summer start : கோடை காலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 6 உணவுகள்

உடலில் அதிகரித்த வெப்பநிலை மற்றும் மன அழுத்தம் காரணமாக, நமது இதய ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
6 foods to keep your heart healthy in summer
6 foods to keep your heart healthy in summerTwitter
Published on

மார்ச் மாதத்திலேயே வெப்ப காற்று வீச தொடங்கிவிட்டது.

கோடை காலம் தொடங்கி விட்டது போன்ற உணர்வு மக்களுக்கு வர தொடங்கி விட்டது. உடலின் சூட்டை தணிக்க அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்.

குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.

உடலில் அதிகரித்த வெப்பநிலை மற்றும் மன அழுத்தம் காரணமாக, நமது இதய ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் இதயம் அதிக ரத்தத்தை பம்ப் செய்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

அதனால்தான் மக்கள் தங்கள் இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கோடை காலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

தர்பூசணி

தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது; இதயத்தில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

பெர்ரி

ஸ்ட்ராபெர்ரி மற்றும் கோஜி பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளன.

Pexels

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான இதயம் மற்றும் இரத்த நாளங்களை பராமரிக்க உதவுகிறது.

6 foods to keep your heart healthy in summer
Health: மீன், முட்டை, நட்ஸ் - மூளை நலனைக் காக்க எந்த உணவுகள் சிறந்தது?

பச்சை இலைக் காய்கறி

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் கே மற்றும் ஏ ஆகியவை நிறைந்துள்ளன.

வெள்ளரிக்காய்

இதில் நீர்சத்துகள் மட்டுமல்லாமல், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.

பூண்டு

கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது, இதயம் மற்றும் இரத்த நாளங்களை பராமரிக்க உதவுகிறது.

6 foods to keep your heart healthy in summer
Health: சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com