காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உணர்வுகளை தூண்டும் காம விளையாட்டுகள் - 17

படிப்படியாக நெருங்குவதே உறவைப் பலப்படுத்தும். ஒரே நாளில் தன்னை நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் ஆணுக்கு இல்லை. இதை ஒவ்வொரு ஆணும் புரிந்துகொள்ள வேண்டும்.
காமம்

காமம்

Twitter

காம உறவில் எதை முதலில் செய்ய வேண்டும், இரண்டாவதாகச் செய்ய வேண்டும் எனச் சொல்வதெல்லாம் சரிப்பட்டு வராது. அப்படிச் சொல்லவும் முடியாது. எவ்வளவு நேரம் என்றும் குறிப்பிட முடியாது. இதற்கான எந்த வரையறைகள் எதுவும் கிடையாது.

ஒரு ஆணும் பெண்ணும் தங்களது உறவில் இணைந்து, நெருங்கிப் பழகி, உடலால் இணைகையில் எது முதலில், எது பின்னால் எனச் சொல்வது சரியாக இருக்காது. இதுபோன்ற கேள்விகளும் எழாது. காரணம், ‘நேரம் காலம் வரிசை’ என எதுவும் காதல் உறவு பார்ப்பது இல்லை. காமத்தில் காதல் இருக்கையில் எந்த வரிசைகளும் தேவையில்லை.

காமம்

காமம்

Twitter

காம உறவு வலிகளற்றதாக இருந்தாலே போதுமானது. காம உறவில் கிறக்கம் வரவேண்டும் என்பதால் சில செயல்பாடுகள் அவசியமாகின்றன. ஒரு நேரத்தில் தன் துணைக்குப் பிடித்த ஒன்றைச் செய்யலாம். பழக்கப்பட்ட பிறகு எப்படி வேண்டுமானாலும் உறவில் ஈடுபடலாம். காம உறவின் ஆரம்பத்தில் மிதமாகச் செய்துவிட்டு, அந்தப்பெண் உணர்ச்சிவசத்தின் உச்சத்துக்குப் போன பிறகு, தன் துணைக்கு என்ன பிடிக்கிறதோ அதைப் புரிந்துகொண்டு அவளுக்கு ஏற்ப நடந்துகொள்வது சிறப்பு. இதனால், தன் துணைக்கு செக்ஸ் உணர்வு குறைவாக இருந்தாலும், போகப் போக அதை அதிகரிக்கச் செய்ய முடியும். இதனால் செக்ஸ் என்றால் வெறுப்பு வராமல் ஆர்வம் வர செய்ய முடியும்.

காம உறவின் ஆரம்பத்தில் தேவைப்படாது என்றாலும் சிறிது நேரம் கழித்துக் கிறக்கத்தில் ஆழ்ந்திருக்கையில், தூண்டுதல் விளையாட்டுகளைச் செய்யலாம். நன்கு புரிந்துகொண்டு மனதாலும் உடலாலும் நெருங்கிவிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எது முதலில், எது மெதுவாக, எது வேகமாக என்பது போன்ற விஷயங்கள் அவசியமில்லை. புரிதலே போதுமானது. புரிதலை உறவை நடத்திச் செல்லும். ஆனால், புதிதாகத் திருமணமாகிய தம்பதியர்களுக்கு எல்லாம் புதிது. இதில் மனதை தன்பக்கம் வசப்படுத்தப் பெண்ணுக்குப் பிடித்தபடி, நிதானமாகச் செய்யவேண்டியது அவசியம்.

காமம்

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

காமம்

காமம்

Twitter

முன்பு திருமண ஆன நாளில் தம்பதியர் ஒன்று சேரும் வழக்கம் இல்லை. பல சடங்குகள் நடக்கும் அதன் பிறகுதான் தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள். இதனால் அவர்களுக்கு இடையே புரிதல் இருந்தது. இன்றைய காலத்தில் அவ்வாறு இல்லை. எனவே, புரிதல் ஏற்படும் நேரம் இல்லை. நண்பர்கள், மற்றவர்களின் தவறான அட்வைஸால், ஆண் தன்னை நிரூபிப்பதற்காக அவசரம், அவசரமாக எதையோ செய்ய திருமணம் இனிமையாக இருந்தாலும், காம உறவு வலுகட்டாயமாகி, ஆக்கிரமிப்பால்…. செக்ஸ் என்றால் பெண்ணுக்கு வெறுப்பு வருகிற சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

படிப்படியாக நெருங்குவதே உறவைப் பலப்படுத்தும். ஒரே நாளில் தன்னை நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் ஆணுக்கு இல்லை. இதை ஒவ்வொரு ஆணும் புரிந்துகொள்ள வேண்டும்.

காமம்

காமம்

Twitter

தம்பதியர் இடையே காம விளையாட்டுகள் முக்கியம். காம உறவில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து இயங்கும் திறமையுள்ள ஆணும் பெண்ணும் மட்டுமே விளையாட்டுகளில் ஈடுபட முடியும். விரைவிலேயே தளர்ந்து விடுபவர்களுக்குக் காம விளையாட்டுக்கள் ஏற்றதல்ல. ஆனால், காம விளையாட்டால் உறவின் பலம் ஆழமாகும்.

உணர்வுகளை வெகுவாகத் தூண்டிவிடும் காம விளையாட்டுக்கள், ஆணையும் பெண்ணையும் உணர்ச்சிவசத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்லக் கூடியவை. அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாத ஆண்களால் காம விளையாட்டில் ஈடுபடுகையில் விந்து சீக்கிரமே வெளியேறிவிடும். ஆனால், பெண் தயாராக இருக்க, இந்த நேரத்தில் ஆணால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பர். எனவே, காம விளையாட்டில் ஈடுபட நினைக்கும் ஆண்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காமம்

காமம்

Twitter

பொதுவாக ஆண், பெண் இருவருமே உணர்ச்சிவசப்பட்டுக் கூடும்போதுதான், செக்ஸில் இருவருக்கும் இன்பமும் சுகமும் திருப்தியும் கிடைக்கும். ஆனால், ஆண் - பெண் ஆகிய இருவருக்குமே ஒரே நேரத்தில் செக்ஸ் உறவில் வேட்கை ஏற்படுவது கிடையாது. இருவருமே தனித்தனியான உடல்கள், தனித்தனியான உயிர்கள். ஒவ்வொருவருடைய விருப்பங்களும் வெவ்வேறானவை.

இப்படி இருக்கும் சூழலில், ஒருவருக்கு இச்சை ஏற்பட்டு, இன்னொருவருக்கும் அது ஏற்படும் வரை காத்திருப்பதும் சரியாக இருக்காது. எனவே, தனது காதல் துணைக்கும் வேட்கை ஏற்படுத்துவதால் மட்டுமே, உறவில் ஈடுபட முடியும். அப்படிச் செய்வதற்கான பெயர்தான் ‘உணர்ச்சியூட்டி மயங்கச் செய்தல்’ என்கிறார்கள். ஆங்கிலத்தில் ‘சிடக்‌ஷன்’ என்று சொல்வதுண்டு. தன் அன்பான துணைக்குப் பிடித்தவற்றைச் செய்து அவரைத் தூண்டுவது ‘சிடக்‌ஷன்’. இதில் பல வகைகள் உள்ளன.

• தொடரும்

காமம்

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செக்ஸ் உறவுக்குத் தேவையான ஒரு பயிற்சி! - 16

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com