Health: இரவு தூங்கி எழும்போது வியர்ப்பது ஏன்? மருத்துவர் கூறும் 4 காரணங்கள்

பொதுவாக வெயில் காலம் வந்தால் நமக்கு வழக்கத்தை விட அதிகமாக வியர்க்கும். ஆனால் ஒரு சிலருக்கு, கால நிலை மாற்றங்கள் அல்லாமல், பொதுவாகவே இரவு தூங்கி மறுநாள் எழுகையில் வியர்த்திருக்கும்.
இரவு தூங்கி எழும்போது வியர்ப்பது ஏன்? மருத்துவர்கள் கூறும் 4 காரணங்கள்
இரவு தூங்கி எழும்போது வியர்ப்பது ஏன்? மருத்துவர்கள் கூறும் 4 காரணங்கள்Canva
Published on

வியர்வை மனித உடலில் இயற்கையான செயல்பாடுகளில் ஒன்று. நாம் வியர்க்காமல் இருந்தால் தான் ஆரோக்கியமற்று இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

சரியான அளவில் வியர்வை வெளியேறினால் தான் நம் சருமம், மற்றும் உடல் அதிகபடியாக சூடவதில் இருந்து தப்பிகிறது. உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கிறது.

பொதுவாக வெயில் காலம் வந்தால் நமக்கு வழக்கத்தை விட அதிகமாக வியர்க்கும். ஆனால் ஒரு சிலருக்கு, கால நிலை மாற்றங்கள் அல்லாமல், பொதுவாகவே இரவு தூங்கி மறுநாள் எழுகையில் வியர்த்திருக்கும்.

இது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்குமே இருக்கும்

உடல்நலம் மற்றும் உணவு சப்ளிமெண்ட்ஸ் குறித்து மருத்துவர் எம்மா டெபிஷயர் விளக்கியுள்ளார். அவரது கூற்றின்படி, இப்படி இரவு வியர்ப்பதற்கு நான்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன

மெனோபாஸ்

45 முதல் 50 வயதுக்ளில் உள்ள பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும். அல்லது அதற்கான அறிகுறிகள் தோன்றும். இரவு வியர்ப்பது மெனோபாஸ் தோன்றுவதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் எம்மா. ஹார்மோன்கள் குறைவதால் அதிகமாக வியர்க்கும்.

ஹார்மோன் மாற்றம்

உடலில் சாதாரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் அல்லது ஹார்மோன் அளவு சமமின்மையினால் இரவில் வியர்க்கிறது.

ஹார்மோன் சமமின்மையால் ஏற்படும் தைராய்டு பிரச்னைகள், பாலின ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்டவை உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். அதிக சூட்டினால் உடல் வியர்க்க தொடங்கும்.

ஹைபோதலாமஸ் எனப்படும் ஹார்மோன் அமைப்பின் ஒரு பகுதியும் பாதிக்கப்படும். இதன் காரணமாகவும் நமக்கு இரவில் வியர்க்கிறது

கவலை மற்றும் மன அழுத்தம்

கவலை, மன உளைச்சல், அமைதியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் கூட இரவில் வியர்க்கும் என்கிறார் மருத்துவர் டெபிஷயர்

இரவு தூங்கி எழும்போது வியர்ப்பது ஏன்? மருத்துவர்கள் கூறும் 4 காரணங்கள்
உறங்கும் போது வாசனை தெரியாது, தும்மல் வராது: தூக்கம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

ஊட்டச்சத்து குறைபாடு

உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் சரியான அளவில் இல்லை என்றாலும் வியர்க்கும். குறிப்பாக வைட்டமின் டி மற்றும் பி12 குறைபாட்டினால் இரவு நேரங்களில் நமது உடல் வியர்க்கும்.

50 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் இவர்களுக்கு இரவு நேரத்து வியர்வை பிரச்னை தோன்றலாம்.

இதை தவிர உடலில் தாதுக்கள் சமநிலையில் இல்லை என்றாலும் இந்த பிரச்னை தோன்றலாம். வாழைப்பழம், கீரை வகைகள், உருளைக்கிழங்கு, சிட்ரஸ் பழங்களை சரிவர உட்கொண்டு வர இந்த தாதுக்கள் உடலில் அதிகரிக்கும்.

முந்திரி, பாதாம், பால் ஆகியவற்றையும் நமது டயட்டில் சேர்த்துக்கொள்வது அவசியமாகிறது

இரவு தூங்கி எழும்போது வியர்ப்பது ஏன்? மருத்துவர்கள் கூறும் 4 காரணங்கள்
Power Naps என்பது என்ன? எப்போது குட்டி தூக்கம் போடலாம்? நன்மைகளும் மாற்றங்களும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com