அல்சர் எனும் குடல் புண்கள் பற்றிய தவறான கருத்துகள் அதிகம் பரவி இருக்கின்றன. மாத்திரை இல்லாமல் அல்சரை குணப்படுத்த முடியாது எனப் பலர் நம்பி வருகின்றனர். மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். இன்னும் சிலரோ வெறும் வயிற்றில் இருந்தால் அல்சர் வரும் எனச் சொல்கிறார்கள். வெறும் வயிற்றுடன் இருப்பவர்களுக்கு அல்சர் வரும் என்றால் நம் நாட்டில் பாதிப் பேருக்கு வரவேண்டிய நோய் சர்க்கரை நோய் அல்ல… அல்சர் நோய்…
சாதாரண மருத்துவ விளக்கத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இவற்றைத்தான். வயிற்றில் ஏற்படும் தொந்தரவுகள், புண்கள், அதனால் ஏற்படும் வலி, எரிச்சல் தொடர்ந்து எரிச்சலுடன் அமிலத்துடன் வரக்கூடிய ஏப்பம் ஆகியவை...
பொதுவாக நாம் நம்பி வருவது, மூன்று வேளை சரியாகச் சாப்பிடாமல் இருந்தால் அல்சர் வரும். அதனால் வேளாவேளைக்கு நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் எனப் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல…
அல்சர் யாருக்கு வருகிறது எனப் பார்த்தோமானால் பசி இல்லாமல் மூன்று வேளைக்கும் சாப்பிடுபவர்களுக்குதான் அல்சர் வருகிறது. இதை ஏற்க மனம் ஒப்புக்கொள்வதில்லை. ரொம்பச் சாதாரண விஷயமிது. புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் அதற்கும் கீழ் உள்ளவர்கள் நம் நாட்டில் அதிகம் பேர் இருக்கின்றனர். நடுத்தரத்துக்குக் கீழ் உள்ளவர்களில் யாருக்காவது அல்சர் வந்திருக்கிறதா எனப் பாருங்கள். அவர்கள் யாருக்கும் அல்சர் வராது. காரணம், அவர்களின் பொருளாதார நிலைக்கு ஒருவேளை உணவு கிடைப்பதே பெரிய விஷயம். இல்லையெனில் ஒரு வேளை கூட உணவு இல்லாமல் போகலாம். இவர்களுக்கு அல்சர் வருவதே கிடையாது.
பொதுவாக நாம் ஒரு அடிப்படையான முக்கிய விஷயத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும். உணவை, பசி எடுத்த பின் சாப்பிடுகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிடும்போது அந்த உணவானது வயிற்றில் சீரணிக்கச் சில சுரப்பு நீர்கள் வேண்டும். பெப்சின், ஹைட்ரோ கிளோரிக் அமிலம் எனப் பல்வேறு சுரப்புகள், நொதிகள் வயிற்றில் சுரக்கின்றன. இந்த உணவை நொதித்து, செரிக்க வைக்க இந்தச் சுரப்புகள் உதவுகின்றன.
ஆனால் சில மருத்துவ முறைகள், நாம் வெறும் வயிற்றில் இருந்தால் இந்தச் சுரப்பு நொதிகள் சுரந்து அல்சர் உருவாகிறது எனச் சொல்கிறார்கள். அதனால், மூன்று வேளை உணவைச் சாப்பிடுங்கள் எனப் பரிந்துரைக்கிறார்கள். இந்தச் சுரப்பு நீர்கள் எங்கிருந்து வந்தன என யோசியுங்கள். சாப்பிடுவதற்கு முன்னரும் அந்தச் சுரப்பு நீர் வயிற்றில் இருந்தன. ஏன் அந்தச் சுரப்பு நீரை கொண்டுள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதி அரித்து, ஓட்டையாகவில்லை? நாம் சாப்பிட்ட பிறகு மட்டுமே சுரப்பு நீர்கள் சுரக்கும். உணவு இல்லாத போது முன்னாடியே சுரப்பு நீர் சுரக்கவே சுரக்காது.
