மன ஆரோக்கியத்தை பாதுகாக்குமா ஆயுர்வேதம்? அறிவியல் கூறும் ஹெல்த் சீக்ரெட்ஸ்!

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தோஷங்களின் ஆதிக்கம் அவர்களின் ஆரோக்கியத்தையும் ஆளுமையையும் பாதிக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்து உடலை சமநிலைக்குக் கொண்டுவந்து, நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதே ஆயுர்வேதத்தின் குறிக்கோள்.
ஆயுர்வேத அறிவியல் கூறும் ஹெல்த் சீக்ரெட்ஸ்!
ஆயுர்வேத அறிவியல் கூறும் ஹெல்த் சீக்ரெட்ஸ்!Canva
Published on

உடல்நலம், தனிப்பட்ட பராமரிப்பு முறைகள் மாறிவருகிறது. உலகில், பண்டைய இந்திய அறிவியலான ஆயுர்வேதம், ஆரோக்கியம் பற்றிய அதன் மருத்துவப் போதனைகளில் மிக உறுதியாக உள்ளது. 5000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், ஆயுர்வேத போதனைகள் இன்னும் பொருத்தமானவையாகவே உள்ளது.

இது 'வாழ்வியலுக்கான அறிவியல்' என்று அழைக்கப்படுகிறது. தினசரி வாழ்க்கை நடைமுறைகளாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கற்றுத்தரும்படியாக அமைந்துள்ளது.

ஆயுர்வேதம் நோய்களைத் தடுக்க வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது. சரியான உணவு, வாழ்க்கை முறையுடன் ஆரோக்கியத்தைச் சமநிலைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தைப் பராமரிக்க கற்றுத் தருகிறது.

மேலும் மன, சமூக நல்வாழ்வுக்கான ஆரோக்கியமான நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது. இது உலகின் பழமையான சுகாதாரப் பராமரிப்பு முறைகளில் ஒன்றாகும். இவற்றைப் பின்பற்றினால் முழுமையான நல்வாழ்வை வாழ முடியும்.

ஆயுர்வேத அறிவியல் கூறும் ஹெல்த் சீக்ரெட்ஸ்!
பால் தினமும் குடிப்பது நல்லதா? கெட்டதா?

ஆயுர்வேதம் ஆரோக்கியப் பிரச்னைகளுக்கு நம்பகமான தீர்வு

ஆயுர்வேதத்தின் படி, மனித உடல் என்பது திரிதோஷம் (வட, பித்த மற்றும் கபா) என்று பிரிக்கப்படுகிறது. சப்த தாது (நிணநீர், வாஸ்குலர், தசை கூடு, இனப்பெருக்க அமைப்புகளின் ஏழு அடிப்படை திசுக்கள்) மற்றும் உடல் கழிவுகள் ஆகியவற்றின் கலவையாகும். இவற்றின் சீரான செயல்பாடு நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம்.

இவற்றில், மூன்று தோஷங்கள் உடலியல் செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றன. மேலும் அவற்றில் ஏற்றத்தாழ்வு நோய்களை உருவாக்குகின்றன. திரிதோஷக் கோட்பாடு ஆயுர்வேதத்தில் ஒரு தனித்துவமான கருத்தாகும். மேலும் இது தனிப்பட்ட மருத்துவ அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது. ஒவ்வொருவருக்கும் இந்தத் தோஷங்களின் அளவு வெவ்வேறு விகிதத்தில் இருக்கும்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தோஷங்களின் ஆதிக்கம் அவர்களின் ஆரோக்கியத்தையும் ஆளுமையையும் பாதிக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்து உடலை சமநிலைக்குக் கொண்டுவந்து, நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதே ஆயுர்வேதத்தின் குறிக்கோள். ஆயுர்வேதம் இந்த ஏற்றத்தாழ்வைகளைச் சரிசெய்ய உதவுகிறது. உகந்த ஆரோக்கியத்தை அடைய சரியான சிந்தனை, உணவு, வாழ்க்கை முறையைப் பரிந்துரைக்கிறது.

ஆயுர்வேதம் எண்ணற்ற தாவரவியல், கனிம மூலங்களை மருந்தாகவும் ஆரோக்கிய நலன்களுக்காகவும் வழங்குகிறது. அஸ்வகந்தா, குடுச்சி, துளசி, வேம்பு, சீரகம், பெருஞ்சீரகம் போன்ற மூலிகைகள் பொதுவாக அஜீரணம், இருமல், சளி என ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நிலைகளில் பயன்படுத்தப்படும். 

ஆயுர்வேத மூலிகைகளின் நன்மைகளை மக்கள் உணர்ந்து வருவதால், வீட்டில் கிடைக்கின்ற மூலிகைகளை முடி, தோல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பழக்கம் பொதுவானதாகி வருகிறது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மக்கள் இயற்கை மற்றும் தாவர அடிப்படையிலான மூலிகைகளை வைத்து அழகு, பராமரிப்பு பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். நிறுவனங்களும் இதைச் சார்ந்து செயல்படுகின்றன. இது ஆயுர்வேதத்தின் பிரபலத்தை அதிகரிக்க உதவியுள்ளது.

