குட்டி எலிகளை கொண்டு தயாரிக்கப்படும் சீன ஒயின் - ஒரு விசித்திர தகவல்!

இந்த ஒயினில் பலவிதமான சத்துகள் இருப்பதாக சீனர்கள் நம்புகின்றனர்.
குட்டி எலிகளால் தயாரிக்கப்படும் சீன ஒயின் - ஒரு விசித்திர தகவல்!
குட்டி எலிகளால் தயாரிக்கப்படும் சீன ஒயின் - ஒரு விசித்திர தகவல்!டிவிட்டர்
Published on

நீங்கள் தீவிரமான ஒயின் விரும்பியாக இருந்தால் நிச்சயமாக இதனை முயற்சி செய்து பார்க்கலாம்! சீனாவின் மைஸ் ஒயின். இதனை எலிகுட்டி ஒயின் என்று தமிழில் கூறலாம்.

இந்த ஒயினில் பலவிதமான சத்துகள் இருப்பதாக சீனர்கள் நம்புகின்றனர். பாட்டில் நிரம்பி இருக்கும் ஒயினுக்கு கீழிருக்கும் எலி அவர்களுக்கு மிக விருப்பமான ஒன்றாக இருக்கிறது.

இந்த விசித்திரமான பானத்தைப் பற்றி இன்னும் விவரமாக தெரிந்துகொள்ளலாம்.

நம்ம ஊர் டாஸ்மாக்கில் புகுந்து எலிகள் அட்டகாசமாக ஒயின் குடித்துச் சென்ற சம்பவங்களைப் பார்த்திருப்போம். ஆனால் இது அப்படியல்ல...

இங்கு ஒயின் குடிக்கும் எலிகள் இறக்கின்றன. அரிசியை ஊறவைத்து கிடைக்கும் ரைஸ் ஒயினை வைத்து இது செய்யப்படுகிறது.

பிறந்து 3 நாட்களே ஆன குட்டி எலிகள் இதற்கு பயன்படுகின்றன. அவை கண்கள் கூட முழித்திருக்காது. அந்த பிஞ்சு எலிகளை ஒரு பெரிய பாட்டிலில் போட்டு அதன் மீது அரிசி ஒயினை ஊற்றி இருக்கமாக மூடிக்கொள்கின்றனர்.

இந்த பாட்டிலை 12 முதல் 14 மாதங்களுக்கு அப்படியே விட்டுவிடுகின்றனர்.

குட்டி எலிகளால் தயாரிக்கப்படும் சீன ஒயின் - ஒரு விசித்திர தகவல்!
சீனா : அறிவியலாளர்கள் வியக்கும் 630 அடிக்கு கீழ் ஒரு அற்புத உலகம்

ஒயினை வெளியில் எடுத்து காய்ச்சிய பின்னர் குடிப்பதற்கு தயாராகிறது.

இந்த எலிகள் உயிருடன் உள்ளேப் போடப்படுவதனால் அவை அசுத்தம் செய்திருக்கும். இது எலிகறி சாப்பிடுவதனை விட மோசமானது. இந்த அருவருப்பான விஷயத்தை உடலுக்கு மிகுந்த சத்துக்கள் எனச் சொல்லி செய்கின்றனர் சீனர்கள். ஒயினை பருகிவிட்டு அதிலிருக்கும் எலியையும் விரும்பி உண்கின்றனர்.

கல்லீரல் நோய்கள் மற்றும் ஆஸ்துமாவுக்கு மிக நல்லது என்று கூறுகின்றனர்.

சீனாவில் தோன்றிய இந்த பழக்கம் கொரியா மற்றும் இன்னும் சில ஆசிய நாடுகளிலும் தொடர்கிறது. இந்த ஒயினை நீங்கள் பருகுவீர்களா?

குட்டி எலிகளால் தயாரிக்கப்படும் சீன ஒயின் - ஒரு விசித்திர தகவல்!
சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான் - ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் ஒரு உணவு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com