இரட்டை குழந்தைகள்... இருவேறு தந்தை... ஒரே பிரசவம் - அரிய நிகழ்வுக்கு மருத்துவர் விளக்கம்!

இது போன்ற நிகழ்வுகள் மிக மிக அரிது. ஆனால் நடக்கவே முடியாதது அல்ல. அறிவியல் பூர்வமாக இதற்கு ஹெட்ரோபேரன்டல் சூப்பர்ஃபெகண்டேஷன் (heteroparental superfecundation) என்று பெயர்.
இரட்டை குழந்தைகள் (representational)
இரட்டை குழந்தைகள் (representational)Twitter
Published on

மருத்துவ வரலாற்றில் மிக மிக அரிதாக ஒரு பெண் இரண்டு தந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றுள்ளார்.

பிரேசிலைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு தான் இது நடந்திருக்கிறது. பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண் ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொண்டதன் விளைவாக 9 மாதங்கள் கழித்து இரண்டு தந்தைகளைக் கொண்ட இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். இது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

குழந்தைகளின் தந்தை யார் என்பதில் சந்தேகம் இருந்ததால் குழந்தைகளை தந்தை வழி சோதனை (DNA Test) செய்திருகிறார் அந்த பெண்.

தந்தையாக தான் நினைத்த நபருடன் சோதனையை மேற்கொண்ட பெண், டிஎன்ஏ சோதனையில் அந்த நபர் ஒரு குழந்தைக்கு மட்டுமே தந்தை என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அந்த பெண். "இரண்டு குழந்தைகளுக்கு இரு வெவ்வேறு தந்தையர்கள் இருந்தாலும் பார்ப்பதற்கு இருவரும் ஒரே போலவே இருக்கின்றனர்" எனக் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>மீண்டும் கர்ப்பம்</p></div>

மீண்டும் கர்ப்பம்

Facebook

தான் அந்த நாளில் மற்றொரு நபருடனும் உடலுறவு வைத்துக்கொண்டது நினைவிருக்கிறது என்று கூறிய பெண் அவரையும் வரவழைத்து டெஸ்ட் செய்திருக்கிறார்.

சோதனையின் முடிவுகள் பாசிடிவாக வந்தது தனக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றும். இப்படி நடக்கக் கூடும் என்று தான் ஒரு போதும் நினைத்ததில்லை என்றும் ஊடகங்களிடம் கூறியுள்ளார் அவர்.

இது போன்ற நிகழ்வுகள் மிக மிக அரிது. ஆனால் நடக்கவே முடியாதது அல்ல. அறிவியல் பூர்வமாக இதற்கு ஹெட்ரோபேரன்டல் சூப்பர்ஃபெகண்டேஷன் (heteroparental superfecundation) என்று பெயர்.

இரட்டை குழந்தைகள் (representational)
மனுஷங்க - 1: விபத்தில் காதலி, இமைபோல் காக்கும் காதலன் | கரூர் தினேஷ் - கண்மணி காதல் கதை

இதுகுறித்து அந்த பெண்ணின் மருத்துவர் டுலியோ ஜார்ஜ் ஃப்ரான்கோ கூறியதாவது, "இது நடக்கக் கூடியது தான். இரண்டு கருமுட்டைக்குள் இரண்டு வெவ்வேறான ஆண்களின் விந்தணுக்கள் நுழையும். தாயின் மரபியல் பொருட்களை குழந்தைகள் பகிர்ந்துகொள்ளும். ஆனால் வெவ்வேறான நஞ்சுக்கொடிகளில் குழந்தைகள் வளரும்."

மேலும் அவர், "இது கோடியில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அபூர்வம்" என்றும் கூறியுள்ளார்.

இரட்டை குழந்தைகள் (representational)
திருமண உறவில் ஈடுபட்டு குழந்தை பெறுவதற்கு பரோல் வழங்கி ராஜஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

இதுவரை உலகில் இது போன்ற ஹெட்ரோபேரன்டல் சூப்பர்ஃபெகண்டேஷன் 20 மட்டுமே பதிவாகியிருக்கிறது என்றுக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு குழந்தைகளையும் தந்தைகளில் ஒருவர் பார்த்துக்கொள்கிறார். அவர் இருவருக்கும் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார் என்றும் குழந்தைகளின் சான்றிதழில்களில் ஒருவரின் பெயரே இடம் பெறும் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பலவகையான இரட்டையர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஒரே பிரசவத்தில் ஆணும் பெண்ணும் கூட பிறந்திருக்கின்றனர். ஆனால் இரண்டு தந்தையர்களுக்கு குழந்தை பிறப்பதென்பது உண்மையில் ஆச்சரியமான ஒன்றுதான். இயற்கையில் எப்போதுமே கற்பனைக்கு எட்டாத சுவாரஸ்யங்கள் இருக்கவே செய்கிறது.

இரட்டை குழந்தைகள் (representational)
ஐந்து அப்பாக்கள், ஆறு குழந்தைகள், ஒரே பெயர்: இங்கிலாந்து பெண்ணின் துணிவு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com