வெடிக்குண்டை கண்டுபிடிக்கும் இயற்கை போலீஸ் - ஒரு மருத்துவ பதிவு

இந்தப் பூ இல்லையென்றாலும் அந்தப் பூச்சியால் வேறு பூக்களிடமிருந்து தேனை எடுக்க முடியும். ஆனால், இந்தத் தாவரத்துக்குப் பல்கி பெருக இந்தப் பூச்சி மிகவும் அவசியம். எனவே, அந்தப் பூச்சியைப் படைத்தது பூவா? இயற்கையா? படைத்தது இயற்கை என்றால்? அது ஏன் இப்படி ஒரு பூவையும் பூச்சியையும் படைத்திருக்க வேண்டும்?
Bee

Bee

Pexels

முதலில் கோழி வந்ததா? இல்லை, முட்டை வந்ததா? இந்தக் கேள்விக்கு நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், கோழியை இயற்கைப் படைத்தது. பின்னர், கோழியானது முட்டையை இட்டிருக்கும். தானாக முட்டை கோழியின் வயிறு போன்ற ஒரு அமைப்பு இல்லாமல் முட்டை உருவாகி இருக்க முடியாது. டார்வினும் இயற்கையைப் பற்றி நிறைய விஷயங்களை முன்னிறுத்தினார். அவர் மடகாஸ்கர் இடத்துக்குச் சென்ற போது, அங்கே 11 அங்குலம் உள்ள அங்கிரோக்கம் என்ற பூவை ஆராய்ச்சி செய்தார். அந்தப் பூவில் தேன் உள்ளது.அந்தப் பூவில் மகரந்த சேர்க்கை நடந்து அந்தத் தாவரம் பல்கி பெருக 11 அங்குல நீள உறிஞ்சு குழல் கொண்ட ஒரு பூச்சி தேவை. 40 ஆண்டுகளுக்குப் பின்பு இதே அளவில் ஒரு பூச்சி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பூ இல்லையென்றாலும் அந்தப் பூச்சியால் வேறு பூக்களிடமிருந்து தேனை எடுக்க முடியும். ஆனால், இந்தத் தாவரத்துக்குப் பல்கி பெருக இந்தப் பூச்சி மிகவும் அவசியம். எனவே, அந்தப் பூச்சியைப் படைத்தது பூவா? இயற்கையா? படைத்தது இயற்கை என்றால்? அது ஏன் இப்படி ஒரு பூவையும் பூச்சியையும் படைத்திருக்க வேண்டும்?

NewsSense

பூவில்லாமல் தேனீ வாழ முடியாது. ஏனென்றால் அதில் தேனீக்கான உணவு உள்ளது. தேனீ இல்லாமல் தாவரங்கள் பல்கி பெருகாது. தேனீயை கவர்ந்து இழுக்கப் பூ பூக்க வேண்டும். பூவுக்குள் தேன் இருக்கும் எனத் தேனீக்கு எப்படித் தெரிந்தது? எல்லாம் இயற்கையின் அற்புதம். பார்க்கத்தான் சிறிய பூச்சி இந்தத் தேனீ. ஆனால், இது பறக்கும் இஞ்சினியர். ரசாயனம் படித்த பெரிய கெமிஸ்ட் இந்தத் தேனீ. தேனீக்களிடம் அறிவுள்ள மனிதர்களே தோற்றுபோவார்கள்.

NewsSense

மனிதர்களால் முடியாத காரியத்தைச் செய்யும்

தனது ஆண்டெனாவில் 12 கணுக்கள், 6000 நுண்துளைகள் உள்ளன. இதைக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள வாசனையை அறியும் இந்தத் தேனீ... எந்த அளவுக்குத் தெரியுமா? 500-ல் ஒரு பங்கு. ஒரு சொட்டு வாசனை 500 சொட்டு நீரில் இருந்து…மிக மிக மெல்லிய அளவில் உள்ள மணத்தைக் கூடத் தன் உணர்கொம்புகளால் அறியும். மனிதர்களால் இதை நினைத்துகூடப் பார்க்க முடியாது.

வெடிக்குண்டை கண்டுபிடிக்கும் இயற்கை போலீஸ்

நாய்களைப் போலத் தேனீக்கும் மோப்ப சக்தி அதிகம். புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள், வெடி மருந்துகளை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றன தேனீக்கள். அமெரிக்க ராணுவம் தேனீக்களுக்குப் பயிற்சியளித்து உபயோகப்படுத்துகிறது.

பறக்கும் இஞ்சினியர்

மொத்தம் தேனீக்கு 5 கண்கள். 3 கண்கள் அருகில் உள்ளதையும் 2 கண்கள் தூரத்தில் உள்ளதையும் பார்க்கும். சரியாகத் தரை இறங்கி முட்டிக்கொள்ளாமல் இருக்க 3 கண்கள் உதவுகிறது. நவீன கால விமானிகள் தரை இறங்க பயன்படுத்தும் கருவிக்குச் சமம் இது.

