இப்போதே நிறுத்துங்கள்..! இந்த பழக்கங்கள் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்குமாம்!

அதிகமான இளம் நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறை காரணமாக பக்கவாதத்தை அனுபவிக்கின்றனர். இதில் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் அவர்களின் தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் அதிகரிக்கும் மன அழுத்தம் ஆகியவை அடங்கும்.
Lifestyle habits that may increase the risk of brain stroke
Lifestyle habits that may increase the risk of brain strokeTwitter
Published on

வளர்ந்து வரும் நவீன உலகத்திற்கேற்ப நம்முடைய பழக்கவழக்கங்கள், வாழ்கைமுறை மாறிக்கொண்டே இருக்கின்றன. இதனால் நமக்கே தெரியாமல் பல அபாயங்கள் நம்மை சூழ்வது குறித்து நீங்கள் யோசித்ததுண்டா?

கடந்த சில ஆண்டுகளாக, 45 வயதிற்குட்பட்டவர்கள் பல்வேறு பழக்கவழக்கங்களால் மூளை பக்கவாதத்திற்குள்ளாகி வருகின்றனர்.

40 வயதிற்குட்பட்டவர்களில் 10-15 சதவீதத்திற்கும் அதிகமானோர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிகமான இளம் நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறை காரணமாக பக்கவாதத்தை அனுபவிக்கின்றனர். இதில் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் அவர்களின் தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் அதிகரிக்கும் மன அழுத்தம் ஆகியவை அடங்கும்.

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜன் செல்லாதபோது, மூளை செயலிழப்பதுதான் `பிரெய்ன் அட்டாக்’ எனப்படும் ஸ்ட்ரோக். தமிழில், `பக்கவாதம்’. மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால், மூளை செயல் இழந்து மரணம்கூட ஏற்படலாம்.

Alcohol Addiction
Alcohol AddictionTwitter

பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் வாழ்க்கைப் பழக்கம்

மது அருந்துதல்:

ஒரு நபர் நீண்ட காலமாக மது அருந்தினால், தமனியில் மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். ஒருவரின் வாழ்க்கைமுறையில் மதுவைக் கட்டுப்படுத்துவது அல்லது அதை நீக்குவது மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும்.

Lifestyle habits that may increase the risk of brain stroke
எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறீர்களா? - உங்களுக்கு இந்த மனநல பிரச்னை இருக்கலாம்!

புகைபிடித்தல்:

புகைபிடித்தல் மூளை மற்றும் இதய நோய்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுத்தக்கூடியது.

உறக்கம்:

சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்திருங்கள். மூளையில் நேரத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு பகுதி உள்ளது. அது நம் அன்றாட நடைமுறையை நிர்வகிக்கிறது.

சரியான நேரத்திற்கு எழுந்து சரியான நேரத்தில் தூங்குங்கள். தூக்கத்தின் போது பல ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன, இது ஒரு நபருக்கு ஒழுங்கற்ற தூக்க அட்டவணை இருக்கும்போது குறுக்கிடப்படுகிறது.

Food
Food Twitter

உணவுப் பழக்கம்:

நொறுக்குத் தீனிகளை முற்றிலுமாக விலக்கி, பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட அதிக நார்ச்சத்துள்ள உணவை உண்ணுங்கள். இது உணவை நன்றாக ஜீரணிக்க வழிவகுக்கும். ஆனால் உங்கள் உணவுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இல்லை என்றால், மூளை தொந்தரவு செய்யும்.

மன அழுத்தம் :

மன அழுத்தம் ஒரு நபரின் வாழ்க்கை முறையே மாற்றியமைக்கும்.

இதனால் இளைய தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்களுக்கு மூளை பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கிறது என்கிறது சில ஆய்வுகள்.

Lifestyle habits that may increase the risk of brain stroke
Crime Thriller Series பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுமா?- இளைஞர்களை எச்சரிக்கும் ஆய்வு!

உடற்பயிற்சி:

நாளில் 30-45 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. சில சமயங்களில் இவை மன மற்றும் உடலுக்கு அழுத்ததை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Lifestyle habits that may increase the risk of brain stroke
அடிக்கடி தலைவலியால் அவதிபடுகிறீர்களா? இந்த 5 உணவை சாப்பிடுங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com