Tea : உங்கள் 'டீ' உடலுக்கு நல்லதா?

ஒரு டீ கடையில் வெறும் டீ தான் கிடைக்கும் என்றாலும் நார்மல் டீ, ஸ்பெஷல் டீ, இஞ்சி டீ, பிளாக் டீ, லெமன் டீ, லைட் டீ, ஸ்ட்ராங் டீ, மசாலா டீ என பல வெரைடிகளில் குடிப்பவர்கள் தமிழர்கள்!
Tea : உங்கள் 'டீ' உடலுக்கு நல்லதா?
Tea : உங்கள் 'டீ' உடலுக்கு நல்லதா?Twitter
Published on

என்ன தான் கிரிக்கெட்டை இங்கிலாந்து கண்டுபிடித்திருந்தாலும் அவர்களை விட அதிகமாக உலகக் கோப்பைகளை வென்ற நாடு இந்தியா தான்.

இதுபோல தேநீரும். இங்கிலாந்து தாய் நிலமாக இருந்தாலும் தாய் பாலுக்கு பிறகு தேநீரை அதிகம் விரும்பும் மக்கள் இந்தியாவில் தான் இருக்கின்றனர்.

ஒரு டீ கடையில் வெறும் டீ தான் கிடைக்கும் என்றாலும் நார்மல் டீ, ஸ்பெஷல் டீ, இஞ்சி டீ, பிளாக் டீ, லெமன் டீ, லைட் டீ, ஸ்ட்ராங் டீ, மசாலா டீ என பல வெரைடிகளில் குடிப்பவர்கள் இந்தியர்கள்!

சர்க்கரை, பால், இஞ்சி கலந்து சுர்ர்ர் என ஏறும் டீயின் போதைக்கு அடிமையாகாதவர்கள் யார்?

இந்தியாவிலிருக்கும் 64% மக்கள் தினசரி டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது.

அதாவது குறைந்தபட்சம் ஒரு முறை. ஆனால் அதிகபட்சம் என்பது கணக்கெடுக்க முடியாத ஒன்று என்பது நமக்குத் தெரியும்.

நம் நாக்கைத் தாண்டி மனதைத் தொடும் பானமாக கருதும் இந்த டீ நம் உடலுக்கு நல்லது தானா?

டீயும் பசியும்

டீ தான் நம் ஊர் பேச்சிலர்களுக்கு பல வேளைகளில் உணவாகவே இருக்கிறது.

ஒரு கிளாஸ் டீ குடிப்பது எப்படி ஒருவரின் பசியை ஆற்றுகிறது என்பதை நாம் சிந்தித்திருக்கிறோமா?

உண்மையில் டீ பசியை தீர்ப்பதில்லை. மாறாக, மறக்கச் செய்கிறது. அத்துடன் நம் குடலையும் இறுகச் செய்கிறது.

இதனால் டீ குடித்த உடனே சாப்பிட்டாலும் பசி இருக்காது!

பசியை மறக்கச் செய்வது என்பது உலில் ஊட்டச்சதுக்கள் சேருவதைத் தடுப்பது மற்றும் அசிடிட்டி, செரிமான கோளாறுகளை உருவாக்குவது.

இவற்றையும் படியுங்கள்!

சர்க்கரை வியாதி என்பது நோயே அல்ல... இனிப்புடன் வாழும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்!

இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் : பிரியாணிக்கு முதலிடம் - அடுத்தது என்ன தெரியுமா?

நள்ளிரவு 1 - 3 மணிக்கு திடீரென முழிப்பு வருகிறதா? - உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கலாம்!

டீ - இரத்த அழுத்தம்

டீயில் அதிகப்படியாக கஃபின் இருப்பதாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இந்த கஃபின் நம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதுடன் நம் தூக்கத்தையும் பாதிக்கும்.

டீயில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை தேவையற்ற கலோரிகளை அதிகரிக்கும். இதனால் நீங்கள் என்னதான் டயட் இருந்தாலும் அதனால் பயன் கிடைக்காமல் போகலாம்.

மேலும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் நீரிழிவு நோய் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

உடலில் சர்கரையை சமன்படுத்தும் முக்கிய வேலையைச் செய்யும் கணையம் தேநீரில் இருக்கும் அதிகப்படியான சர்கரையால் பாதிக்கப்படும்.

இதனால் தூக்கமின்மை, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, இன்சுலின் குறைபாடு மற்றும் ஓய்வு இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும்.

Tea : உங்கள் 'டீ' உடலுக்கு நல்லதா?
Ojas Drink : உடலுக்கு வலு சேர்க்கும் ஒரு பானம் - வீட்டிலேயே செய்வது எப்படி?

யாரெல்லாம் தேநீர் அருந்தக் கூடாது?

உங்களுக்கு நீரிழிவு நோய்க்கான அறிகுறி இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு நீரிழிவு நோய், உடல் பருமன் வரலாறு இருந்தாலோ டீ குடிப்பதை நிறுத்திவிடலாம்.

ஊட்டச்சத்துகள் குறைபாடு இருந்தால்

உயர் இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருந்தால்

அசிடிட்டி இருந்தால், அடிக்கடி மலச்சிகல் ஏற்பட்டாலும் டீ குடிப்பதை நிறுத்திவிட வேண்டும்.

Tea : உங்கள் 'டீ' உடலுக்கு நல்லதா?
தேநீர் வரலாறு : இதுதான் டீ-யின் கதை |History of Tea

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com