உங்கள் அலுவலகத்தில், கல்லூரியில், பணியாற்றும் இடத்தில் இருக்கும் இடத்தை விட்டு நகராமல் அமர்ந்திருப்பவருக்கு இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.
ஏனென்றால் அவர்களைப் போல சுடுதண்ணீரில் சும்மா உட்கார்ந்திருந்தாலே வேகமாக ஓடியதற்கான பலன்கள் கிடைக்கும் என சமீபத்திய ஆய்வு கூறியிருக்கிறது.
இந்த கவர்ச்சியான ஆய்வைப் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இங்கிலாந்தில் உள்ள கோவென்ட்ரி பல்கலைக்கழகம் சுடுதண்ணீரில் ஓய்வு எடுப்பதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு, முடிவுகளை வெளியிட்டுள்ளது.
"பல நூற்றாண்டுகளாக வெந்நீரில் குளிப்பதன் நன்மைகள் நமக்குத் தெரியும். உடலை குணப்படுத்துவதில் வெந்நீர் பெரும் பங்கு வகிக்கிறது. ஆன்மிக ரீதியில் கூட வெந்நீரில் தியானம் செய்வது போன்ற விஷயங்களைக் கேள்விப்பட்டிருப்போம்."
இந்த ஆய்வில் கலந்துகொண்ட தன்னார்வலர்கள் வெந்நீர் இருக்கும் தொட்டியில் ஓய்வு எடுத்தபோது வழக்கத்தை விட 345% அதிகமாக இரத்த ஓட்டம் கால்களுக்கு கிடைக்கிறது.
இது 30 நிமிடம் ஜாக்கிங் செய்வதற்கு சமமானதாகும். சுடு தண்ணீரில் ஓய்வு எடுப்பதனால் பங்கேற்பாளர்களின் இதயத்துடிப்பு நடைபயணம் செய்தவரின் இதயடத்துடிப்புக்கு நிகரானதாக மாறியிருக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைப்பதைத் தவிர, சூடான தொட்டி அனுபவம் உடலில் உள்ள அழுத்தத்தை நிர்வகிக்கும் கார்டிசோல் ஹார்மோனின் அளவை 22% குறைக்க வழிவகுத்தது.
கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன் மனநலத்தையும் இது மேம்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வில் 26-60 வயதுக்கு இடைப்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust