ஹாங்காங்கில் விடலைப்பருவ மாணவர்களுக்குப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பாலியல் கல்வி வழிகாட்டுதல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. அவை பாலியல் தூண்டுதல்களைத் தவிர்க்க மாணவர்கள் பேட்மிட்டன் விளையாடுதல் போன்ற பொழுதுபோக்குகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் திருமணத்துக்கு முன்பான பாலுறவைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றன.
"ஒருவருக்கு பாலியல் கற்பனைகளும் ஆசைகளும் பிறப்பது சகஜம்தான். ஆனால் அதைச் செயல்படுத்தும் முன் ஒன்றுக்கு இரண்டுமுறை சிந்திக்க வேண்டும். நாம்தான் நம் ஆசைகளை ஆள வேண்டுமேத் தவிர, நம் ஆசைகள் நம்மைக் கைக்கொள்ளக் கூடாது." என அந்த 70 பக்க அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கை, 1. காதலுக்கும் உடலுறவுக்குமான தொடர்பு, நெருக்கமான உறவில் கடைப்பிடிக்க வேண்டிய எல்லைகள், 2. பாலியல் தூண்டல்களையும், கற்பனைகளையும் சமாளிப்பதற்கான வழி, 4.மோசமான பாலியல் நடவடிக்கைகளின் விளைவுகள் என நான்கு தலைப்புகளை விரிவாகப் பேசுகிறது.
இயற்கையாக வரும் பாலியல் தூண்டல்களைத் தவிர்ப்பதற்காக பாலியல் சிந்தனைகளை ஏற்படுத்தும் ஊடகங்களைத் தவிர்க்கவும், பாலியல் சிந்தனைகளிலிருந்து மனதைத் திசை திருப்பும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் வழிகாட்டல்கள் இடம் பெற்றுள்ளன.
தவறான பாலியல் வழிமுறைகளால் ஏற்படும் திருமணத்துக்கு முன்பான கர்ப்பம் போன்ற விளைவுகளைக் காதலர்கள் சமாளிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் தூண்டல்களைத் தவிர்ப்பதற்கான நுட்பங்களும் பயிற்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. பாலியல் தூண்டலைத் தவிர்க்கக் குறிப்பிட்ட உடைகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டல்கள் காலாவதியானவை மற்றும் அடக்குமுறைக்கு வித்திடும் என விமர்சிக்கப்பட்டுள்ளன. வளரிளம் பருவத்தினருக்கு விரிவான பாலியல் கல்வியை வழங்குவதற்குப் பதிலாக, ஆரோக்கியமான பாலியல் வளர்ச்சியைக் களங்கப்படுத்துவதாக உள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் ஹாங்காங் எஜுகேசன் பியூரோ, இந்த வழிமுறைகள் மாணவர்களின் உறவுகள் மற்றும் பாலுணர்வு பற்றி "பொறுப்பான முடிவுகளை" எடுப்பதற்கு அதிகாரம் அளிப்பதாகத் தெரிவிக்கிறது. மேலும் இளமைப்பருவத்தின் சிக்கல்களைச் சமாளிக்கவும், சரியான முடிவுகளை எடுக்கவும் இந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அவசியம் என வாதாடுகின்றது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust