வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 4 உணவுகள் - ஏன் தவிர்க்க வேண்டும்?

சரியான காலை உணவு எது என்று தேர்வு செய்வது பலருக்கு குழப்பம் இருக்கும். ஊட்டச்சத்து நிபுணர்கள் வெறும் வயிற்றில் நாம் உட்கொள்ளக் கூடாத சில உணவுகளை கூறுகின்றனர்.
Here’s Why You Should Avoid These 4 Foods On An Empty Stomach
Here’s Why You Should Avoid These 4 Foods On An Empty StomachTwitter
Published on

காலை உணவு முக்கியமான உணவு என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். நீண்ட இடைவெளிக்கு பின் உட்கொள்ளப்படும் காலை உணவானது, நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.

அப்படியென்றால் எல்லாவற்றையும் காலையிலேயே சாப்பிட முடியாதல்லவா? சரியான காலை உணவு எது என்று தேர்வு செய்வது பலருக்கு குழப்பம் இருக்கும்.

ஊட்டச்சத்து நிபுணர்கள் வெறும் வயிற்றில் நாம் உட்கொள்ளக் கூடாத சில உணவுகளை கூறுகின்றனர்.

எலுமிச்சை நீரில் தேன்

அதிகப்படியான கொழுப்பை குறைக்க பெரும்பாலான மக்கள் இதனை வெறும் வயிற்றில் உட்கொள்கின்றனர். ஆனால் நன்மை விட அதிக தீமையை விளைவிக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தேனில் சர்க்கரையை விட அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் அதிக கலோரிகள் இருக்கிறது. சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான தேன் சர்க்கரை பாகுடன் கலக்கப்படுகிறது. வெறும் வயிற்றில் தேனை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், இது நாள் முழுவதும் அதிக உணவை உட்கொள்ள வழிவகுக்கும்.

பழங்கள்

காலையில் ஒரு கிண்ணம் பழங்களை சாப்பிடுவது ஒரு நல்ல பழக்கம் என்று நாம் அனைவரும் நினைக்கிறோம், ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் அதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள்.

மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது, இவை மிக விரைவாக ஜீரணமாகி, ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் பசியை உண்டாக்கும் . வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, சில சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

டீ அல்லது காபி

இவை ஆற்றலைத் தருவதாக இருந்தாலும், வயிற்றில் உள்ள அமிலங்களைத் தூண்டும். இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Here’s Why You Should Avoid These 4 Foods On An Empty Stomach
Tea : உங்கள் 'டீ' உடலுக்கு நல்லதா?

இனிப்பான உணவு

இனிப்பான உணவை காலையிலேயே எடுத்துக்கொள்ளும்போது உங்கள் இரத்த சர்க்கரை உயரும். இதனால் உங்களுக்கு குறைவான ஆற்றலே கிடைக்கும்.

Here’s Why You Should Avoid These 4 Foods On An Empty Stomach
தண்ணீரே குடிக்காமல் காபி, டீ, குளிர் பானங்கள் குடித்து உயிர்வாழ முடியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com