மனிதர்கள் இறக்கும் வரை உடலில் சேரும் கழிவுகள் சேரும். ஆனால், அவை எப்படிச் சேருகிறது? பார்க்கலாம். கழிவுகள் நம் உடலில் இரண்டு வழிகளில் சேருகிறது. ஒன்று இயற்கையான அதிக அளவில் மாற்றங்களுக்கு உட்படாத உணவை உண்பது. இரண்டாவது, இயற்கை அல்லாத செயற்கை உணவுகளால், மூன்றாவது, பசி இல்லாத நேரத்தில் உண்ணும் உணவுகளால்… அதுமட்டுமல்லாமல் நாம் சுவாசிக்கும் காற்று… இருக்கும் சூழல் மூலமாகவும் உடலில் கழிவுகள் சேருகின்றன.
நாம் அதிகம் இதைப் பற்றி யோசிப்பதில்லை. ஒரு உணவு வகை எப்படிக் கழிவாகிறது எனப் பார்க்கலாம். உதாரணமாக, தினமும் உண்ணும் சோறு எத்தனை மாற்றங்களுக்கு உட்படுகிறது எனத் தெரிந்து கொள்வது நல்லது.
அரிசியைச் சோறாக வேக வைப்பதற்கு முன்பு கழுவுகிறோம். இந்த கழுவுதல் முறை ஏதோ அரிசியில் உள்ள அழுக்கை நீக்குவதுபோலக் கசக்கித் தேய்த்துக் கழுவுகிறார்கள் பலர். உமிக்கும் அரிசிக்கும் இடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் சத்து படிமமும் இப்படிக் கழுவுவதால் நீங்கிவிடுகிறது.
சமைக்கிற கட்டத்துக்குக் கொண்டு வரும் முன் அரிசியை வெண்மையாக்குவதற்காக இயந்திரத்தில் அரிசி தீட்டப்படுகிறது. இந்தத் தீட்டல் செயல்முறையில் தயாமின் என்ற சத்துப் படிமம் நீங்குகிறது.
இப்படி அகற்றப்படும் தவிடு என்ற படிவம் மாவு போல ஒரு விதமான பதத்தன்மையில் இருக்கும். இது உமியை உடைத்தெடுக்கும் இயந்திரத்தில் அரிசி வெளியேறும் குழாயில் மங்கிய பழுப்பு நிறத்தில் ஏதோ பூ பூத்திருப்பது போலக் காணப்படும். அது ருசியாக இருக்கும். அந்த ருசிக்குக் காரணம் அதில் உள்ள நுண் சத்துகள்.
இப்போது தீட்டப்படும் செயல்முறையில், தீட்டலில் அகற்றப்படும் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் ஆரோக்கியமானதுதான். இந்த எண்ணெய் 100% உடலுக்கு நல்லது. இப்படி எடுக்கப்படும் எண்ணெய் நமக்கு அப்படியே கிடைப்பது இல்லை. இந்த ஆரோக்கியமான எண்ணெய்யில் செயற்கையான வேதி பொருட்களை கலக்குகிறார்கள்.
மூன்றாவதாக அரிசி தீட்டலில், இயற்கையான நெல்லில் உமி நீக்குதலும் நடைபெறுகிறது. இதுபோலச் சமைப்பதற்கு மூன்று கட்ட நிலையை அரிசி கடக்கிறது.
உமி என்பது அரிசியின் பாதுகாப்புக் கவசம் போன்றது.நெல்லிலிருந்து உமியைப் பிரிப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அடுத்ததாக உமிக்கும் அரிசிக்கும் இடையிலான தவிடு எனும் சத்துப் படிவத்தை நீக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி நீக்க ஒரே காரணம் இதுதான். அரிசியை வெள்ளையாக உண்ண விரும்புவது... வெண்மை மீதுள்ள மோகத்தால் அரிசியின் சத்தையே இழந்து விடுகிறோம். இப்படித் தானியங்கள், பருப்பு போன்றவற்றைத் தீட்டல் முறை செய்து நிறையச் சத்துக்களை நீக்குகிறோம்.
