Health: பூண்டு முதல் பாதாம் வரை - இவற்றை பச்சையாக சாப்பிட்டால் தான் நல்லது!

சமைக்காமல் பச்சையாகவே சாப்பிடக் வேண்டிய உணவுகளின் தொகுப்பு இது
Health: பூண்டு முதல் பாதாம் வரை - இவற்றை பச்சையாக சாப்பிட்டால் தான் நல்லது!
Health: பூண்டு முதல் பாதாம் வரை - இவற்றை பச்சையாக சாப்பிட்டால் தான் நல்லது!canva
Published on

ஒரு சில உணவு வகைகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதில் தான் அதன் சத்து நம் உடலுக்கு கிடைக்கிறது. இதனை பல காரணங்களுக்காக நாம் சமைத்து சாப்பிட நேர்கிறது. இவற்றை சமைத்து சாப்பிடுவதால் தீங்கு ஏதும் ஈற்படாது என்றாலும், அதன் அடிப்படை குணாதிசயங்கள் அழிந்து, எந்த ஒரு ஊட்டச்சத்தும் கிடைக்காமல் போய்விடுகிறது.

சமைக்காமல் பச்சையாகவே சாப்பிடக் வேண்டிய உணவுகளின் தொகுப்பு இது.

வெங்காயம்

வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. இதிலுள்ள அலிசின் என்ற பொருள் தான் வெங்காயத்திற்கு அதன் மணத்தை தருகிறது. இதுவே இருதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் நம்மைக் காக்கிறது.

Health: பூண்டு முதல் பாதாம் வரை - இவற்றை பச்சையாக சாப்பிட்டால் தான் நல்லது!
Health: பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடக் கூடாத உணவுகள்!

பீட் ரூட்

பீட்ரூட்டில் ஃபோலேட், நாற்சத்து, இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இவை சமைப்பதால் தன்மைக் குறைகிறது, ஊட்டச்சத்தும் குறைகிறது.

பாதாம்

பாதாம் ஞாபக சக்தியை பெருக்கவல்லது. இதனை பச்சையாகவோ அல்லது ஒரு இரவு தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். ஆனால் வறுத்து சாப்பிடக்கூடாது. இதனால் தேவையில்லாத கொழுப்புச் சத்து உடலுக்குள் சென்று, உடல் நலத்தை பாதிக்கலாம்.

Health: பூண்டு முதல் பாதாம் வரை - இவற்றை பச்சையாக சாப்பிட்டால் தான் நல்லது!
Health: சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?

முளைக்கட்டிய பயிர்

தினமும் ஒரு கப், அல்லது ஒரு பிடி முளைக்கட்டிய பயிற்றை சாப்பிடுவது உடலுக்கு தேவையான புரதச் சத்துகளை வழங்கும். ஆனால் இவற்றை பச்சையாக சாப்பிடவேண்டும். உடன் கொஞ்சம் பெப்பர், பச்சைக் காய்கறிகள், மாதுளை சேர்த்து சாப்பிடுவது சுவையையும் கூட்டும், மற்ற ஊட்டச்சத்தும் கிடைக்கும்

பூண்டு

மொழி படத்தில் பிரகாஷ் ராஜ் சொல்வதுபோல, பூண்டு இதயத்திற்கு நல்லது. தவிர, தினமும் ஒரு பல் பூண்டை காலையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், ஜீரண சக்தி மேம்படும்.

Health: பூண்டு முதல் பாதாம் வரை - இவற்றை பச்சையாக சாப்பிட்டால் தான் நல்லது!
Health: நள்ளிரவில் பசிக்கிறதா? இந்த ஸ்நாக்ஸை சாப்பிட்டால் சீக்கிரம் தூங்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com