மாறிவரும் வாழ்க்கை முறையில், நினைத்த நேரத்திற்கு நாம் சப்பிட்டு வருகிறோம், இது நமது உடல்நலத்தை பெரிதும் பாதிக்கிறது.
அதுமட்டுமில்லாமல், நாம் தினம்தோறும் வெளியில் செல்கிறோம். நாம் பயணம் செய்யும் இடத்தை பொறுத்து, நமது உணவருந்தும் வேளைகள் மாறுபடலாம். சில சமயம், நேரமின்மை கருதி, நாம் சாப்பிடாமலேயே சென்றுவிடுகிறோம்.
அந்த சமயத்திற்கு நமது பசி பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நாள்பட இது உடல்நலத்தை பாதிக்கும்.
நீண்ட தூரங்கள் பயணிக்கும்போது, அல்லது சாப்பிடாமல் பயணிக்கிறோம் என்றால், இந்த உணவுகளை நமது பைகளில் எடுத்துச் செல்லலாம்.
இந்த கடலைகள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். குறைவான அளவில் சாப்பிட்டாலும், பசியை போக்கி, நீண்ட நேரத்திற்கு நம்மை ஆக்டிவாக வைக்கும்.
சிலருக்கு கடலைகளில் ஒவ்வாமை இருக்கலாம், அவர்கள், பாதாம், பிஸ்தா போன்ற டிரை ஃப்ரூஇட்ஸ் எடுத்துச் செல்லலாம்.
இவற்றை சாப்பிடுகையில், தண்ணீர் தாகம் எடுக்கலாம். ஆகையால் நிறைய தண்ணீர் அருந்துவது அவசியம்
இவையும், நாம் சப்பிடும் டிரை ஃப்ரூட்ஸ் போல தான். ஆனால் பர்பிகள் வடிவத்தில் இருக்கும். இந்த கடலைகள், இதர நட்ஸ் ஆற்றலை வழங்குகின்றன. இதிலுள்ள சர்க்கரை நம்மை நீரிழிப்பில் இருந்து காக்கிறது. கடைகளில் விற்கப்படும் ஸ்நாக் பார்களில் சிந்தட்டிக் அம்சங்கள் இருக்கும் என்று நீங்கள் கருதினால், வீட்டிலேயே இந்த பர்பிகளை எளிதில் தயாரித்து எடுத்துக்கொள்ளலாம்.
இந்த வகை உணவுகள் எளிதில் கெட்டும்போகாது
வித விதமான ஃபிளேவர்களில் இந்த கப் கேக்குகள் கிடைக்கின்றன. இவை நமது பசிக்கு உடனடி ஆறுதலாக இருக்கும். சந்தைகளில் கிடைப்பவை உடல்நலத்தை பாதிக்கும் என்றால், நீங்களே வீடுகளில் பேக் செய்து எடுத்துக்கொள்ளலாம்.
இவற்றை சாப்பிடும்போதும், தண்ணீர் தேவையான அளவு அருந்துவது அவசியமாகிறது.
தாகத்தை போக்குவதுடன் பழரசங்கள் நமக்கு உடனடி ஆற்றலை வழங்கும். சாத்துக்குடி, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவை ஹெல்தியானதாக இருக்கும். ஆப்பிள், மாம்பழம், அவகாடோ போன்ற ஜூஸ்கள், நமக்கு filling ஆக இருக்கும்.
இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பவை, அவசர சமயத்தில் நமது பசியை போக்கிக்கொள்ள நம்மிடம் வைத்திருக்கவேண்டிய உணவுவகைகள் தான்.
இவற்றை தவிர, பழங்கள், பிஸ்கெட்கள், பிரெட் அண்ட் ஜாம், மோர், சாக்லேட்களையும் கூட நாம் எடுத்துச் செல்லலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust