சம்மர் வரப்போகுது! டீஹைட்ரேஷனை தடுக்க என்ன சாப்பிடலாம்?

முறையாக தண்ணீர் குடிப்பதுடன், நாம் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம். நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன? இங்கு பார்க்கலாம்
சம்மர் வரப்போகுது! டீஹைட்ரேஷனை தடுக்க என்ன சாப்பிடலாம்?
சம்மர் வரப்போகுது! டீஹைட்ரேஷனை தடுக்க என்ன சாப்பிடலாம்?canva
Published on

நீரின்றி அமையாது உலகு என்பது போல, நீரின்றி உடலும் அமையாது எனலாம். சம்மர் ஆரம்பித்துவிட்டது. உடல் சூட்டை தணிக்க, அதீத நீர் தாகத்தை சமாளிப்பது அவசியம்.

முறையாக தண்ணீர் குடிப்பதுடன், நாம் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன? இங்கு பார்க்கலாம்

தர்பூசணி:

சம்மர் வந்தவுடனே கடைவீதிகளில் நாம் தர்பூசணியை பார்க்கலாம். வாட்டர்மெலன் ஒரு கப் சாப்பிட்டால், அரை கப் தண்ணீர் குடித்ததற்கு சமம். தவிர இதிலுள்ள நாற்சத்து, வைட்டமின் சி, ஏ, மெக்னீசியம் நம்மை ஹெல்தியாக்கும்

முலாம்பழம்:

ஒரு கப் முலாம்பழத்தில் 90 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. தவிர நாற்சத்தும் இருக்கிறது. முலாம்பழம் பெரும்பாலும் பழமாக சாப்பிட விரும்பாதவர்கள், ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

உடல் சூட்டை தணிக்க உதவும்

சம்மர் வரப்போகுது! டீஹைட்ரேஷனை தடுக்க என்ன சாப்பிடலாம்?
Health: மீன், முட்டை, நட்ஸ் - மூளை நலனைக் காக்க எந்த உணவுகள் சிறந்தது?

ஸ்ட்ராபெரி:

தண்ணீருடன் சேர்த்து, ஆண்ட்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின், நாற்சத்தும் நிறைந்தது ஸ்ட்ராபெரி பழங்கள். இவை இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நல்லது

ஆரஞ்சு:

தாகம் தணிக்கும் பழங்களின் வரிசையில் ஆரஞ்சு பழம் முக்கிய இடம்பிடிக்கிறது.

வைட்டமின் சீ நிறைந்துள்ள இப்பழம், இம்யூனிட்டி பெருகவும் உதவுகிறது.

அரை கப் தண்ணீரின் அளவு கொண்ட ஆரஞ்சு பழத்தில், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன

சம்மர் வரப்போகுது! டீஹைட்ரேஷனை தடுக்க என்ன சாப்பிடலாம்?
Health: சருமம் பளபளப்பாக இருக்க வேதிப் பொருட்கள் தான் வழியா? - இயற்கை மாற்றுகள் இதோ!

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் பச்சையாக கடித்து சாப்பிடும் உணவுவகைகளில் ஒன்று. இதனுடன் உப்பு மிளகாய்பொடியும் சேர்த்து சாப்பிடலாம். ஒரு நாளைக்கு இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிடுவது, சம்மரில் நமது உடல் வெப்பத்தை தணிக்க உதவும்

தயிர்:

தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதனை அப்படியே ஒரு கப் சாப்பிடலாம், தண்ணீர் கலந்து நீர்மோர் குடிக்க தாகத்தை சமாளிக்க உதவும். உடன் நெல்லிக்காய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்துக்கொண்டால், அரோக்கியத்துக்கும் நல்லது

சம்மர் வரப்போகுது! டீஹைட்ரேஷனை தடுக்க என்ன சாப்பிடலாம்?
Health: மதிய உணவுக்கு பின் ஸ்வீட் சாப்பிடுபவரா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com