<div class="paragraphs"><p>Bee</p></div>
Ukraine War : அமெரிக்காவிலிருந்து சென்று உக்ரைனில் சிக்கியிருந்த மகளை மீட்ட தந்தை !

தேனீயின் அறிவு

தேனீக்கள் தலையைத் திருப்பாமலேயே எல்லாத் திசைகளையும் பார்க்கும். கடுகைவிடச் சற்று பெரிய அளவில் உள்ள கண்களை வைத்துக்கொண்டு புறஊதா கதிர்களைப் பார்க்கும். தேனீக்களும் மனித முகங்களையும் பூக்களையும் அடையாளம் காண்கிறது. மனித மூளையில் 20 ஆயிரத்தில் ஒரே பங்கே அளவுள்ள மூளையை வைத்துக்கொண்டு மனித முகங்களையும் பூக்களையும் தனித்தனியாக அடையாளம் காண்கிறது.

மனிதன் ஏமாறுவான்… தேனீ ஏமாறாது…

பருப்பு அளவு உள்ள தலையில் அதன் வாயில் 4 தாடைகள். தேனை உறிஞ்சி எடுக்க உறிஞ்சுகுழல் நீண்டதாக உள்ளது. பேனாக்கத்தியை போல மடக்கும்; நீட்டும். அதன் நாக்கு அதன் உடலளவில் பாதி இருக்கும். நாக்கின் நுனியில் கரன்டிக்கு இருப்பது போலப் பள்ளம். பூந்தேனை உறிஞ்சி எடுக்க முடியாத ஆழமான பூக்களில் இருந்து நாக்கில் நக்கி, வழித்து விடும். அதன் நாக்கு இனிப்பை துல்லியமாகக் கணிக்கும். சர்க்கரையைவிட 500 மடங்கு இனிப்பான சாக்ரின் என்ற ஒரு பொருளை மனிதர்கள் இனிப்பென்று ஏமாறுகிறோம். ஆனால், தேனீக்கள் ஏமாறாது. அந்த அளவுக்கு அதன் நாக்கும் உறிஞ்சு குழலும் துல்லியத்தின் ருசி அறிபவை.

பறக்கும் ரசாயனக்கூடம்

அதன் தொண்டையில் 2 சுரப்பிகள், கூடு கட்டும் போது மெழுகை இளக வைக்கப் பயன்படுகிறது. மேலும் அந்தச் சுரப்பு பூவிலிருந்து எடுக்கப்படும் பூந்தேனைத் தேனாக மாறச் செய்யும். இன்னும் 2 சுரப்பிகள் தாடையில், இதிலிருந்து தன் குஞ்சுகளுக்குத் தேனீப்பால் எனும் “ராயல் ஜெல்லி”யை சுரக்கிறது. வயிற்றில் 8 மெழுகு சுரப்பிகள். இதில் சுரக்கும் மெழுகை கொண்டு கூடு கட்டும். மேலும் விச சுரப்பி உள்ளது. உற்பத்தியாகும் விஷத்தை தான் கொட்டும்போது செலுத்துகிறது. இதைக்கொண்டு தகவல் பரிமாற்றம் செய்யும். பூந்தேனை தேனாக மாற்றும் அதன் வயிறு.

டைம் சேவர் பூச்சி

தேனீயின் கால்களால் அது சுவை அறிகிறது. இனிப்பா கசப்பா என்று. அதன் சிறிய ஆறு கால்களில் டூல்ஸ் பாக்ஸை போல நிறையக் கருவிகள். பிரஷ்கள், கூறிய முட்கள், இடுக்கிகள், சீப்புகள், மெழுகு கத்திரிக்கோல் எனப் பல்வேறு அமைப்புகள்தான் அதன் கால்கள். இரண்டு முன்னங்கால்களால் கண்களைச் சுத்தம் செய்யும். தேன் எடுக்கையில் பூவின் மகரந்தம் உடலில் ஒட்டிக்கொள்ளும், அதைத் துடைக்கக் கால்கள். அமர்ந்து செய்தால் நேரமாகும் என்பதால் பறந்து கொண்டே தேன் எடுக்கும், தேனை உடலின் கூடையில் போடும், தன் உடலை சுத்தம் செய்யும், மகரந்தம் பறந்துவிடாமல் இருக்கத் தன் எச்சில் வைத்து உருண்டைகளாக்கும் என எல்லாமே பறந்துகொண்டே செய்கிறது. இன்னும் இன்னும் ஏராளமான வேலைகளைச் செய்கிறது.

புழு டூ பூச்சி

ஒரே நேரத்தில் நம்மால் மூச்சுவிடவும் குடிக்கவும் முடியாது. ஆனால், தேனீ இப்படிச் செய்யும். நிமிடத்துக்கு 150முறை சுவாசிக்கும். பூந்தேனை உறிஞ்சு எடுக்கும். ராணித்தேனீ சிற்றறைகளில் முட்டையிட்ட மூன்றாவது நாள் வேலைக்கார தேனீக்களால் அடைக்காக்கப்பட்டுப் புழுக்களாக மாறுகிறது. 6 நாட்கள் வரை செவிலி தேனீக்களால் ஊட்டப்படும் உணவை ஓயாமல் உண்ணும். 6வது நாள் உண்பதை நிறுத்தும் அறைக்குள் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொள்ளும். புழுக்கள் கீழே விழாமல் இருக்கக் கட்டும்போதே தலைப்போன்ற அமைப்பை வைத்துக்கட்டும். அறையின் வாசலை மெழுகால் மூடிவிடும். அறைக்குள் நீட்டி நிமிர்ந்து படுத்த புழுக்கள் தேன்பட்டைக்கொண்டு மூடிக்கொள்ளும். தன்னைச் சுற்றி மூடிக்கொள்ள ராணியாகப் போகும் புழுக்கு ஒரு நாளும், வேலைக்காரத் தேனியாகப்போகும் புழுவுக்கு 2 நாட்களும், ஆண் தேனீயாகப் போகும் புழுக்கு 3 நாட்கள் ஆகும். பிறகு உருமாற்றம் நடந்து புழு பூச்சியாக மாறும். முழுமையாக மாறிய தேனீ மெழுகினால் அடைக்கப்பட்ட வாசலை சுத்தரித்துக்கொண்டு ராணி தேனீ 19 நாளும், வேலைக்கார தேனீ 21வது நாளும், ஆண் தேனீ 24வது நாளும் வெளியேறும்.

<div class="paragraphs"><p>Bee</p></div>
41 ஆயிரம் அடி : திடீரென தீர்ந்த எரிபொருள், திகைத்துப் போன விமானி - திக் திக் நிமிடங்கள்!

உழைப்புக்கேற்ற தூக்கம்

தேனை கஷ்டப்பட்டு எடுத்து வரும் தேனீ, அது இஷ்டத்துக்குத் தேனை சாப்பிட முடியாது. தேன் பைக்கும் அதன் இரைப்பைக்கும் ஒரு தடுப்பு உள்ளது. தேனீ, இரவில் நீண்ட உறக்கத்தை எடுக்கும். 12 ½ மணி நேரம் உறங்கும். பகலில் வேலை இல்லாவிட்டால், உடனே உறங்கிவிடும். இதற்குக் காரணம் அதன் கடும் உழைப்பு.

ஈ, கொசு போலக் கிருமிகளைப் பரப்பாது

தேனீக்கள் புயல் வருவதை முன்பே அறிந்துகொள்ளும். ரொம்ப ரொம்பச் சுத்தம் பார்க்கும். இறந்த பூச்சியை அதன் கூட்டில் நாம் போட்டுவிட்டால் உடனே பிணம் தூக்கி தேனீக்களால் அந்தப் பிணத்தை வெளியே வீசப்படும். தன் சிறகுகளால் கூட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளும். சேரும் கழிவுகளை 10 கெஜ தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று போட்டுவிடும். பெரிய எதிரியான சுண்டெலி, பல்லி, பெரிய வண்டுகள் தன் கூட்டுக்கள் வந்துவிட்டால் பெரிய உடலை தூக்க முடியாது எனவே அதைத் துண்டுகளாக்கி தூக்கி கொண்டு போட்டுவிடும். தேன் கூட்டில் கிருமிகள், வைரஸ், பாக்டீரியா என எதுவுமே கிடையாது. அவ்வளவு சுத்தம். அது பெரிய கெமிஸ்ட் ஆயிற்றே.

வீரமான பூச்சி இனம்

வாழ்நாள் முழுவதும் உழைக்கும் தேனீக்கள் அவைகளின் இறுதி மூச்சு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்துவிட்டால் கொண்டு வந்த பூந்தேன் சுமையை ஒப்படைத்துவிட்டு தள்ளாடி தள்ளாடி வெளியே சென்று இறந்துவிடும். 99% கூட்டிற்கு உள்ளே இறப்பதில்லை. நோயுள்ள பூத்த மலர்களில் தேனீ, தேனை எடுக்காதாம். நாற்றம் அதற்குப் பிடிக்காதாம். தலையைத் துண்டித்து விட்டாலும் தேனீக்கள் இயங்கும். துண்டிக்கப்பட்டுப் பல நிமிடங்கள் ஆனாலும் தன் எதிரியை எதிர்க்கும். கொட்டிய இடத்தோடு அதன் கொடுக்கு பிய்த்துக் கொண்டு போய்விட்டாலும் சிறிது நேரம் கொட்டுப்பட்ட இடத்தின் மீது விஷத்தை அதுவாகவே செலுத்திக்கொண்டிருக்கும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com