இயற்கையாகவே பற்கள் வெள்ளையாக, பளபளப்பாக இருக்க வழிகள்!

பொதுவாக நமக்குத் தெரிந்த இயற்கை பிரஷ் என்றால், அது வேப்பங்குச்சி மட்டுமே… ஆனால், அதையும் தாண்டி வேலங்குச்சி, கருவேலங்குச்சி, நொச்சி, மருது, நாவல் போன்ற பல்வேறு வகையான மூலிகைகளை நாம பல் தேய்க்கப் பயன்படுத்தலாம்.
பல்
பல்Twitter
Published on


முகம் அழகாக என்னென்னமோ ஸ்கின்கேர் செய்கிறோம். ஆனால், இந்த இயற்கையான பொருட்களை வைத்துக்கொண்டு பற்களைப் பராமரித்தால் முகம் தானாகவே வசீகரமாகும். பற்களுக்கு நீங்கள் எடுக்கும் கேர் உங்க முக அழகை கூட்டும் என்பது மூலிகைகளால் மட்டுமே சாத்தியம். அத்தகைய வாய், பல் அழகை தருவதோடு முக அழகையும் வசீகரத்தையும் கூட்டும் இயற்கைப் பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம்.

“வேலுக்குப் பல் இறுகும்

வேம்புக்கு பல் துலங்கும்

பூலுக்குப் போகம் பொழியுமே

நாயுருவி கண்டால் வசிகரமாம் காண்”

என்கிறது சித்த மருத்துவப் பாடல்…

வேப்பங்குச்சி
வேப்பங்குச்சி Twitter


ஆலங்குச்சி

ஆலம்பாலை வாயில் இட்டுக் கொப்பளித்தால் அசைகின்ற பல்லும் இறுகும் எனப் பாடல் சொல்கிறது.

வேப்பங்குச்சி

வேப்பங்குச்சியில் பல் துலக்கப் பற்கள் தூய்மையாகும். கிருமிகள் அழியும். அழுக்கு நீங்கும்.

நாயுருவி வேர்

முகத்திற்கு வசீகரம் உண்டாகும். பற்களைப் பளபளப்பாக அழகாக்கும் எனச் சித்த மருத்துவப் பாடல்களில் உள்ளது.

வேலங்குச்சி

வேலங்குச்சியில் பல் தேய்த்தால் அசைகின்ற பல்கூட இறுக்கமாகும். வலிமையாகும். எந்தச் செயற்கை கிளிப்களும் அணியத் தேவையில்லை. வேலங்குச்சியில் பல் துலக்கினாலே போதும்.

பொதுவாக நமக்குத் தெரிந்த இயற்கை பிரஷ் என்றால், அது வேப்பங்குச்சி மட்டுமே… ஆனால், அதையும் தாண்டி வேலங்குச்சி, கருவேலங்குச்சி, நொச்சி, மருது, நாவல் போன்ற பல்வேறு வகையான மூலிகைகளை நாம பல் தேய்க்கப் பயன்படுத்தலாம். ஆனால், நாம் இவற்றை விட்டுவிட்டு வெறும் பிளாஸ்டிக் பிரஷ்ஷையே நம்பி இருக்கிறோம்.

பல் துலக்குதல்
பல் துலக்குதல்Twitter

துவர்ப்பு சுவை குச்சி

வாயில் புண் இருப்பவர்கள், ஈறுகளில் புண் உள்ளவர்கள், ரத்தக்கசிவு இருப்பவர்கள் பயன்படுத்தலாம்.

கசப்பு சுவை குச்சி

பற்கள் இன்னும் சுத்தமாகி, தூய்மையடையும்.


குச்சியை எப்படிப் பயன்படுத்துவது?

உதாரணத்துக்கு வேப்ப மரக்குச்சியை எடுத்து, அதைக் கொஞ்சம் சுத்தமாக்கிவிட்டு, பற்களில் வைத்து அதன் நுனியை நன்கு கடித்து பிரஷ் போல பிரிஸில், பிரிஸிலாக செய்துகொண்ட பிறகு பற்களின் இடுக்குகளில் தேய்க்கலாம். மேல், கீழ், வலது, இடது எனத் தேய்க்கலாம்.

