உடலுறவு : உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

செக்ஸின்போது ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகமாக இருக்கும். அதனுடன் எண்டார்பினும் (Endorphin) சேர்ந்து, வலியைக் குறைக்கும் ஹார்மோன்களை உற்பத்திசெய்யும்.
உடலுறவு : உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

உடலுறவு : உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

Pexels

Published on

காமம், களவி இது எதுவும் ச்ச்சீ விஷயம் அல்ல. உண்மையில் ஒருவர் உற்சாகமாக இருக்க உடலுறவு மிக மிக முக்கியம்.

தினசரி வாழ்க்கை மகிழ்ச்சி

ஒருவரின் தாம்பத்ய உறவு குறைபாடு இல்லாமல், முழு திருப்தியுடன் அமையுமானால், அவரின் தினசரி வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். எப்போதும் உத்வேகத்துடனும் புத்துணர்வுடனும் இருப்பார். எந்த வேலையையும் ஈடுபாட்டுடனும் விரைவாகவும் செய்து முடிக்கும் திறன் பெற்றவராக இருப்பார்.அனுபவத்தில் இதை நீங்களேகூட உணர்ந்திருக்கலாம்.

உடலுறவு : உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : எது சிறந்த செக்ஸ்? - 10

Pexels

நன்மைகள் ஏராளம்

`டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன்கள் நிகழ்த்தும் வித்தைகளால் உண்டாகும் காம உணர்வு, தாம்பத்யத்தில் தணியும்போது உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

அப்போது, மூளை ஆக்ஸிடோசின் (Oxytocin) என்னும் ஹார்மோனைச் சுரக்கச்செய்யும். மனிதர்களிடம் காதல், காம உணர்வை உணரச்செய்வதால், இதை, `காதல் ஹார்மோன்’ (Love Hormone) என்றும் சொல்வதுண்டு.

மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது இந்த ஹார்மோன் சுரக்கும்போதுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உடலுறவு : உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : யாருக்கு இன்பம் அதிகம் ? - 9

செக்ஸ் எனும் இயற்கை வலி நிவாரணி

செக்ஸின்போது ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகமாக இருக்கும். அதனுடன் எண்டார்பினும் (Endorphin) சேர்ந்து, வலியைக் குறைக்கும் ஹார்மோன்களை உற்பத்திசெய்யும். உடல், அயர்ச்சியிலிருந்து விடுபட்டு ரிலாக்ஸ் நிலைக்குத் திரும்பும். எனவேதான், `உலகின் தலை சிறந்த இயற்கை வலிநிவாரணி’ (Natural Pain Reliever) என்று செக்ஸை வரையறுக்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள்.

இங்கு வலி என்பது மனஅழுத்தம், மனக்குழப்பம் உள்ளிட்ட மனரீதியான சிக்கல்கள், அயர்ச்சி, அலுப்பு, சோர்வு, கோபம், வெறுப்பு, பொறாமை என அத்தனை எதிர்மறை உணர்வுகளையும் குறிக்கும்.

Pexels

இதய நோயை தடுக்க

இதயம் சீராக இயங்குவதற்கும் பேருதவியாக இருக்கிறது. எவர் ஒருவர் தாம்பத்ய வாழ்க்கையில் குறைபாடின்றி இருக்கிறாரோ, அவரை இதயநோய்கள் நெருங்குவதில்லை. இது குறித்து நியூ இங்கிலாந்து ஆய்வகத்தில் (New England Research Institute) ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 40 முதல் 70 வயதுவரையிலான ஆயிரம் ஆண்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள்.

1987-ம் ஆண்டில் தொடங்கிய ஆய்வு, 17 ஆண்டுகள் நடத்தப்பட்டது.

`வாரத்துக்கு இரு முறை செக்ஸ் உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு, இதயநோய்கள் வரும் வாய்ப்பு 45 சதவிகிதம் குறைவு.

மாதத்துக்கு ஒரு முறை அல்லது அதற்கும் குறைவாக செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு, அவர்களைவிட இதயநோய்கள் வரும் வாய்ப்பு அதிகம்’ என்கிறது அந்த ஆய்வு முடிவு.

உடலுறவு : உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

ஷிவானி நாராயனன் - கண்களை காதல் மயமாக்கும் கனவு நாயகி : புகைப்படங்கள்

ரத்த அழுத்தத்தை தடுக்க

அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்வதால், ஈஸ்ட்ரோஜென், டெஸ்ட்டோஸ்டீரான் அளவுகள் சரியாகப் பராமரிக்கப்படும். இது, இதய இயக்கத்தைச் சீராக வைத்திருக்க உதவும். இந்த இரு ஹார்மோன்களில் ஏதாவது ஒன்று அதன் இயல்பான அளவிலிருந்து குறைந்தால், இதயநோய்களும், எலும்பு தொடர்பான ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற (Osteoporosis) நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகமாகும்.

செக்ஸால் பெண்களுக்குக் கிடைக்கும் நன்மைகளும் ஏராளம். தாம்பத்ய உறவில் முழு திருப்தியையும் உச்சத்தையும் தொடும் பெண்களுக்கு இதயநோய்களோடு, உயர் ரத்த அழுத்தமும் வராமல் தவிர்க்கப்படும்.

மெனோபாஸ் பருவத்துக்கு முன்னர் இளமையில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியாக இருக்கும் பெண்களுக்கு, முதுமையில் நோய்கள் வருவது தவிர்க்கப்படும். ஆக, ‘காலத்தே பயிர் செய்’ என்பது எதற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ காமத்துக்குப் பொருந்தும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com