குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயோடிக்குகள் - குடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்குமா?

சிறியவயதாக இருந்த போது எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயோடிக்குகள் வளர்ந்த பிறகு மைக்ரோபயோட்டா, குடல் நரம்பு மண்டலம் மற்றும் குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறது ஆய்வு.
குழந்தை (Representational)
குழந்தை (Representational)Pixabay
Published on

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் எனப்படும் ஆன்டிபயோடிக்குகளை அதிகமாக உட்கொள்ளும் குழந்தைகள் வளரும் போது, அவர்களுக்கு செரிமானப் பிரச்னைகள் ஏற்படும் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் குழிவினர் எலிகளில் ஆன்டிபயோடிக்களைப் பயன்படுத்தி ஒரு சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

The Journal of Physiology என்ற இதழில் வெளியான அந்த ஆய்வு முடிவுகள், ஆன்டிபாடிகள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றன.

சிறியவயதாக இருந்த போது எலிகள் எடுத்துக்கொண்ட ஆன்டிபயோடிக்குகள் வளர்ந்த பிறகு மைக்ரோபயோட்டா, குடல் நரம்பு மண்டலம் மற்றும் குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறது ஆய்வு.

குழந்தையாக இருந்த போது ஆன்டிபாடிகள் எடுத்துக்கொண்டால் வளர்ந்த பின்னர் இரப்பை மற்றும் குடல் கோளாருகள் ஏற்படுகிறது. வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகின்றன என்பதே ஆய்வின் சாரம்.

இந்த ஆய்வுக்காக புதிதாக பிறந்த எலிக்கு வாய் வழியாக 10 நாட்கள் தொடர்ந்து vancomycin என்ற ஆன்டிபாயோடிக் மருந்தை கொடுத்துள்ளனர்.

ஆறு வாரங்களில் அவை வளர்ந்த பின்னர் குடலின் அளவு, வடிவம், செயல்பாடு, மைக்ரோபயோட்டா, நரம்பு மண்டலம் ஆகியவற்றை கவனித்து குடலில் ஏற்படுள்ள பாதிப்புகளின் அளவைக் கண்டறிந்தனர்.

குழந்தை (Representational)
இரட்டை குழந்தைகள்... இருவேறு தந்தை... ஒரே பிரசவம் - அரிய நிகழ்வுக்கு மருத்துவர் விளக்கம்!
antibiotics
antibioticsPexels

அந்த பாதிப்புகளைக் கொண்டு தான் ஆய்வு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

எலிகள் மனிதர்களுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் குடல் பகுதியில் வேறுபாடு இருக்கிறது. எலிகள் விரைவாக வளருவதனால் அவற்றின் குடல் மனிதர்கள் அளவு முதிர்ச்சியடையாதவையாக இருக்கும். இதனால் குட்டி எலிகளை குழந்தைகளுடன் நேரடியாகத் தொடர்புபடுத்த முடியாது.

எனினும், காய்ச்சல் போன்ற சிறிய பிரச்னைகள் ஏற்படும் போதும் ஆன்டி பயோடிக்குகள் உபயோகிப்பதை எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

ஆன்டிபாயோடிக்குகளை உபயோகிப்பதன் நீண்ட கால பாதிப்புகள் குறித்து பல வழிகளில் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை (Representational)
உடல் பருமன் அதிகரிப்பு: தமிழக பெண்கள் முதலிடம்? ஆய்வு கூறுவது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com