தினமும் 10,000 அடிகள் நடப்பதால் எந்த பயனும் இல்லை - ஆய்வுகள் சொல்வது என்ன?

டிஜிட்டல் உலகில் தினசரி நடப்பதே பெரும் சாதனை தான். ஆனால் உங்கள் ஸ்மார்ட் வாட்ச், மொபைல் சொல்வது போல நீங்கள் 10,000 எட்டுகள் நடப்பதால் ஃபிட்டாக இருக்கப் போவது இல்லை.
தினமும் 10,000 அடிகள் நடப்பதால் எந்த பயனும் இல்லை - ஆய்வுகள் சொல்வது என்ன?
தினமும் 10,000 அடிகள் நடப்பதால் எந்த பயனும் இல்லை - ஆய்வுகள் சொல்வது என்ன?Newssense
Published on

ஒரு நாளுக்கு 10,000 அடிகள் நடந்து விட்டால் நீங்கள் உங்களது உடல் ஆரோக்கிய இலக்கை அடைந்துவிட்டதாக உங்களது செல்போனோ ஸ்மார்ட் வாட்சோ கூறும்.

இந்த விஷயத்தில் டெக்னாலஜியை நம்ப வேண்டாம். ஏனெனில் தினமும் 10000 அடிகள் நடந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று எந்த ஆய்வும் கூறவில்லை.

80,000 அடியோ 12,000 அடியோ நடந்தால் கூட அதே தான். எனில் இந்த 10,000 என்ற எண் எப்படி உருவானது தெரியுமா?

1965ம் ஆண்டு நாம் நடப்பதை கண்காணிக்கும் கருவியை அறிமுகப்படுத்தியது யமசா என்ற ஜப்பானிய நிறுவனம்.

அந்த கருவியை விளம்பரப்படுத்துவதற்காக 10,000 என்ற எண்ணை அந்த நிறுவனம் பயன்படுத்தியது. மன்போகெய் (Manpo-kei) என்ற அந்த விளம்பரம் உலகெங்கிலும் பிரபலமானது.

மன் என்றால் 10,000. போ என்றால் காலடித்தடம். கெய் என்றால் அளவி. இப்படியாக தான் இந்த எண் நிலைக்கொண்டது.

10,000 steps

இப்போது இருக்கும் இந்த 10,000 அடிகள் என்ற இலக்கு எந்த அளவு நம்முடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது?

உண்மையில் 10,000 அடிகள் என்பது அனைவரும் அடைய முடியும் எளிதான அளவு இல்லை. இதனால் பலரும் தங்களுக்கு முடிந்த 5000 அல்லது 8000 அடிகளை இலக்காக மாற்றியுள்ளனர்.

தீவிரமாக உடற்பயிற்ச்சியில் ஈடுபடும் சிலர் 10,000 இலக்கை எட்டியதும் போதுமென்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்.

இது உளவியல் தொடர்பானது என்றாலும் 10,000 என்ற இலக்கு எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்த 10,000 அடிகள் என்பதை அடிப்படை உடற்பயிற்சி அளிவீடாகவும் கருதுகின்றனர். இதன் மூலம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ததற்கான பலனை பெற முடியும் என்கிறார் டெல்லியைச் சேர்ந்த பயிற்சியாளர் ககன் அரோரா.

நடப்பது, ஓடுவது - எது சிறந்தது?

நீங்கள் ஒரு 5 கிலோ மீட்டர்கள் நடப்பது, அதே 5 கிலோ மீட்டர் ஓடுவது - எதைத் தேர்வு செய்ய வேண்டும்?

நடப்பதன் மூலம் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்பது உண்மை தான். ஆனால் அது உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவாது.

ஓடும்போது தான் நீங்கள் உடற்கட்டைப் பெற முடியும். நடப்பதா ஓடுவதா என்ற கேள்வி உங்களது தேவையைப் பொருத்தது.

ஆனால் இந்த அவசரமான உலகில் நாம் ஏதோ ஒன்றைச் செய்ய முடியும் என்றால் அது நடப்பது தான்.

தினமும் 10,000 அடிகள் நடப்பதால் எந்த பயனும் இல்லை - ஆய்வுகள் சொல்வது என்ன?
சுய இன்பம் செய்தால் முடி கொட்டுமா? - சந்தேகமும், விளக்கமும்!

யார் நடக்க வேண்டும்?

தினமும் 10,000 அடிகள் நடந்து நம் இலக்கை அடையும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தான் இங்கு முக்கியமானது.

ஆனால் ஆய்வுகள், அப்படி இலக்குகள் எதுவும் இல்லாமல் நடப்பதை பழக்கமாக கொண்டவர்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகின்றனர்.

குறிப்பாக அதிகாலையில் நடைபயிற்சி செய்பவர்கள். மிகவும் உற்சாகமாக இருக்க முடிகிறது.

தினமும் 10,000 அடிகள் நடப்பதால் எந்த பயனும் இல்லை - ஆய்வுகள் சொல்வது என்ன?
Water fasting : தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுமா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

வயது முதியவர்கள் தினமும் 6000 முதல் 9000 அடிகள் வரை நடப்பது அவர்கள் மரணிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

உங்கள் ஆரோக்கியத்துக்காக முடிந்தவரை நடப்பதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய இலக்குடன், அல்லது எந்த இலக்கும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் நடப்பது உங்களுக்கு சிறந்த பலனை அளிக்கும்.

தினமும் 10,000 அடிகள் நடப்பதால் எந்த பயனும் இல்லை - ஆய்வுகள் சொல்வது என்ன?
புத்தாண்டில் பாஸிடிவ் அனுபவங்கள்: ரூ.10,000 செலவில் சுற்றிபார்க்க 6 சுற்றுலா தலங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com