தேய்த்து முடித்த பிறகு அந்தக்குச்சியை இரண்டாகப் பிளந்து நாக்கில் உள்ள அழுக்கையையும் நீக்கிவிட்டு அந்தக் குச்சியை வீசிவிடலாம். இதே முறையில் தான் அனைத்து குச்சிகளையும் பயன்படுத்தலாம்.

பல் தேய்க்கும் போது செய்யக்கூடாதவை

டிவி, மொபைல் பார்த்துக்கொண்டே பல் தேய்க்கக் கூடாது.

மனதைப் பற்களின் மேல் கவனத்தை வைத்தே பல் துலக்க வேண்டும்.

பல்
பல்Twitter

ஸ்கர்வி எனும் நோய்

விட்டமின் சி குறைப்பாட்டால் வருகின்ற நோய் இது. ஈறுகளில் ரத்தக்கசிவு இருந்துகொண்டே இருக்கும். இந்த நோய் உள்ளவர்கள் குச்சிகளுக்குப் பதிலாக மூலிகைப் பொடிகளைப் பயன்படுத்திப் பல் தேய்க்கலாம். திரிபலா சூரணம், எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

இயற்கையான வாசனை பற்பொடி

ஏலம்

சீரகம்

கடுக்காய்

நெல்லிக்காய்

தான்றிக்காய்

ஓமம்

ஆகியவை சேர்த்து அரைத்த பற்பொடி மிகவும் நல்லது. இதைப்பயன்படுத்துவதால் வாயில் வரக்கூடிய துர்நாற்றம் வராது. பற்களும் கிருமிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாய்க் கொப்பளிப்பாக…

மருதம் பட்டை பொடி

எருக்கன் வேர் பொடி

ஆவாரம் பூ பொடி

இதெல்லாம் சேர்த்துத் தயாரித்த பொடியைக் கொப்பளிக்கும் மவுத் ரெஃப்ஷனராக பயன்படுத்தலாம். இப்படி இந்த மூலிகைகள் கொண்டு வாய்க் கொப்பளித்தால் முதியவர்களின் பற்கள்கூட இளைஞர்களின் பற்கள்போல வலிமையானதாக மாறிவிடும் எனச் சித்த மருத்துவப் பாடல்கள் கூறுகின்றன.

பல்
வெடிக்குண்டை கண்டுபிடிக்கும் இயற்கை போலீஸ் - ஒரு மருத்துவ பதிவு

பற்களைத் தூய்மையாக்கும் செயல்

ஒவ்வொரு முறையும் வாய் கொப்பளித்த பிறகு வாயைக் கொப்பளிக்க வேண்டும். சின்ன சாக்லேட் சாப்பிட்டாலும் சரி மதிய உணவாக இருந்தாலும் சரி. வெறும் தண்ணீரால் நன்கு 5 முறையாவது வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் பல் இடுக்குகளில் எந்த உணவு துகள்களும் போய்ச் சேராது.

எந்த உணவைச் சாப்பிட்டாலும் அந்தச் சுவை உங்கள் வாயில், நாக்கில் சாப்பிட்ட பிறகும் தெரியக்கூடாது. அந்த அளவுக்கு வாய் கொப்பளிப்பதே சரி.

ஆயில் புல்லிங் முறையும் சிறந்த வழி. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை வாயில் இட்டு நன்கு கொப்பளித்துத் துப்புவது நல்லது. நல்லெண்ணெய்யால் வாய்க் கொப்பளிப்பதால் நரம்பு தொடர்பான நோய்கள்கூடக் குணமாகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

பற்களைச் சேதப்படுத்தும் உணவுகள் எவை?

சாக்லேட்

வெள்ளை சர்க்கரை

ஜெல்லி

கிரீம்

பால் பொருட்கள்

குளிர் பானங்கள்

செயற்கை நிற இனிப்புகள்

பல்
Weight loss drink : கொழுப்பைக் கரைப்பதில் நம்பர் 1 மூலிகை!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com