வெந்நீர் குளியலும் வெந்நீர் குடிப்பதும் நல்லதா? இதைப் பற்றி 10 benefits, 15 benefits எனச் சொல்லும் பதிவு இது அல்ல. வெந்நீர் குளியல் தற்போது வியாபாரமாகிவிட்டது. மூலிகை எண்ணெய்களை தேய்த்து சுடச்சுட எண்ணெய் குளியல் என்று வியாபார நோக்கிலும் குழப்பமான மருத்துவர்களாலும் சொல்லப்பட்டு வருகின்றன. கேரளத்தில் அந்தக் காலத்தில் ஏன் இன்றும் சிலர் வெளியில் ஆறுகளில் வாய்க்கால்களில்தான் குளிக்கிறார்கள். வீட்டுக்கு பின்னால் நீர் ஓடிக்கொண்டிருக்கும் வகையில் அமைந்தது கேரளா. அதில் பெண்கள் குளிப்பதற்கென படிகளும் உண்டு சில மறைவிடங்களும் உண்டு. ராணிகள் குளிப்பதற்கும் இப்படியான விசேஷ படித்துறைகள் இருக்கும். இதெல்லாம் சில்லென்ற தண்ணீர்தான். வெந்நீர் குளியல் அல்ல. மார்கழி மாதத்திலும் பனி பெய்யும் குளிர்ந்தநாட்களிலும் அதிகாலையிலும் சில்லென்ற குளியலே இருந்தன. வீட்டில் வளர்க்கப்படும் நாய் முதல் காட்டு விலங்குகள் வரை இயற்கையோடு இணைந்துதான் வாழ்கின்றன. நாம் மட்டும் ஏன் வெந்நீர் குளியல் பழக்கத்தில் இருக்கிறோம்? இதனால் நாம் இழப்பவை என்னென்ன?
பயிற்சியிலே நீச்சல் பயிற்சி மிக சிறந்தது. சில்லென்ற தண்ணீரில் குளித்து மகிழ்வதாலும் உடல் முழுக்க தண்ணீர் படுவதால் நம் உடலின் வெப்பம் தணிவதாலும். தமிழ் நீச்சலுக்கு பிறகு மலம் கழிக்கும் உணர்வை நாம் அனுபவித்திருப்போம். கழிவுகளின் வெளியேத்துக்கான நடவடிக்கைதான் அது.
பொதுவாக அடிவயிறு அதிக வெப்பமாக இருப்பது பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துவிடும். பெண்ணின் வயிறு அதிக வெப்பமானதாக இருந்தால் கரு முட்டைகள் உண்டாகுவது கடினம். சிலருக்கு கருமுட்டை உண்டாகாத நிலையும் வரலாம். இதுவே ஆண்களுக்கு விந்து அணுக்கள் உண்டாகாமல் போகலாம். நாம் குளிக்கும் வெந்நீர் குளியலின் வெப்பத்தால் இவற்றின் பலம் குறையும். இது தொடர்ந்தால், விரைவில் ஆற்றலை இழக்கலாம். ஆகவே சாதாரண குளியல்தானே என நினைத்துவிட வேண்டாம். குளியலில் உள்ளது நம் இனவிருத்திக்கான திறவுகோல்.
தமிழ்நாடு வெப்பமான நாடு. இங்கு இந்த வானிலைக்கு வெந்நீர் குளியல் தேவையில்லை. நம் அருகில் உள்ள கேரளத்தில் முன்பெல்லாம் வீட்டில் குளிக்கும் பழக்கமும் இல்லை. எல்லாம் வெளியே… நீர் நிலைகளில்தான் குளியல் எல்லாம். குளிர்ந்த நீர்தான் கேரள மக்கள் பழகியது.
கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, வால்பாறை, இமயமலை, காஷ்மீரில் வேண்டுமெனில் லேசான சூடுள்ள இளஞ்சூடான நீர் தேவைப்படலாம். குளிர்காலங்களில் இதையே நாமும் பின்பற்றலாம். லேசான சூடுள்ள இளஞ்சூடான நீரே போதுமானது. சில ஆய்வுகளில், அதிகமான குளிர் நாடுகளில் குழந்தைப்பிறப்பு குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தையின்மை மட்டுமல்ல இன்னும் சில உடல் தொந்தரவுகளும் வரலாம். செரிமான சக்தி குறையும். உற்சாகம் குறையும். முதுகு வலி, இடுப்பு வலி போன்றவை வரலாம். தண்ணீர் என்றாலே தண் + நீர் என்று அர்த்தம். தண் என்றால் 'குளிர்ச்சி' எனப்படும்.
இயற்கை மருத்துவத்தில் பல மருத்துவர்கள், வெந்நீர் குளியல் ஆபத்தானது என்பார்கள். அவர்கள் பார்த்து சிகிச்சை அளித்த நோயாளிகளில், குழந்தையின்மை பிரச்சனைக்காக வருவோரின் பழக்கத்தில், வெந்நீர் குளியல் பழக்கம் பரவலாக இருந்ததாக சொல்கின்றனர். கர்ப்பப்பை கோளாறுக்கும் வெந்நீர் குளியல் பழக்கத்துக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். கர்ப்பப்பை, மார்பகம் ஆகிய இடங்களில் கட்டிகள் தோன்றியிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆய்வு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறது.
