காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2

காமத்தில் இரண்டு வகை உண்டு. சாதாரணக் காமம் மற்றும் விசேஷ காமம். அதென்ன விசேஷ காமம் என்கிறீர்களா? இன்றைய பகுதியில் அதைப் பற்றிப் பார்க்கலாம்.
Lust

Lust

Facebook

கடந்த பகுதியில் மேற்கத்திய நாட்டினருக்கு செக்ஸில் ‘Foreplay’ எனப்படுகிற தூண்டுதல் கலையான முன்விளையாட்டுகளைப் பற்றி எதுவும் தெரியாது எனப் பார்த்திருந்தோம். ஆனால், இன்றளவிலும் சில ஆண்களுக்கு செக்ஸ் என்பது ‘2 நிமிட வேலையாகத்தான்’ உள்ளது. இவ்வாறு தாம்பத்திய வாழ்க்கை மேற்கொண்டால் சலிப்பு வருவதோடு தேடலும் வரும். தேடல் எவ்வகையிலும் இருக்கலாம்? துணையை தேடியோ அல்லது செக்ஸ் கேட்ஜெட்ஸை தேடியோ அல்லது மனஉளைச்சல் ஆகி சிகிச்சையைத் தேடியோ… இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவ வாழ்க்கை முறை அடிப்படையில் அமையும். மலம், சிறுநீர் எப்படி கழிக்க வேண்டுமோ ‘உடலுறவு கொள்ளுதல்’ என்ற உணர்வும் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதுவும் ஒருவகை உடலின் கழிவுதான். இதனை மனக்கட்டுபாடுகளாலோ சமூக நெருக்கடிகளோ அமுக்கிவிட முடியாது.

செக்ஸ் விஷயத்தில் திறமையாக நடந்துகொள்வது எப்படி? அந்தத் திறமை குறைந்தால் அதைத் திரும்பப் பெறுவதற்கான சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்வது முக்கியம். ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ ஏற்படும் செக்ஸ் ஈர்ப்பும் இச்சையும் இயல்பான விஷயம். இயற்கையான ஒன்று. செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம்கூட ஈர்ப்பு இல்லாதவருக்குச் சிகிச்சை தருவது கடினம். ஆனால், ஈர்ப்பும் ஆர்வமும் இருந்து செக்ஸ் விஷயத்தில் உள்ள உடல் மற்றும் மனகோளாறுகளை மிகச் சுலபமாக செக்ஸாலஜி நிபுணர்களிடமிருந்து சிகிச்சை பெற்றுக் குணமடைந்துவிடலாம்.

Foreplay

Foreplay

Twitter

சாதாரணக் காமம்,விசேஷ காமம்

காமத்தில் இரண்டு வகை. சாதாரணக் காமம் மற்றும் விசேஷ காமம். மனம் விரும்பி அவர் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு ஒருவரைத் தொடுவதன் மூலம், அந்த உணர்வில் ஸ்பரிசத்தில் கிடைக்கின்ற சுகத்தை, ‘சாதாரணக் காமம்’ என்பார்கள். உடலுறவு வைத்துக்கொண்டு உறவின் உச்சத்தில் விந்து வெளிப்படும்போதும் அதேமாதிரி பெண்களும் திருப்தி அடையும்போதும் மனசும் உடலும் ஒருவித சுகத்தை உணருமே, அதுதான் ‘விசேஷ காமம்’. இந்த இரண்டாவது வகைக் காமத்தை அடைந்தாலே குடும்ப உறவு ஆரோக்கியமாகச் செல்லும். எந்த வித மனக்கசப்பு இருந்தாலும் சூரியனைக் கண்ட பனிப்போல விலகும்.

விசேஷ காமம் கிடைத்திட ஆணும் பெண்ணும் ஒத்துழைப்பது இதில் மிக முக்கியம். அதுவும் ‘Foreplay’ இல்லாத செக்ஸில் ‘விசேஷ காமம்’ கிடைக்காது. முன் விளையாட்டு, தூண்டுதல் இல்லாத செக்ஸில் பெண்களுக்கு வலியும் எரிச்சலும் இருக்கும். இது உடலளவில் ஏற்படக்கூடியது. மனதளவில் வரக்கூடியவற்றை எடுத்துச்சொல்ல ஒரு பட்டியலே தயாரிக்கலாம். அவ்வளவு இருக்கிறது. பெரும்பாலானோர் ‘Foreplay’ என்றால் அது வெறும் தூண்டுதல் விளையாட்டு என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். “இது ஒன்று மட்டும் இல்லை’ என்கிறது காமசூத்திரம். ஒரு நான் வெஜ் மீல்ஸில் என்ன இருக்கும். 5 வகைக் குழம்பு, 3 வகை அசைவ துண்டுகள், வறுவல், பிரட்டல், பொரித்தது, அவித்தது என அனைத்தும் இருக்குமல்லவா… இதைத்தான் ‘விருந்து’ என்கிறார்கள். இப்படித்தான் காம சுகத்தை அனுபவிக்க, காம சாஸ்திரத்தின்கூடவே இணைப்பாகச் சில கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது காமசூத்திரம் நூல்.

ஆயக்கலைகள் 64

ஆயக்கலைகள் 64

Twitter

ஆயக்கலைகள் 64

‘ஆயக்கலைகள் 64’ என நமக்குத் தெரிந்திருக்கும். இதில் 24 உடல் ரீதியான கலைகளும் 20 சூதாட்டம் சார்ந்த கலைகளும் படுக்கையும் படுக்கை அறை சார்ந்த கலைகள் 16-ம், உத்தரக் கலைகள் 4-ம் உள்ளன. பாடும் திறன், இசைக்கருவி வாசித்தல், நாட்டியம் ஆடுவது, ஓவியம் வரைவது, கவிதை எழுதுவது, தோட்ட வேலை, விவசாய வேலை, பல மொழிகளை அறிந்து வைப்பது, காவியங்கள் எழுதுவது, இலக்கணப் புலமை, சதுரங்கம் விளையாடுவது, விலங்குகளுக்குப் போர் பயிற்சி தருவது போன்ற இன்னும் நிறைய… இந்த 64 கலைகளைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்தால்தான் முழுமையான சுகத்தை அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.

இதெல்லாம் இந்தக் காலத்தில் வொர்க் அவுட் ஆகுமா? இந்த 64-ம் ‘வொர்க் அவுட்’ ஆகாதுதான். ஆனால், சிலவற்றை அறிந்துகொண்டுதான் ஆக வேண்டும். இன்றைய வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டால் சிலவற்றை நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் உள்ளன. அறிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை மட்டும் இங்குப் பார்க்கலாம்.

Self Grooming

Self Grooming

Twitter

ஐந்தாவது கலை

5வது கலையே, முகத்தையும் மேனியையும் அலங்கரிக்கும் கலைதான். ஆமாம் இங்குப் பல பேர் தன்னைப் பராமரித்துக்கொள்வதே கிடையாது தாடி, பரட்டை தலை, வெளுத்துபோன கையிலியும் ஷாட்ஸூம் டிஷர்டும்… வியர்வை வாடை வீசும் உடலும், பெண்களோ அழுக்கான ஒரு ‘நைட்டி’, தலையில் ஒரு கொண்டை. இப்படி எத்தனை வீட்டில் இப்படி இருக்கிறார்கள். பொதுவாக ‘நெட்டி’ என்ற ஆடை, இரவில் அணிய வேண்டிய ஒன்று. ஆனால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப நைட்டியோடு ஸ்கூட்டியில் செல்லும் பெண்கள் அதிகம். காய்கறி வாங்க நைட்டியோடுதான். உடை என்பது நம்மில் பாதி. அது தரும் உணர்வு பெரிது. நைட்டி போட்டிருக்கும் பெண்கள் மனநிலையும் கம்பீரமாகக் கட்சிதமாக அணியும் ஏதோ ஒரு வகை ஆடை அணியும் பெண்களின் மனநிலையும் கட்டாயமாக வெவ்வேறாகத்தான் இருக்கும். சற்றுச் சிந்தியுங்கள். உங்களுக்குச் சோம்பல் உணர்வும் சலிப்பும் விரக்தியும் பின்தங்கிய மனநிலையும் ‘நைட்டி’ கொடுக்கத்தான் செய்யும். ‘சிலர் இல்லை, நெட்டி சௌகரியமான உடை’ என்பார்கள். சௌகரியத்தில் குறையில்லை. ஆனால், இந்த உடை நம்மை நம் மனதை சற்று அழுத்தத்தான் செய்யும். சௌகரியமான உடையை விரும்புவோர் கொஞ்சம் மாற்றி அணியலாம். ஃப்ராக்காக, கவுனாக, ஸ்லீவ்லெஸ் மேக்ஸியாக, ஸ்கர்ட் டாப்பாக, பைஜாமாவாக இன்னும் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கத்தான் செய்கிறது. உடையில் என்ன இருக்கு? உடையில்தான் எல்லாமே இருக்கு… லூஸான ஒரு உடையும் ஃபர்பெக்ட் ஃபிட்டான ஒரு உடையிலும் அவ்வளவு வித்தியாசம் உண்டு. லுக் உண்டு. அழகு உண்டு. கம்பீரம் உண்டு. கட்சிதம் உண்டு. கான்ஃபிடன்ஸ் உண்டு.

Avoid smoking

Avoid smoking

Twitter

ஏகாந்தமா துர்நாற்றமா ?

ஓவியம் வரையும் கலை, இது அழகான ஒரு விஷயம் கலைஞனுக்கு ரசனைத் தன்மை வருவது காதல் வாழ்க்கையை அழகாக்கும். மண வாழ்க்கையைச் செம்மையாக்கும், மலர்களை வைத்துப் படுக்கை அறையை அலங்கரிக்கும் கலை, மலர்கள் தரும் வாசம் மனதை மயக்கும்; ரம்மியமாக்கும்; ஸ்ட்ரெஸ் குறையும்; பதற்றமும் நீங்கும். “நகங்களைப் பராமரிப்பது, பற்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, துர்நாற்றம் வீசாத வாயை பராமரிப்பது, தலைமுடியை பராமரிப்பது”. அந்தக் காலத்தில் தலையில் வண்ணம் பூசுவதைக்கூடக் கலையாகச் சொல்கிறார்கள். உண்மைதான், சிகரெட் துர்நாற்றம் வீச கணவர் வந்து முத்தமிட்டால் காமமோ காதலோ எப்படி வரும் சொல்லுங்கள்?

சமீபத்தில் வந்த ஒரு கேஸ், சிகரெட் புடிக்காமல் இருக்க முடியாத கணவர். காதல் ஆசையுடன் தன் இணையுடன் மகிழ்ச்சியான உடலுறவை எதிர்பார்க்கும் அவரது மனைவி. அந்தக் கணவனுக்கு மனைவியைவிட சிகரெட்டின் மீதுதான் காதல் அதிகம். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் பிடிப்பதை கட்டாயமான வேலையாக வைத்திருக்கிறார். ஒரு நாள் சிகரெட்டுக்கு லீவ் விடுங்கன்னு அழுது ஆர்ப்பாட்டம் செய்த மனைவியைச் சமாதானப்படுத்த ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு சிகரெட் கூட அவர் பிடிக்கவில்லை. எனினும் அவரின் வியர்வை, முச்சுக்காற்று, இருமினால் அனைத்திலும் கலந்தே வருகிறது சிகரெட்டின் துர்நாற்றம். இது போன்ற நிலையில் மனைவியின் நிலை சித்திரவதைதான். இன்னும் சில ஆண்களோ சிகரெட் பிடிப்பதை தியானம் என்றும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றும் ஏகாந்தம் என்றும் டயலாக் அடிப்பாங்க… இவர்களின் மனைவியைக் கேட்டால்தான் தெரியும். அது ஏகாந்தமா துர்நாற்றமா என்று…

Bed decoration

Bed decoration

Facebook

மனம் வைத்தால் இல்லறம் நன்றாக இருக்கும்

பல்வேறு பருவங்களுக்கும் விசேஷங்களுக்கும் ஏற்ற வகையில் பலவகையான படுக்கைகளைத் தயாரிப்பதும் ஒரு கலையாம். தண்ணீரை விதவிதமாகச் சேமித்து, வண்ணமயமாக்கி, அடுத்தவரின் மீது தெளித்து விளையாடும் நீர் விளையாட்டும் நீச்சலும்கூட ஒரு வகைக் கலை. இதை இன்றும் சில கிராமங்களில் திருவிழாக்களில் பார்க்க நேரிடும்.

