Health: பாதாம் டூ அத்தி - கால்சியம் அளவை கூட்ட உதவும் உணவுகள்

கால்சியம் எலும்புகளின் வலுவைக் கூட்ட அவசியமான ஒரு ஊட்டம் ஆகும். எளிதில் கிடைக்கக் கூடிய, நம்மால் தினமும் சாப்பிடக் கூடிய இந்த ஐந்து உணவு வகைகள் கால்சியம் சத்து பெற உதவும்.
Health: பாதாம் டூ அத்தி - கால்சியம் அளவை கூட்ட உதவும் உணவுகள்
Health: பாதாம் டூ அத்தி - கால்சியம் அளவை கூட்ட உதவும் உணவுகள்canva
Published on

உடல் ஆரோக்கியமாக இருக்க அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம். சிறு வயதில் இருக்கும்போது நம்மை பெற்றோர் பாட்டி என நமக்கு பார்த்து பார்த்து சத்தான உணவுகளை தந்தனர்.

தற்போது காலில் சுடு தண்ணி ஊற்றிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், சத்தான உணவை நினைத்தும் கூட பார்க்க கடினமாக உள்ளது.

இதனால் ஊட்டச்சத்து குறைப்பாடு உண்டாகிறது. குறிப்பாக ரத்தம் அளவு குறைவது, இரும்புச் சத்து குறைவது, கால்சியம் குறைபாடு போன்றவை ஏற்படுகிறது

கால்சியம் எலும்புகளின் வலுவைக் கூட்ட அவசியமான ஒரு ஊட்டம் ஆகும்.

எளிதில் கிடைக்கக் கூடிய, நம்மால் தினமும் சாப்பிடக் கூடிய இந்த ஐந்து உணவு வகைகள் கால்சியம் சத்து பெற உதவும்.

பாதாம்

பாதாமில் நற்குணங்கள் ஏராளம். உடலுக்கு எனர்ஜி தருவதுடன், பசியை கட்டுப்படுத்தியும், உடல் எடைக் கூடவும் உதவுகிறது. மேலும் பாதாம் நமது ஞாபக திறனை அதிகரிக்க உதவும்

அத்தி

அத்திப்பழம் நார்ச்சத்தும், தாதுக்களும் நிறைந்த பழமாகும். அத்தியில் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் எல், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

குறிப்பாக அத்தி பெண்களுக்கு சிறந்த மருந்து. அத்தியை சரிவர சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் cramps ஏற்படாமல் காக்கிறது

Health: பாதாம் டூ அத்தி - கால்சியம் அளவை கூட்ட உதவும் உணவுகள்
Health: இரவு தூங்கி எழும்போது வியர்ப்பது ஏன்? மருத்துவர் கூறும் 4 காரணங்கள்

விதைகள்

சியா விதைகள், பூசணி விதைகள் போன்றவற்றை சாப்பிடலாம். இவையும் நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை வழங்கும்

பீன்ஸ் வகைகள்

பச்சை பயிறு, தட்டை, சோயா, ராஜ்மா போன்ற தானிய வகைகளை முளைப்பயிராகவோ, அல்லது சுண்டல் போன்றோ சமைத்து சாப்பிடலாம். இவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன், கால்சியம் சத்தும் கூட உதவுகிறது

Health: பாதாம் டூ அத்தி - கால்சியம் அளவை கூட்ட உதவும் உணவுகள்
Health: தினமும் உப்பு குறைவாக சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன? | Nalam 360

இலை வகை உணவுகள்

பச்சை காய்கறிகள், குறிப்பாக இலை வகை உணவுகள் உடலுக்கு தேவையான கால்சியத்தை வழங்குகிறது.

கீரை, ப்ரொக்கோலி போன்ற உணவுகளை நமது அன்றாட டயட்டில் தாராளமாக சேர்த்துக்கொள்ளல்லாம்.

இவற்றை தவிர பாலில் தான் நமக்கு எளிதாக கால்சியம் சத்து கிடைக்கிறது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நமக்கு சத்தை அளிக்கும் என்றாலும், சிலருக்கு குறிப்பிட்ட உணவுகளில் ஒவ்வாமை இருக்கும். ஆகையால் மருத்துவரை அணுகி உங்கள் டயட்டை மெயின்டெயின் செய்துகொள்வதும் அவசியம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com