சளி, ஆஸ்துமா, மூட்டுவலி, தோல் நோய்களுக்கும் வெந்நீர் குளியல் ஒருவகை காரணம். சிலர் வெந்நீர்தான் நல்லது எனப் பழக்கப்படுத்தியதன் விளைவு இது. சளி பிடிக்கும் என்று வெந்நீரில் குளிக்கிறார்கள். தண்ணீரில் சளி இருக்கிறதா? உடம்பில் சளி இருக்கிறதா? உடம்பில் கழிவு இருக்கிறது. அதனால், உடம்பில் சளி உருவாகிறது. இதை வெளியேற்ற சில்லென்ற சாதாரண தண்ணீர் குளியல் நமக்கு உதவுகிறது. இது புரியாமல், ஏதோ தண்ணீரில் சளி இருப்பது போல பலரும் பச்சை தண்ணி ஆகாது; அதனால் வெந்நீரில் குளிக்கிறேன் என்கிறார்கள். இது சரியா? சளி என்பது கழிவு. இதை உடலில் பத்திரமாக சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டுமா? அல்லது வெளியேற்ற வேண்டுமா? சளியை வெளியேற்ற வேண்டும். அதுதான் சரி. அதுதான் ஆரோக்கியம். இப்போது சொல்லுங்க… சளியை வெளியேற்ற சாதாரண தண்ணீர் குளியல் தேவையா? அல்லது சளியை சேர்த்து அடக்கி நெஞ்சில் கபமாக மாற்றும் வெந்நீர் குளியல் தேவையா என்று? சில்லென்ற தண்ணீர் குளியல், சளியை முதலில் இளக்கும். பிரித்து வெளியே கொண்டு வரும். இதுதான் நல்லது. இதைத்தான் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இயற்கை வாழ்வியலில் குளியலே ஒரு மருத்துவம் என்பார்கள். 30-40 நிமிடங்கள் பொறுமையாக சில்லென்ற தண்ணீரில் குளிப்பதே வைத்தியம்தான். தினமும் சில்லென்ற தண்ணீரில் குளிக்க வேண்டும். இரண்டு முறைகூட குடிக்கலாம். காலையிலும் மாலையிலும் குளிப்பது நல்லது. கடுமையான வெயில் காலத்தில் மூன்று முறைகூட குளிக்கலாம். குளியல் என்றாலே 15 நிமிடங்களுக்கு மேல் குளிப்பதே குளியல். அப்போதுதான் உடலின் வெப்பம் நீங்கும். தலை முதல் கால் வரை தண்ணீரால் நனைவது மட்டுமே குளியல். தோள்ப்பட்டையில் இருந்து குளிப்பது குளியல் அல்ல.
தலையில் தொடங்கி குளிப்பதால் பலரும் சளி, தும்மல், சைனஸைட்டிஸ், வீசிங், தலைபாரம், தலைவலி வருகிறது என நினைத்து கொள்கிறார்கள். இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான். நமது உடம்பு ஒரு ஸ்பாஞ்ச் போல… இதில் நாம் வாழ்வியல் காரணங்களாலும் உணவுப்பழக்கத்தாலும் உடலில் கழிவுகள் சேர்ந்து தேங்கி கிடக்கும். சளியாக, கெட்ட நீராக, வாயுக்களாக, உப்புக்களாக, கொழுப்புகளாக, ரசாயனங்களாக கழிவுகள் சேர்ந்து கிடக்கும். இவையெல்லாம் நாம் சில்லென்ற தண்ணீரில் குளிக்கையில் நமது உடல் ஸ்பாஞ்சு போல சுருங்கும். அப்போது கழிவுகள் வெளியேற முயற்சிக்கின்றன. கழிவுகள் வெளிவருவதுதான் நன்மை. குளியலால் ஸ்பாஞ்ச் போல உடல் அமுக்கப்பட்டு கழிவுகள் வெளிவரும். காற்றும் வெளியேறும். சளி நீங்கி ரத்தம் சுத்தமாகும். இதனால் அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கும். ஆற்றல் கிடைக்கும். சளி, கொழுப்பு ஆகிய கழிவுகளின் பிசுபிசுப்பு தன்மையால் கர்ப்பப்பையில் இயக்கங்கள் பாதிக்கப்படும். உணவுகளில் மாற்றம் செய்வது, பயிற்சிகளை செய்வது, சில்லென்ற தண்ணீர் குளியல் எடுப்பதால் கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். குளியலால் வரும் நன்மைகள் ஏராளம். இதை இன்னும் அதிகப்படுத்த இடுப்பில் ஈரத்துணி கூட கட்டிக்கொள்ளலாம் சில நிமிடங்களுக்கு...
தண்ணீரில் சளி இல்லை. உடம்பில் சளி உள்ளது. உடம்பில் உள்ள கழிவை சளி உட்பட்ட அனைத்து கழிவுகளும் வெளிவர உதவுவது, சில்லென்ற தண்ணீர் குளியல்.