உதாரணமாக, உலர் கோதுமை மாவை நீர் ஊற்றிக் கலக்கி தோசையாகவோ, சப்பாத்தியாகவோ செய்வதைவிடக் கோதுமையை நேரடியாக ஊற வைத்து ஆட்டி தோசை சுடுவதில் சத்துக்களும் பலனும் அதிகம். உலர் மாவாக அரைக்கையில் அதிக வெப்பம் ஏற்படுவதால் கோதுமையின் நுண் சத்துக்கள் சிதைந்து வீணாகின்றன. அப்படி மிகை வெப்பத்தில் அரைபடும் மாவு மீண்டும் மீண்டும் செயல்முறைக்கு உள்ளாவதால் உடலுக்கு எவ்வித நன்மையும் இன்றி வெறும் கழிவுகளாக உடலில் சேருகின்றன. இதைத்தான் இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி, ஆப்பம் என விதவிதமாகச் சத்து இல்லாத ஒன்றைத் திரும்பத் திரும்பச் சாப்பிடுகிறோம்.
சுவைகளின் தீவிர தன்மையைக் குறைத்து, செரிமானத்துக்கு எளிதான மிதமான சுவை கொண்ட காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உண்டால் போதும். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.
முன் வேளை உண்ட உணவு முழுமையாகச் செரித்த பின்னரே அடுத்த வேளைக்கான உணவை உண்பது சரியான உணவு முறை பழக்கம்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
எனும் திருக்குறள் சொல்வது இதைத்தான். முன்னர் உண்ட உணவு அதற்கு உரிய இடத்திலிருந்து முழுதாகச் செரித்து வெளியாகிவிட்டதா என்பதை அறிந்து அதன் பிறகு பசி வந்ததும் அடுத்த வேளை உண்ணும் உணவுப் பழக்கத்தில் இருக்கும் உடலுக்கு எந்த நோயும் வருவது இல்லை என்று சொல்கிறார் வள்ளுவர்.
அதுபோல வயிறு காலியாகிவிட்டதா என்று கவனித்துச் சத்துக்களை உடல் ஏற்றதை உறுதி செய்து, நன்றாக வறண்டு போகும் அளவு பசித்த பின்பு உண்பதைக் காட்டிலும் சிறப்பானது எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்கத் துவரப் பசித்து
அதே வள்ளுவர், உணவைப் பற்றி… பிடிக்காது என்றில்லை பிடிக்கும் தான். ஆனாலும் அளவு மிகும் போது ‘போதும்’ என்று மறுத்து உண்போமானால் ஆயுசு கெட்டி என்கிறார்.
மாறுபாடில்லாத உண்டிமறுத்து உண்ணின்
ஊறுபஔ இல்லை உயிருக்கு
செரித்த பின்பு நாம் உண்ணும்போது தான் உணவில் உள்ள அனைத்து சத்துக்களையும் உடலால் ஈர்க்கவே முடியும். காய்ந்த நிலத்தில் நீர் பட்டதும் எப்படி நிலம் நீரை ஈர்த்துக்கொள்கிறதோ… அதேபோல வறண்ட, காய்ந்த வயிற்றில் உணவு விழும் போது வயிறும் சத்துக்களை ஈர்க்கும். ஏற்கெனவே உணவு இருக்கையில் மீண்டும் மீண்டும் பசி இல்லாமலே சாப்பிடுபவருக்கு முழுக்க முழுக்கக் கழிவே உடலில் சேரும்.
முந்தைய வேளையில் உண்ட உணவு இன்னும் முழுமையாக்கச் செரிக்கப்படாமல் இருக்கும்போது அதன் மீது மேலும் உண்போமானால் அதன் சத்துகள் செரிக்காமலே கழிவாக வெளியேற்றப்படும். இப்படிதான் பெரும்பாலானோருக்கு நோய்கள் வருகின்றன. பசியில்லாமல் மீண்டும் மீண்டும் உண்ணும் பழக்கத்தால். வேளாவேளைக்கு, நேரம் பார்த்துச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டுப் பசி உணர்ந்து சாப்பிடத் தொடங்குங்கள். மூன்று வேளை சாப்பிடுவது அவசியமில்லை பசி உணர்வு ஏற்பட்டு இரண்டு வேளையோ ஒருவேளையோ சாப்பிட்டாலே போதுமானது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust