நம் உடல்நலத்தின் மேல் அக்கறைக் கொண்டு, அதற்கேற்றவாறு உணவுப் பழக்கங்களில் நாம் மாற்றங்களை கொண்டுவருவோம். நமது மூளையை பாதுகாக்கும் உணவையும் நாம் எடுத்துக்கொள்வது மிக அவசியமாகிறது.
மூளையின் நலனை பாதுகாக்கும் உணவுகளா? என்று ஆச்சரியப்படவேண்டாம். அதுவும் நம் உடல் உறுப்புகளில் ஒன்று. மூளையின் கட்டளையை ஏற்றே, இருதயம், குடல், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்தும் செயல்படுகிறது. மூளையின் செயல்பாடு நின்றுவிட்டால், நாமும் நின்றுவிடுவோம்.
புரதம், வைட்டமின், கொழுப்பு சத்துக்கள் மூளையின் திசுக்கள் வளர உதவும், எரிச்சலைக் குறைக்கும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதால், நினைவாற்றல் மேம்படும், இந்த உணவுகளை நாம் தவறாமல் சாப்பிட்டு வர, மூளையின் ஆரோக்கியம் காக்கப்படும்.
எந்தெந்த உணவுப் பொருட்கள் மூளையின் நலனை காக்கு, கேடு தரும் என்று இங்கு காணலாம்
பெரி, முட்டை, மீன், நட்ஸ் வகைகள் மூளையின் ஆரோக்கியத்துக்கு நல்லது
இவற்றில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் மூளைக்கு ஆற்றலை தருகிறது. ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி போன்ற பெரி வகைப் பழங்களை நேரடியாக சாப்பிடலாம். சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம், அல்லது காலை வேளைகளில் ஸ்மூதி செய்து அருந்தலாம்.
பெரிக்கள் இயல்பாகவே இருண்ட நிறத்தில் இருப்பதால், இதிலுள்ள flavanoidகள் எரிச்சலை குறைக்க உதவுகிறது.
சால்மன், ஹெரிங் போன்ற மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளன. இவற்றிலுள்ள ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், மூளை செயலிழப்புக்கான வாய்ப்புகள் குறைக்க உதவும்.
வாரத்தில் மூன்று முறை நமது உணவுகளில் மீன் சேர்த்துக்கொள்ள வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்
புரதச் சத்துக்கு மறுபெயர் முட்டை. இதில் கிடைக்கும் ப்ரோட்டீனின் அளவு வேறு எந்த உணவு வகையிலும் கிடைக்காது. கோலின், லுடியென் உள்ளிட்ட ஊட்டச் சத்துகள் சிந்தனை திறனை மேம்படுத்த உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முட்டையேனும் சாப்பிடுவது உடல்நலனுக்கு அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள்
முட்டையை விதவிதமாகவும் சமைத்து சாப்பிடலாம் என்பதால், இதில் ருசிக்கும் பஞ்சமில்லை
பாதம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை தினசரி சாப்பிடுவதால், உடலில் நல்லக் கொழுப்புச் சத்து அதிகரிக்கும். உடல் எடை கூட கணிசமாக உதவுவது மட்டுமல்லாமல், நமது அறிவாற்றல் தோய்வடையாமல் காக்கிறது
சரி, எந்தெந்த உணவுகளை சாப்பிடக் கூடாது?
பொதுவாக சர்க்கரை நிறைந்த உணவுகள், பானங்கள் அனைத்துமே மூளையின் ஆரோகியத்துக்கு கெடுதல் தான். இவற்றை அன்றாடம் சாப்பிடுவதால், நீரிழிவு நோய், இருதய நோய், உடல் எடைக் கூடுவது போன்றவை ஏற்படும்.
மூளை ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அல்செய்மர் நோய், டிமென்ஷியா உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
சிப்ஸ், மில்க்ஷேக்குகள், இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், பாப்கார்ன் போன்ற பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் பொதுவாகவே உடல்நலத்திற்கு கேடு தரும்.
இவற்றிலிருக்கும் அதிக கலோரிகள் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து, உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் மற்றும் உடல் எடையை கூட்டும்
இவை சாதாரணமாகவே உடல்நலத்திற்கு கேடு தான். குடல், கல்லீரலை பாதிப்பதுடன் இவை மூளை செயல் திறனையும் நேரடியாக பாதிக்கின்றன. மது அருந்துவதால் மூளை உடல் பாகங்களுக்கு தக்க சமயத்தில் செய்திகளை அனுப்பாது. இதனால் நமது மெட்டபாலிசம் பாதிக்கப்படும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust