பப்பாளி : 7 தவறான கருத்துகளும் சரியான பதில்களும்

கர்ப்பமான பெண்களுக்கு எந்த டயட் தடைகளும் இல்லை. பப்பாளியும் அன்னாசி பழமும் கர்ப்பமான பெண்கள் சாப்பிடகூடாது என்கிற வதந்தி பல ஆண்டுக் காலமாகத் தொடர்கிறது. எல்லாம் சினிமா, சினிமா டைலாக் மூலம்தான்.
பாவம் இந்தப் பப்பாளி
பாவம் இந்தப் பப்பாளிPexels

பல ஊர்களில் ஆண்கள் பப்பாளி சாப்பிடுவதில்லை. காரணம், பப்பாளி சாப்பிட்டால் செக்ஸ் ஆர்வம் குறைந்துவிடும் என யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள். இது உண்மையா?

தவறான கருத்து. பப்பாளியில் ஆர்ஜினைன் எனும் தேவையான சத்து உள்ளது. அது ஆண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்குத் தீர்வு அளிக்கும் சக்தி கொண்டது. கேன்னில் அடைத்து விற்கப்படும் பழங்கள், உணவுகளைவிட ஃப்ரெஷ்ஷான பப்பாளியில் அவ்வளவு சத்துகள் நிரம்பியுள்ளன. 16வது நூற்றாண்டு காலத்தில் இருந்து பப்பாளி மக்களிடம் உணவாகப் பழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியா, சீனா மட்டுமல்லாமல் மலேசியா, இலங்கை, பிரேசில், ஃபிலிபைன்ஸ், ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுக்கப் பப்பாளி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பப்பாளியை தாராளமாக ஆண்கள் சாப்பிடலாம்.

Pexels

பப்பாளி சாப்பிட்டால் செரிமான சக்தி குறைந்துவிடும். உண்மையா?

பப்பாளியில் உள்ள பெபைன் என்ற நொதி நம் உடலில் நடக்கும் செரிமானத்துக்கு உதவுகின்றன. எதாவது மாவு பொருளை நாம் சாப்பிட்டு விட்டால், அதாவது கோதுமையால் ஆன சப்பாத்தி, பரோட்டா, பிரெட், மைதா பொருட்களான ரொட்டி ஆகிய இழுக்கும் தன்மை கொண்ட குளுட்டன் பசையுள்ள உணவை உண்டதால், இதைச் செரிக்க வயிறு பாடாய்படும். வாய் இருந்தால் கத்தியேவிடும். அப்படியான சூழலில் பப்பாளி சாப்பிட்டால், செரிமானத்தை எளிதாக்கும் திறன் பப்பாளிக்கு உண்டு. வயிறுக்கும் குடலுக்கும் கொடுத்த ‘இறை பரிசு’ என வயிறு சிறப்பு நிபுணர்கள் பப்பாளியைக் கூறுகின்றனர்.

Pexels

கர்ப்பமான பெண் பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். உண்மையா?

கர்ப்பமான பெண்களுக்கு எந்த டயட் தடைகளும் இல்லை. பப்பாளியும் அன்னாசி பழமும் கர்ப்பமான பெண்கள் சாப்பிடகூடாது என்கிற வதந்தி பல ஆண்டுக் காலமாகத் தொடர்கிறது. எல்லாம் சினிமா, சினிமா டைலாக் மூலம்தான். எல்லாமே தவறான கருத்துகள். பப்பாளி சாப்பிட்டால் கரு கலையாது. எந்த உணவை சாப்பிட்டாலும் கரு கலையாது. உணவு என்பது உடலுக்குச் சத்து தருபவை. கருவை அழிப்பவை அல்ல… பப்பாளி சாப்பிட்டு கரு கலைந்ததாக இன்று வரை ஒரு கேஸ்கூட இல்லை என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். உலகளவில் எந்த ஆதாரமும் இல்லை என்கின்றனர். கருவை அழிக்க உணவால் முடியவே முடியாது. அதுவும் பப்பாளி, அன்னாசி சாப்பிட்டால் கரு களையாது. கரு களைய மற்ற உடல் காரணங்கள் இருக்கலாமே தவிர உணவு காரணம் இல்லை. பப்பாளி சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்ணுக்கு மிகவும் நல்லது. பழுத்த பப்பாளியை சாப்பிட்டால் அதில் உள்ள விட்டமின், மினரல்ஸ் தாயை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அசைவ உணவுகளைவிட ஒரு தாய் பழங்களைத் தினமும் ஒரு வேளை உணவாகச் சாப்பிட்டால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பது உறுதி.

Pexels

பப்பாளி சாப்பிட்டால் அலர்ஜி வரும். உண்மையா?

பழுத்த பப்பாளி சாப்பிட்டால் யாருக்கும் எந்தவித அலர்ஜியும் வராது. பப்பாளி பழத்தில் அலர்ஜி தரும் எந்தப் பொருட்களும் அதில் இல்லை. அரிதாக, சிலருக்குக் காயாக உள்ள பப்பாளி சாப்பிட்டால் அலர்ஜி வரலாம். அதற்குக் காரணம் காயாக உள்ள பப்பாளியில் லேட்டக்ஸ் எனும் பொருள் உள்ளது. இது 2% நபருக்கு அலர்ஜி தரலாம். அதுவும் அரிதாகதான். பப்பாளி பழமாகச் சாப்பிடுவது முழுக்க முழுக்கப் பாதுகாப்பானது.

Pexels

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட கூடாது. உண்மையா?

பெபெயின் எனும் பொருள் உள்ளதால் பப்பாளி பழம் மிகச் சிறந்த பழம் எனும் பட்டியலில் வருகிறது. செரிமானத்துக்கு மிகவும் உதவக் கூடிய பழம் இது. வயிற்றில் வாயு காற்று, அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தால், மலச்சிக்கலால் நீங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் முதல் வேலையாகப் பப்பாளியை சாப்பிடுங்கள். விரைவிலேயே பலன் தெரியும். வெறும் வயிற்றில் அதுவும் காலை உணவாகச் சாப்பிடுவது மிக மிக நல்லது.

பாவம் இந்தப் பப்பாளி
இயற்கையாகவே பற்கள் வெள்ளையாக, பளபளப்பாக இருக்க வழிகள்!

பப்பாளியின் சதையைச் சாப்பிடலாம். கொட்டையைத் தூக்கி எறியவேண்டும். உண்மையா?

பப்பாளியில் சதை அதிகம். சுவையும் அதிகம். சதையைச் சாப்பிட்டுவிட்டு கொட்டையைத் தூக்கி போட வேண்டும் எனச் சொல்வது தவறான கருத்து. பப்பாளி விதைகளில் அவ்வளவு மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் உள்ளது. சிறுநீரகப் புற்றுநோய்க்கும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்துக்கும் முக்கிய உணவு, பப்பாளியின் விதைகள்தான். சில ஆய்வுகளில் 2-3 ஸ்பூன் அளவுக்குப் பப்பாளி விதைகளைச் சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் ஆபத்து குறையும் என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாவம் இந்தப் பப்பாளி
எடை குறைப்பு: நாம் செய்யும் தவறுகள் என்னென்ன?

பப்பாளி பார்வை திறனுக்கு மட்டும்தான். மற்றபடி சத்துகள் பெரிதளவில் இல்லை. உண்மையா?

நார்ச்சத்து, விட்டமின் சி, ஃபோலேட், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், விட்டமின் ஏ போன்ற சத்துகள் குவிந்து கிடக்கின்றன. பார்வை திறன் மேம்படும். அதேபோல நோய் எதிர்ப்பு சக்தி கூடும். கழிவுகள் வெளியேறும். பல நாள் கழிவுகள்கூட வெளியேறும். இதில் உள்ள லைகோபீன் எனும் சத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். பெருங்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். சருமம் அழகாக மாறும். குழந்தை உண்டாகத் திட்டமிடும் பெண், ஆண் அவசியம் சாப்பிட வேண்டும். கரு உண்டான பிறகும் பப்பாளியை சாப்பிட்டு வர கரு வளர்ச்சிக்கு உதவும். மலச்சிக்கல் இல்லாமல் கர்ப்பிணியைப் பாதுகாக்கும். கர்ப்பக்காலத்தில் டைப் 2 சர்க்கரை நோய் வராமல் பப்பாளி பாதுகாக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com