மது அருந்துவதை 30 நாட்கள் நிறுத்துவது பலனளிக்குமா? நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

மது அருந்துபவர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ எதிர்மறை விளைவுகளை சந்தித்தால், குடும்ப அல்லது தொழில் வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக மதுவைக் கைவிடுவது பற்றி சிந்திக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மது அருந்துவத 30 நாட்கள் நிறுத்துவது பலனளிக்குமா? நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
மது அருந்துவத 30 நாட்கள் நிறுத்துவது பலனளிக்குமா? நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?Twitter
Published on

மது அருந்தும் பழக்கம் நம் சமூகத்தில், இளையர்களிடையே அதிகரித்து வருகிறது. சோசியல் டிரின்கர்ஸ் என்ற பெயரில் வாரம் ஒருமுறை அல்லது மாதம் இரண்டுமுறை நண்பர்களுடன் கூடி மது அருந்துவதை பலர் பழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இந்த பழக்கம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிப்பதாக மாறும்போது நீங்கள் கணிப்பதை விட அதிகமாக குடித்திருப்பீர்கள். அதிகமாக குடிக்கும் போது அதற்கு ஏற்ற அழிவுகரமான விஷயங்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.

ஒரே நாளில் 500 மில்லி லிட்டருக்கு மேல் குடிப்பது நம் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தினசரி இப்படி குடிப்பவர்கள் மோசமான விளைவுளை எதிர்கொள்வர்.

குடிப்பவர்கள் ஆல்கஹால் தொடர்பான அவர்களின் மரபணு (குடும்ப) விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மது அருந்துபவர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ எதிர்மறை விளைவுகளை சந்தித்தால், குடும்ப அல்லது தொழில் வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக மதுவைக் கைவிடுவது பற்றி சிந்திக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மது அருந்துவதை ஒரு மாதம் கைவிடுவதனால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து நிபுணர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளலாம்.

மது அருந்துவத 30 நாட்கள் நிறுத்துவது பலனளிக்குமா? நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
குட்டி எலிகளை கொண்டு தயாரிக்கப்படும் சீன ஒயின் - ஒரு விசித்திர தகவல்!

ஆல்கஹாலைக் கைவிடுவது கல்லீரல் நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவும்.

இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் சமநிலைக்கு வரும். சில வகை புற்று நோய்கள் வராமல் நம்மைக் காக்கும்.

அதிகமாக குடித்து வந்த ஒருவர் மது அருந்துவதை நிறுத்தும் போது, அவரது உடலில் நச்சு நீக்கம் நடைபெறும். கல்லீரல் செயல்பாடு சீராகி வீக்கம் குறையும்.

மது அருந்துவத 30 நாட்கள் நிறுத்துவது பலனளிக்குமா? நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
"நானே காண்ட்ராக்டர் எப்படி மது கடையை மூடுவேன்?" - பாஜக எம்.எ.ஏ சொன்ன பதிலால் அதிர்ச்சி!

நல்ல தூக்கம் கிடைக்கும், செய்யும் எந்த செயலிலும் நம் கவனம் அதிகரிக்கும். அதிக ஆற்றலை வெளிப்படுத்த முடியும்.

ஆனால் நீண்டகாலமாக குடித்து வருபவர் இந்த பழக்கத்தை விட்டால் மேல் கூறப்பட்ட நன்மைகள் உடனடியாக கிடைக்காது. ஆனால் தொடர்ந்து குடிப்பதை விட நம் உடல் சிறப்பாக செயல்படும்.

கல்லீரல் மட்டும் தான் நம் உடலிலேயே தானாக குணமாக கூடிய உறுப்பு. எனவே நாம் குடிப்பழக்கத்தை விட்டால் மீண்டும் நிச்சயமாக ஆரோக்கியமான கல்லீரலைப் பெற முடியும்.

மது அருந்துவத 30 நாட்கள் நிறுத்துவது பலனளிக்குமா? நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
கல்லீரல் : இந்த பிரச்னைகள் இருந்தால் உங்கள் கல்லீரல் நலமாக இல்லை - 19 அறிகுறிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com