மக்களின் பல்வேறு உடல்நலப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில், குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பாரம்பரிய மருந்துகளின் முக்கியப் பங்கை இந்திய அரசாங்கம் அங்கீகரித்திருப்பது நல்ல விஷயம். மேலும், பழங்கால ஆயுர்வேதக் கொள்கைகளுக்கு ஆதரவாக அதிக ஆதாரங்களை நிறுவுவதற்குச் சமகாலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, ஆயுர்வேத வைத்தியங்களின் மேல் உள்ள நம்பிக்கையையும் அதிகரிக்க உதவுகிறது.

ஆயுர்வேத அறிவியல் கூறும் ஹெல்த் சீக்ரெட்ஸ்!
தண்ணீரை எப்படி உடலுக்கு மருந்தாக்குவது? வெறும் தண்ணீர் குடிக்க நோய் தீருமா ?

ஆயுர்வேதம் : தனிப்பட்ட , சமூகச் சுகாதாரப் பராமரிப்பு

பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் தனிப்பட்ட , சமூகச் சுகாதாரப் பராமரிப்புகளைப் பின்பற்றுவது எளிது.

1. தினச்சார்யா (தினசரி வேலை)-

சூரியன் உதிக்கும் முன் சீக்கிரம் எழுந்திருத்தல், உணவுப் பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி, உறங்கும் முறைகள் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

2.ரிதுச்சார்யா (பருவகால விதிமுறைகள்) -

இது பருவங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட தினசரி பழக்கங்களை உள்ளடக்கியது. நம் உடல் ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு மாதிரி செயல்படுகிறது. கோடை காலத்தில் நீர் உணவுகளை உண்பது, லேசான உணவை சாப்பிடுவது, அடிக்கடி குளிப்பது போன்ற தொடர்புடைய பழக்கங்களைக் கடைப்பிடிப்பது நல்லது.

3.சத்விருத்தா (நன்னடத்தையின் குறியீடு) -

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நமது நல்ல நடத்தையுடன் சமூக நடத்தையும் சமநிலையாக இருக்க வேண்டும்.

சரியான உணவும் ஊட்டச்சத்தும்:

ஆயுர்வேதம் சரியான உணவுப் பழக்கத்துக்குப் பின்னால் உள்ள அறிவியலையும் நமக்குக் கற்பிக்கிறது. எப்பொழுது உண்ண வேண்டும், எந்த வகையான உணவுகள் நமக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், நம் உடலில் உள்ள சில பிரச்னைகளைக் குணப்படுத்த உதவும் உணவுகள் என்ன என்பதைக் கற்பிக்கிறது. நமது உணவுப்பழக்கமானது உடல் மற்றும் உணர்ச்சி நலனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற முக்கியமான உண்மைகளைச் சொல்கிறது.

மன ஆரோக்கியம்:

குணங்கள், திரிதோஷம், பஞ்சபூதம் ஆகியவை ஆயுர்வேத மனநல தத்துவத்தின் அடிப்படைகள். பிரகிருதி என்பது ஒரு தனிமனிதனின் தோஷங்கள், குணங்களின் கலவையாகும். இதில் மாற்றம் ஏற்பட்டால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். பாரம்பரிய உணவும் வாழ்க்கை முறைகளும் சீரான மன நிலைக்கு உதவும். மேலும் மருத்துவர் வழிகாட்டுதலின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அடிப்படைக் காரணம் இருப்பதாக ஆயுர்வேதம் கருதுகிறது. எனவே சிகிச்சையை விடத் தடுப்பு முறைக்கு அதிகக் கவனம் செலுத்துகிறது. சத்தான உணவு, நல்ல உணர்வுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் நமது தோஷங்களின் மூன்று சக்திகளையும் சமநிலைப்படுத்துவதன் மூலம் நோய்களைத் தடுக்கலாம். இந்த முழுமையான வாழ்க்கை முறையானது, நமது ஒட்டுமொத்த நலனைக் கவனித்துக்கொள்ளும். 

வேகமாக மாறிவரும் பரபரப்பான வாழ்க்கை முறைகளால் நம் உடல், மனநலம் கெடுகிறது. நாம் அனைவரும் தீவிரமாகத் தேட வேண்டியது பணத்தை அல்ல… அமைதியையும் நல்ல உணவையும் ஓய்வையும் நல்ல சூழலையும் நல்ல வாழ்க்கை முறையையும்தான். இவை இருந்தால் உடல், மன ஆரோக்கியம் நல்முறையில் இருக்கும்.

ஆயுர்வேத அறிவியல் கூறும் ஹெல்த் சீக்ரெட்ஸ்!
Obesity : "டீ-யினால் உடல் எடையை குறைக்க முடியும்" - சித்த மருத்துவர் அமுதா | Herbal Tea

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com