வகை வகையாக உடைகளைத் தேர்ந்தெடுத்துப் பொருத்தமாக அணியும் கலை, உடலை அழுகுப்படுத்த மலர் ஆபரணங்களை உருவாக்கும் கலை, தலை அலங்காரம், திருமணம், திருவிழா போன்ற விசேஷத்துக்கு ஏற்றதுபோன்ற பொருத்தமான உடைகளை அணிந்து, அலங்கரித்துக்கொள்ளும் கலை, காதில் வளையங்கள் அணிவது, வாசனை திரவியங்கள் பயன்படுத்துதல், அணியும் ஆடைகளுக்குப் பொருத்தமான அணிகலன்களை அணிவது, விதவிதமான உணவுகள், இனிப்புகள், பானங்கள் தயாரிப்பது, உள்ளர்த்தம் வெளியில் தெரியாதபடி திறமையாகக் கவி எழுதுவது, வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பது, தலை முதல் பாதம் வரை உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் பொருத்தமான முறையில் மசாஜ் செய்யும் கலை, ரகசியங்களைப் பரிமாறிக்கொள்வது, தேகப்பயிற்சி ஆகியவற்றை இக்காலத்தில் பின்பற்ற முடியும். மனம் வைத்தால்… இல்லறம் நன்றாகச் செல்ல நினைப்போருக்கு இந்தப் பட்டியலில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.

Hygiene Sex

Hygiene Sex

Twitter

செக்ஸூக்கு சுகாதாரம் கொஞ்சம் முக்கியம் பாஸ்

இவற்றிலிருந்து நாம் அறியலாம். செக்ஸ் என்பது முழுக்க முழுக்க உடல் சார்ந்தது மட்டுமல்ல… மனசு சார்ந்ததும் அல்ல… இரண்டும் சார்ந்தது என்று. செக்ஸின் இயல்போ ‘Psychosomatic’ குணம். ‘சைக்’ என்றால் மனசு. ‘சோமாடிக்’ என்றால் உடம்பு. இந்த இரண்டும் முறையாக ஒத்துழைத்தால்தான் செக்ஸில் முழுமையான சுகத்தை அனுபவிக்க முடியும். பசியில் இருக்கும் ஒருவருக்குச் சாப்பாடும் போட்டு திட்டும் திட்டினால்… வயிறு நிறையும் ஆனால் மனசு வெறுமையாகும். அன்போடு பரிமாறினால்தான் மனசும் நிறையும். வெறுமனே பசியாறுவதற்கும் திருப்தி அடைவதற்கும் வித்தியாசம் உள்ளது. செக்ஸிலும் அப்படிதான். மனசும் உடலும் ஒரே அளவில் திருப்தியை உணருகையில் சுகம் கிடைக்கிறது.

சுத்தம் பற்றிக் காமசூத்திரம் இவ்வளவு சொல்லும்போது, ஆண்களும் பெண்களும் சுத்தத்தைக் கடைப்பிடிக்கத்தான் வேண்டும். “ஆணுறுப்பு ஒரு ரப்பர் குழாயைப் போல் உருளை வடிவமான தோற்றத்தில் இருக்கும். அதில் மூன்று வடிவக் குழாய்கள் ஒன்று. இவை திசுக்களால் ஆனவை. இந்த முனைப் பகுதியில் தோலின் உட்புற சுரப்பிகளில் சில கசிவுகள் ஏற்படும். பிசுபிசுப்பு தன்மையுடையது. இதை ‘ஸ்மெக்மா’ என்பார்கள். அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால் கிருமி பாதிப்பு ஏற்படும். இதுபோலப் பெண்களும் சுத்தத்தைப் பராமரிப்பது முக்கியம். தேவையற்ற முடிகளை நீக்குவது. நீரால் கழுவுவது. மிக இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்ப்பது நல்லது. செக்ஸூக்கு சுகாதாரம் கொஞ்சம் முக்கியமே பாஸ்.

இயற்கை மனிதனுக்கு மூன்றுவிதமான உந்துதல் உணர்ச்சிகளைக் கொடுத்துள்ளது. பசி, தூக்கம், காமம். இவை மூன்றும் இல்லாத ஜீவன் இல்லை. பசிக்கும்போது உணவு, சோர்வு வருகையில் தூக்கம். காமம் தேவைப்படுகையில் முறையாக அந்தச் சுகமும். இப்படி இந்த மூன்றும் உரிய நேரத்தில் கிடைக்காமல் இருந்தால்?

பாலுணர்ச்சியின் உந்துதலுக்கு ஒரு மனிதன் ஆட்படும்போது அவனுக்கு உரிய வடிகால் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைக்காவிட்டால்?

(தொடரும்)

பகுதி ஒன்றை படிக்க

Lust

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com