உதாரணத்துக்கு, வாயில் சுரக்க கூடிய உமிழ்நீரை கவனியுங்கள். உங்களுக்கு எதிரில் பிடித்தமான அல்வாவோ ரசகுல்லாவோ அல்லது ஏதோ ஒரு உணவோ எதிரில் இருந்தால்தான் அதைச் சாப்பிட வேண்டும் என்ற உணர்வில் உமிழ்நீர் சுரக்கும். சாப்பிடாமலே இருக்கும்போது உமிழ்நீர் சுரக்காது.
நம் உடலில் உள்ள சுரப்புநீருக்கு தெரியும். எந்த அளவில் உணவு நம் வயிற்றுக்குள் வருகிறதோ அந்த அளவுக்கான சுரப்பு நீரைத்தான் உடல் சுரக்கும். ஆனால், சில மருத்துவ முறைகள் சொல்கிறது, இயல்பாகவே இந்தச் சுரப்பு நீர்கள் சுரக்கும் என்று… அப்படிச் சுரப்பதில்லை.. என்றும் இயற்கை தவறு செய்யாது.
உதாரணமாக, நம் உடல் ஒரு அறிவியல் கூடம். அருகில் ஒரு சப்பாத்தி வைத்துக்கொண்டு சாப்பிடுகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சப்பாத்தியை கையால் பிட்டு எடுக்கும்போது வாயில் உமிழ்நீர் சுரக்கும். இரண்டு சப்பாத்தியை சாப்பிட்டு முடித்துவிட்டோம். அடுத்ததாக மூன்றாவது சப்பாத்தி, நேற்றைக்குச் செய்த சப்பாத்தி, அதைப் பிட்டு எடுப்பது கடினம், அப்படிக் கடினமாகப் பிட்டுக் கையில் எடுக்கும்போது வாயில் உமிழ்நீரும் வயிற்றில் உமிழ்நீர் சுரப்பும் முன்பு சுரந்தது போல் இல்லாமல் வேறு மாதிரி இருக்கும். ஏனெனில் இந்தக் கடின சப்பாத்தியை சுரப்பதற்காக… இந்த உடல் ஒருங்கிணைந்த உடல். செரிமானம் என்று பார்த்தோமானால் எல்லா உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. மனம், கை, வாய், உணவுக்குழாய், மண்ணீரல், மூளை, இரைப்பை, கணையம், கல்லீரல், பித்தப்பை, குடல், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் சில உறுப்புகள் எல்லாம் சேர்ந்து உணவை செரிக்கத் தயாராகின்றன. ஒட்டுமொத்த உடலே வேலை செய்யும் வேலைதான், செரிமானம். அப்படி இருக்க, சுரப்பு நீர் தேவையில்லாமல் உடலில் சுரக்காது. உணவு இல்லாத வேளையில் சுரப்பு நீர் சுரக்காது.
நம் பசி இல்லாத நேரத்தில் நாம் சாப்பிடுகிற உணவானது முறையாகச் செரிமானம் ஆகாத போது, அது உடலுக்குள்ளே தேக்கம் ஆகிறது. இப்போது நல்ல பசியோடு உணவை சாப்பிடும்போது அந்த உணவை செரிமானம் செய்ய உடலுக்கு 30-40 நிமிடங்களே போதுமானது. ஆனால், பசி இல்லாமல் உணவை சாப்பிட்டால், அந்த உணவை செரிக்க 5-6 மணி நேரமோ அதற்கு மேலேயோ ஆகலாம். அந்த 5 மணி நேரம் அந்த உணவானது வயிற்றுக்குள்ளேயே இருக்கும் படிப்படியாக ஜீரணமாகும். அந்த நேரத்துக்குள் உணவில் இருந்து வரக்கூடிய … கவனியுங்கள் உடலில் இருந்து அல்ல… உணவில் இருந்து வரக்கூடிய சுரப்பு நீர்கள்தான் வயிற்றைப் புண்ணாக்குகிறது. புளித்த ஏப்பம், அமில ஏப்பம், சத்தமான ஏப்பம், வாயு பிரச்சனை என அனைத்து தொந்தரவுகளும் உருவாகின்றன.
