொடரும்)

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com