உருளைக்கிழங்கு முதல் காளான் வரை - மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள் - ஏன்?

நவீன உலகத்திற்கு ஏற்ப உணவுகளை சமைக்கும் விதமும், அதன் நடைமுறையும் மாறுபட்டு வருகிறது. எந்த உணவுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாது என்று இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
Foods you should never reheat and why
Foods you should never reheat and whyTwitter
Published on

இன்றைய நவீன உலகில் துரித உணவுகள் மீது மக்களுக்கு நாட்டம் அதிகமாகிறது. நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி இருக்கிறார்கள்.

வீட்டில் கூட சமைத்து உணவை ஃப்ரிட்ஜில் வைப்பது, இரண்டு நாட்களுக்கு அதை சூடுபடுத்தி சாப்பிடுவது என உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய விஷயங்களை வழக்கமாக்கி வருகின்றனர்.

சிலர் காய்கறிகளை மட்டும் நறுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் காலையில் பயன்படுத்தி கொள்வார்கள். சிலரோ இரவிலேயே உணவுகளை சமைத்து விட்டு அடுத்த நாள் காலையில் அதனை சூடு செய்து பயன்படுத்துவர்.

இவ்வாறு நவீன உலகத்தில் ஏற்ப உணவுகளை சமைக்கும் விதமும், அதன் நடைமுறையும் மாறுபட்டு வருகிறது.

பொதுவாகவே எல்லா உணவுகளையும் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.

அதிலும் குறிப்பாக எந்த உணவுகளை எல்லாம் சூடுபடுத்தி சாப்பிட கூடாது என்று இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு மீண்டும் சூடுபடுத்துவதால் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கிறது.

அது மட்டுமில்லாமல் நச்சுத்தன்மையுடையதாக உருளைக்கிழங்கு மாறக்கூடும். இதனால் குமட்டல் அல்லது ஃபுட் பாய்சன் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

சோறு

சமைத்த அரிசியை அதாவது சோறை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தும் போது அவை நச்சுதன்மை வாய்ந்ததாக மாறலாம்.

இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படக்கூடும்.

Egg
EggCanva

காலை உணவாக சிலர் முட்டையை எடுத்துகொள்வார்கள். புரத சத்து அதிகமுள்ள முட்டைகளை மீண்டும் சூடாக்குவதால் நச்சுத்தன்மையுடையதாக மாறலாம்.

இது உங்கள் செரிமான மண்டலத்தில் அழிவை ஏற்படுத்தும்.

காளானில் புரதச்சத்து நிறைந்துள்ளது. சமைத்த அன்றே அவற்றை உட்கொள்ள வேண்டும். மீண்டும் சூடுபடுத்தும்போது அவற்றின் அமைப்பு மாறுகிறது, இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

நீங்கள் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட காளான்களை உண்ணும் போது, செரிமானம் மற்றும் இதய பிரச்சனைகள் கூட ஏற்படும்.

காளான் மற்றும் சிக்கன்

காளான்களைப் போலவே, கோழிக்கறியும் அதிக புரதச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

இதனை மீண்டும் சூடாக்குவதன் மூலம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எண்ணெய்

திராட்சை விதை எண்ணெய், வால்நட் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் ஆளிவிதை எண்ணெய் ஆகியவை மீண்டும் சூடுபடுத்தும்போது, அவை எரிந்துவிடுகிறது. எனவே, சமைக்க, பேக்கிங் அல்லது வறுக்க அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

Foods you should never reheat and why
summer start : கோடை காலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 6 உணவுகள்

பீட் ட்ரூட்

பீட் ட்ரூட்டில் அதிக அளவு நைட்ரேட்டுகள் உள்ளன. அவை மீண்டும் சூடாக்குவதன் மூலம் அவற்றின் தன்மை மாறும்.

சமைத்த உடனேயே உட்கொள்வது நல்லது.

Foods you should never reheat and why
தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? சரி செய்ய மருத்துவர்கள் கூறும் உணவுகள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com