இது எப்படி என நடைமுறை விளக்கத்துடன் பார்க்கலாம். ஒரு கைப்பிடி சாதத்தை நாம் தினமும் சாப்பிடுகின்ற ஸ்டீல் தட்டில் வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சாதம் காயாமல் இருப்பதற்காக லேசாக அந்தச் சாதத்தில் தினமும் தண்ணீர் தெளித்துகொண்டே இருங்கள். 2-3 நாட்கள் கழித்துப் பார்த்தோமானால், அந்தச் சாதம் கசிந்து ஈரத்தன்மையில் புளித்துப் போயிருக்கும். துர்நாற்றமும் வீசலாம். இன்னும் 8-9 நாட்கள் கழித்துப் பார்த்தோமானால் தட்டு ஓட்டை ஓட்டையாகிவிடும். இந்தத் தட்டு ஓட்டையாகும் அளவுக்கு ஆசிட் எங்கிருந்து சுரந்தது? தட்டில் இருந்தா? உணவில் இருந்தா (சாதம்)? நாம் தெளித்ததும் சாதாரணத் தண்ணீர்தான். நாம் வைத்ததும் தினமும் உண்கின்ற சாதம்தான். ஆனால், என்ன நடக்கிறது என்றால்?
இந்த உணவு அழுகி, அதில் இருந்து கசிய கூடிய நொதிகள்தான் இந்தத் தட்டை ஓட்டையாக்கியுள்ளது. இதேபோலத்தான், நாம் பசிக்காத போது சாப்பிட்ட உணவுகள், முறையாகச் செரிமானம் ஆகாமல் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் அவை கடந்து வந்து நிற்கிறதோ, அந்தப் பகுதிகளில் எல்லாம் உணவில் இருந்து வரக்கூடிய நீரானது புண்களை ஏற்படுத்துகிறது. இதுதான் மூன்று வேளைக்குக்குச் சாப்பிடுவதற்கான நிலை. பசி இல்லாமல் சாப்பிடுவோரின் உடலில் நடக்கும் பாதிப்பு இதுதான்.
இதே யார் பசித்துச் சாப்பிடுகிறார்களோ, பாத்திரம் சுத்தமாவது போல வயிறு முழுக்கச் சுத்தமாகி இருக்கும். காய்ந்துபோன வயிறாக இருக்கும். மீண்டும் பசித்துச் சாப்பிட, உணவு முழுமையாகச் செரிமானமாகும். மீண்டும் காய்ந்து போன வயிறாக மாறும் வரை பசி உணர்வு வரவே வராது. பிறகு வயிறு காய்ந்து போனதும், மீண்டும் பசி எடுக்கும். இந்த மாதிரி ஒருவேளைக்குச் சாப்பிடுபவர்களுக்கும் பசிக்கும்போது மட்டும் சாப்பிடுபவர்களுக்கும் வயிறு சுத்தமாக, காலியான பாத்திரம் போல இருக்கும். எந்தவிதமான வயிற்றுப் புண்கள், அல்சர், எரிச்சல், வாயு பிரச்சனை, புளித்த ஏப்பம் போன்ற எந்தத் தொந்தரவுகளும் வராது.
நாம் பசி எடுத்து சாப்பிட்டாலே போதுமானது. நமக்குத் தேவையான உணவை, உடலானது பசியின் மூலமாகக் கேட்கும். பசியின் அளவை பொறுத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 3 இட்லி அளவுக்கு பசிக்கலாம். இன்னொரு நாளைக்கு 4 இட்லி அளவுக்குப் பசிக்கலாம். எனவே, பசி அறிந்து தேவையான அளவு சாப்பிடுவது மட்டுமே சரியான முறை.
இரவிலும் அதாவது சூரியன் மறைந்த பின்னர்ப் பசி அதிகமாக எடுக்காது. அப்படிப் பசி எடுத்தால், கடினமான உணவு இல்லாமல் லேசான உணவை சாப்பிட்டோமானால் அது முழுமையாக ஜீரணம் ஆகும். உடலுக்குள் எங்கும் தேங்காது. அல்சர், எரிச்சல், வலி, அஜீரணம், புளித்த ஏப்பம், அமில ஏப்பம் போன்ற எந்தத் தொந்தரவுகளும் வராது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust